மத்திய உளவுத்துறை அதிகாரி ரமேஷ் கடிகாரத்தை பார்த்தான். 45 நிமிடம் ஓடியிருந்தான். வழக்கமான நேரம் தான். ஆனால் வழக்கமான தூரம் இல்லை. மிக தொலைவில் வந்திருந்தான். செல்பேசியை எடுத்து மனைவி ஜெயாவை அழைத்தான்.
பிக் மீ அப் என்று விட்டு வைத்தான்.
மெதுவாக கடலோரத்தில் இருந்த மணல்வெளியில் தன் வெற்று கால்களை பதித்தான். நீலாங்கரை கடல் அன்று மிக அழகாக நீலமாக காட்சியளித்தது.
செல்பேசி ஒலித்தது.
டீக் ஹெய். தீஸ் மின்டோமே பஹூஞ்ச் தான் ஹூன் என்று விட்டு கையடக்க தொலைபேசியை கழுத்தில் தொங்கவிட்டான்.
அழகான மனைவிகள் அல்லது திருமதி அழகிகள் என்று போட்டி வைத்தால் சென்னையில் ஜெயா முதலாக வந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அழகு, எளிமை, புத்திசாலித்தனம் என்று அனைத்திலும் 100 மார்க். வேகமாக டாட்டா ஸபாரியை ஓட்டிக் கொண்டு கடற்கரை சாலையில் தார் ரோடு இருக்கும் வரை கடலுக்கு அருகில் சென்று நிறுத்தினாள்.
கெட் இன் என்றாள் வாயை மட்டும் அசைத்து ஓசையில்லாமல்.
சட்டென்று கதைவை திறந்து உள்ளே நுழைந்தான்.
ஒரு குடுவையில் இருந்த க்ளுகான்-டியை எடுத்து நீட்டினாள் ஜெயா.
வாங்கி குடித்துவிட்டு துண்டெடுத்து முகத்தை துடைத்துக் கொண்டான்.
ஆபீஸ் என்றான்.
வாட்.
எஸ். அவசரமா வரச் சொல்லியிருக்காங்க.
இந்த டிரெஸ்லயா.
ஆமா.
யூ ஆர் ஸ்டின்கிங் லைக் எ ராட்டன் எக் என்றாள் சிரித்தப்படியே.
ஆம் இந்த அழுகிய முட்டயை யாரோ இன்னிக்கு ஆம்லெட் போடப்போறாங்க.
லக்கி தெம் என்றபடியே சென்னை சாலைகளில் லாவகமாக வண்டியை ஓட்டிச் சென்றாள்.
லா மெரிடியனுக்கு அருகில் இருந்து உளவுத்துறை அலுவலகத்தில் வண்டியை நிறுத்தினாள்.
அவன் இறுங்கவதற்கு முன் டாஷ் போர்டில் இருந்த அவனுடைய துப்பாக்கியை எடுத்து நீட்டியவாறு யூ வுட்டுன்ட் வான்ட் கோ அவுட் வித்அவுட் திஸ் என்றாள்.
ஆம். இது தான் உன் தாலி தொங்கிக் கொண்டிக்கிறதுக்கான அத்தாட்சி என்றான் கண்ணடித்துக் கொண்டே.
இது போல பல துணுக்குகளை முன்பே கேட்டுவிட்டதால் கையை விரித்து உதறி அலட்ச்சியமாக வண்டியை நகற்றினாள்.
வண்டியை ஓட்டிச் சென்றவள் நினைவலைகளில் பின்னால் சென்றாள். முதுகலை பாரென்ஸிக் சைன்ஸ் படித்துக் கொண்டிருந்த அவள் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த செமினாருக்கு சென்றாள். அதற்கு பிறகு அவர்களை ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போஸ்ட்மார்டம் நடப்பதைப் பற்றி காட்டப்போவதாக இருந்தது.
10ம் அறைக்குள் நுழைவதற்கு பதிலாக 11ம் அறைக்குள் நுழைந்தவள் அங்கு குண்டடி பட்டு கிடந்திருந்த ரமேஷை பார்த்தாள். மரக்கட்டைபோல
படுத்திருந்த ரமேஷை பார்த்தும் அது தான் பிரதேம் என்று நினைத்தாள். மற்றவர்கள் வரும் வரை அங்கே காத்திருக்கலாம் என்று உலாற்றியவள் பிரேததத்தை பார்க்கலாம் என்று அருகில் வந்த அவனை உற்றுப் பார்த்தாள்.
அவன் தூக்க மருந்திலிருந்து மீண்டவன் மெதுவாக கண்விழித்து பார்க்க அவனுடயை முகத்திற்கு இரண்டு அங்குல தூரத்தில் இருந்தவள் பிரேதம் கண் திறப்பதைப் பார்த்து ஐயோ அம்மா என்று அலற மருத்தவர்களும் நர்ஸுகளும் ஓடி வந்து பார்க்க ஒரே கூத்தாகிவிட்டது.
அடுத்த சந்திப்பு நீலாங்கரை கடற்கரையில் தான். வழக்கமாக அவனை அழைத்து செல்ல வரும் ரமேஷின் தம்பி ரஞ்சித் அன்று தாமதமாக வர, ஓடிக் களைத்து தன் வண்டியில் ஏறச் சென்ற ஜெயா அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
யாருக்காகவாது காத்திருக்கீங்களா என்றாள்.
ஆம் தம்பிக்காக என்று சொல்ல நினைத்தவன் சற்றே வம்பு செய்யலாம் என்று நினைத்து
ஆம். என் வாழ்கையில் உங்களைப் போன்ற ஸ்மார்ட் பெண் வருவாளா என்று காத்திருக்கிறேன் என்றான் சிரித்தப் படியே.
ஹாஹா என்ன பகல் கனவா என்றாள் முறைத்தப்படியே.
சட்டென்று தன் கால்சட்டையிலிருந்து துப்பாக்கியை எடுத்த அவளை அணைத்துப் பிடித்து என்னை கல்யாணம் பண்ணிக்கலை உங்களை சுட்டுடுவேன் என்றாள்.
என்ன விளையாட்டு இது. என்றாள் காட்டமாக.
சாரி மிஸ். ஐயாம் ரமேஷ். சீஃப் இன்வெஸ்டிகேடிங் ஆபீஸர் சென்டரல் க்ரைம் ப்ராஞ்ச் என்று ஐடி கார்ட்டை எடுத்துக் காட்டினான். இப்போதைக்கு என்னை அடையாறுல விட முடியுமா என்று கேட்டான் கெஞ்சலாக. ஏறுங்க என்று வண்டியில் ஏற்றிக் கொண்டவள் இன்னும் 2-3 மணி நேரம் வரை எங்குமே போகாமல் சென்னையை சுற்றி வந்தனர்.
என்ன படித்தீர்கள், அப்பா அம்மா, என்ன நிறம் பிடிக்கும் என்ன சாப்பாடு பிடிக்கும் என்ன உடைகள் பிடிக்கும் எந்த சினிமா பிடிக்கும் எதனால் அன்று ரமேஷ் குண்டடி பட்டுக் கிடந்தான் என்று தொடங்கி உலக விஷயங்கள் அனைத்தையும் பேசினார்கள். காதல் வயப்பட்டார்கள். இரண்டற கலந்தார்கள்.
அடையாறு மத்திய கைலாஷ் தாண்டி ஒரு யு வளைவு எடுத்து சிந்தூர் பிரஸ்டிஜ் பாயிண்ட் அபார்ட்மென்டில் வண்டியை நிறுத்தினாள்.
மை கிரெஸி மாச்சோ மான் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
தொடரும்…