அழகான இந்தியில் பேசத் தொடங்கினார் பாஸ்கர் பாராஷேர். ரமஷின் மேலதிகாரி.
ரமேஷ் வளர்ந்த நாடுகள் நம் நாட்டில் அதிகம் உளவு செய்யும் பகுதிகளை அறிந்திருக்கறீர்களா.
ஆமாம் சார். நாட்டில் எங்கே பெட்ரோல் கிடைக்கிறது என்பது நம் அரசாங்கத்தைவிட முதலில் அவர்களுக்கு கிடைக்கிறது. அது போல அணு ஆயுத சோதனைகள், வைரம், தங்கம், ராணுவ ஒப்பந்தங்கள், அரசியல் மாற்றங்கள், மதவாதத்தினால் மாற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்கள், எங்கெல்லாம் தீவிரவாதம் ஊடுருகிறது என்றெல்லாம்.
சரி தான் ரமேஷ். அந்த பட்டியலில் தமிழக வரலாறையும் சேர்த்துக்கோங்க.
என்ன.
ஆமாம். களப்பிறர்களை பற்றி கேள்விப்படிருக்கீங்களா.
ஹாஹா. கள்ளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கேன்.
இவங்களும் கள்ளர்கள் தான்.
அப்படியா.
ஆமாம். கள்ப்பிறர்களை பற்றி ஆராயச்சி பண்ணப்போன சென்னை அரசாங்க கல்லூரியை சேர்ந்த ஒரு குழு அதிர்ச்சியான விஷயங்களை கொண்டுவந்திருக்காங்க என்று முழு கதையையும் கூறினார்.
நீங்க உடனே தஞ்சை போகனும். போனால் சில கொலைகளை தடுக்கலாம். வெளிநாட்டிலிருந்து இன்னும் ஆதிக்கம் செய்யம் சக்திகளை கண்டு பிடிக்கலாம். அழிக்கலாம். தடுக்கலாம். தயாரா என்றார்.
அவசியம் சார் என்று சொல்லிவிட்டு அவர் கொடுத்த ரிப்போர்டை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அங்கிருந்த ஒரு ஓட்டுனரிடம் வீட்டில விட்டுடுங்க என்று சொல்லி ஜீப்பில் ஏறிக் கொண்டான்.
வீட்டில் வந்து குளித்து முடித்து சாப்பிட்டான். ஜெயா வீட்டிலில்லை. வேலைக்கு சென்றிருந்தாள்.
அவளுடைய செல்பேசியை அழைத்தான்.
பெரிய கோவில் பார்தத்தில்லை. ஆறுமுகமாகலாம். நவரசமாகலாம் என்றான் பீடிகையுடன்.
இது போல பேசுவதில் இருவரும் வல்லவர்கள். தஞ்சை போகவேண்டும் ஆறு அல்லது ஒன்பது நாள் ஆகலாம் என்பதையே அப்படிச் சொன்னான்.
பச்சிலை தேய்த்து பக்குவமா வைச்சிருக்கேன். என் தாலியையும் எடுத்துக்கிட்டு போங்க என்றாள்.
சரி. நீ ஜாக்கிரதை. செல்லில் அலைய வேண்டாம் என்றான்.
அலையலை. என்ன விவகாரம் என்றாள்.
கத்தியில்லை ரத்தம் இல்லை. ஆனால் யுத்தம் ஒன்று வருது. பழைய பேனா ஏதோ தகறாறு பண்ணுது என்றான்.
இன்னும் விவரமா சொன்னா நானும் கண்ணை சிவப்பாக்கிப்பேன்.
களத்தில பிறர் இருந்தா ஒரு கறுப்பு வரலாறு உருவாகும் என்றான்.
ஒ. தெரியாத விஷயம் தான். காகிதங்களை கசக்கனும்.
ஆமாம்.
சரி. பாத்துக்கோங்க என்றுவிட்டு வைத்தாள்.
அவர்கள் பீடிகையில் முடியை பிய்த்துக் கொண்டவர்களுக்கு இதோ எளிய தமிழில் அவர்கள் பேசியது.
பெரிய கோவில் பார்தத்தில்லை. ஆறுமுகமாகலாம். நவரசமாகலாம் என்றான் பீடிகையுடன்.
தஞ்சை போகவேண்டும் ஆறு அல்லது ஒன்பது நாள் ஆகலாம்.
பச்சிலை தேய்த்து பக்குவமா வெச்சிருக்கேன். என் தாலியையும் எடுத்துக்கிட்டு போங்க என்றாள்.
துணிகள் அயர்ன் பண்ணி வெச்சிருக்கேன். துப்பாக்கியையும் எடுத்துக்கிட்டு போங்க.
சரி. நீ ஜாக்கிரதை. செல்லில் அலைய வேண்டாம் என்றான்.
செல் போனில் பேச வேண்டாம்.
அலையலை. என்ன விவகாரம் என்றாள்.
சரி. செல் போனில் பேச மாட்டேன். எதுக்காக போகறீங்க.
கத்தியில்லை ரத்தம் இல்லை. ஆனால் யுத்தம் ஒன்று வருது. பழைய பேனா ஏதோ தகறாறு பண்ணுது என்றான்.
கொலைகள் இல்லை. ஆனால் வரலாறு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களோட விவகாரம்.
இன்னும் விவரமா சொன்னா நானும் கண்ணை சிவப்பாக்கிப்பேன்.
இன்னும் விவரமா சொன்னீங்கன்னா நானும் படிச்சி ஆராய்ச்சி செய்வேன்.
களத்தில பிறர் இருந்தா ஒரு கறுப்பு வரலாறு உருவாகும் என்றான்.
களப்பிறர் கறுப்பு வரலாறு சம்பந்தப்பட்ட விஷயம்.
ஒ. தெரியாத விஷயம் தான். காகிதங்களை கசக்கனும்.
அப்படியா. தெரியாத விஷயம். புத்தகங்களை படிச்சி தெரிஞ்சிக்கனும்.
தொடரும்…