ரமேஷ் சென்னையின் தலைமை தொலைபேசி நிலையத்தின் இயக்குனருக்கு முன்பு அமர்ந்திருந்தான்.
மிஸ்டர் ரமேஷ் இப்ப ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து நம்ம தமிழ் நாடு முழுவதும் டிஜிடல் எக்ஸசேன்ஜ் தான். போன கால்கள் இப்பவே எடுத்துக் கொடுத்திடலாம். ஆனா வந்த கால்கள் கண்டுபிடிக்கனும்னா இனிமே தான் சர்வீஸ் ஆக்டிவேட் பண்ணவேண்டியதிருக்கும்.
அதுவில்லாம இது ஒரு பொலிடிகல் ப்ராப்ளமா ஆகிடக்கூடாது. ஏற்கனவே நாங்க போன் டாப்பிங்க் பண்றோம் அப்படின்னு எதிர் கட்சிகள் கூச்சல் போடறாங்க.
ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான் ரமேஷ். பல முக்கியமான கேஸ்களில் அவனுடைய பெரும் பங்கு இருந்ததால் அவன் மத்திய மந்திரிகளை நேராக கூப்பிடும் அளவுக்கு செல்வாக்கு வைத்திருந்தான்.
சட்டென்று மத்திய தகவல் தொடர்பு மந்திரிக்கு போன் போட்டு மிகவும் குறைந்த வார்த்தைகளில் விஷயத்தை சொன்னான். அவர் தொலைபேசியை இயக்குனரின் கொடுக்கச் சொல்ல அவரிடம் ஆனணயிட்டார்.
இயக்குனர் பேசிவிட்டு ரமேஷின் செல்பேசியை அவனிடம் கொடுத்தார். ரமேஷ் நீங்க அமேஸிங்க். நாங்களே அவர்கிட்ட பேசறுதுக்கு முன்னாடி பல முறை யோசிப்போம் என்றார் ஆச்சர்யத்துடன்.
சார் இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அதனால தான் என்றான் அடக்கத்துடன்.
அடுத்த 20 நிமிடங்களில் இரண்டு பக்கமும் ஓட்டையுடன் இருக்கும் கம்ப்யூட்டர் அச்சுக் காகிதங்கள் ஒரு பெரிய கட்டாய் அவன் முன் வந்து விழுந்தது.
சார் இதில் தமிழ் நாட்டிலேர்ந்து லண்டனுக்கு கடைசி ஒரு மாசத்தில போன போன் கால். இன்னையிலர்ந்து இன்கம்மிங் காலையும் டிரேஸ் பண்ண சொல்றேன். வேறென்ன வேண்டும் உங்களுக்கு.
சார், இதோட ஸாப்ட் காபி வேண்டும். அப்பத்தான் அனலைஸ் பண்ண சரியாக இருக்கும்.
சரி என்று அருகிலிருந்தவரிடம் கண் அசைத்தார். உடனே அவர் மறைந்து மறுபடியும் தோன்றும்போது ஒரு குறுவட்டுடன் காட்சியளித்தார். அதை பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்து விடை பெற்றான் ரமேஷ்.
தொடரும்…