Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் » இரண்டாம் தேனிலவு – 44
இரண்டாம் தேனிலவு – 44

இரண்டாம் தேனிலவு – 44

“அமுதா… நீ இந்த அளவுக்குப் பேசுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. நானும் பழம் கனிஞ்சு, மடியில விழும்னு காத்திட்டு இருந்தா… அது நடக்கற மாதிரியே தெரியல. இன்னிக்குப் பழத்த சாப்பிட்டுற வேண்டியதுதான்.”

குணசீலனின் பேச்சு அமுதாவுக்கு ஆரம்பத்தில் புரியவே இல்லை. அவன் பேச்சின் அர்த்தம் புரியாமல் பயத்தில் விழிகளை உருளவிட்டாள்.

“என்னடி… பாக்குற. இப்போ நம்ம ரெண்டு பேருக்கும் ஃபஸ்ட் நைட் நடக்கப் போகுது. நீ ஒத்துழைக்கலன்னாலும் அது இன்னிக்கு இப்போ நடந்தே தீரும். நீ கத்திக் கூப்பாடு போட நினைச்சா… உன்னை அடிச்சிப் போட்டுட்டு, அந்த மயக்கத்துலகூட உன்னை அனுபவிக்காம விடமாட்டேன். அப்படியொரு சமாச்சாரம் நடந்தால்தான் நான் சொல்றத நீ கேட்ப. இல்லாட்டி, வேற எவனையாவது இழுத்துட்டு ஓடினாலும் ஓடிடுவ.”

குணசீலனின் பார்வை ஒரு மாதிரியாக இருந்ததால், பசி கொண்டு அழையும் புலி முன்பு தனித்து விடப்பட்ட பெண் மானின் நிலைக்கு ஆளானாள் அமுதா.

“அப்படியெல்லாம் என்னைப் பார்க்காத. ஆரம்பத்துல இருந்தே உன்னை எனக்குப் பிடிக்கல. உன்னோட டேஸ்ட் வேற, என்னோட டேஸ்ட் வேற. தயவு செஞ்சு என்னைப் புரிஞ்சிக்க. நாம நல்ல பிள்ளைகளா பிரிஞ்சிடலாம். தேவைப்பட்டா டைவர்ஸ்க்குக் கூட அப்ளை பண்ணிக்கோ. நான் கையெழுத்துப் போட்டுக் குடுத்துடுறேன்.”

“ஓ… நீ அந்த அளவுக்கு வந்துட்டியா? இதுக்கு மேலேயும் நான் அமைதியா உன் பேச்சைக் கேட்டுகிட்டு நடந்தா, நான் கல்யாணம் பண்ணினதுக்கே அர்த்தம் இல்லாம போயிடும்.”

“கல்யாணம்ங்கறது ஒவ்வொருத்தரோட வாழ்க்கையிலேயும் நடக்கற புனிதமான காரியம். அப்படிப்பட்ட கல்யாணம் பற்றிப் பேச உனக்கு எந்த அருகதையும் இல்ல.”

“ஆமான்டி… தொட்டுத் தாலி கட்டிட்டு, ஃபஸ்ட் நைட் உன்னோட அனுமதியோடயே நடக்கணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் இல்லீயா… அதனால, நீ இன்னும்கூட பேசுவ!”

“எப்போ பார்த்தாலும் உன்னோட பேச்சு ஃபஸ்ட் நைட்டுன்னு அதைப் பற்றியே சுத்திசுத்தி வருதே… அதைத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா?”

“நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல. இப்போ, ஃபஸ்ட் நைட் பற்றி பேசாம, அறுபது வயதுக்கு அப்புறமா பேச முடியும்?”

“சுற்றி வளைச்செல்லாம் எனக்குப் பேசத் தெரியாது. உண்மையைச் சொல்லு. என்னை ஏன் நீ கட்டிக்கிட்ட?”

“என்னடி… புதுசாக் கேள்வி கேட்குற?”

“தைரியம் இருந்தா… உண்மையைச் சொல்லு. நான் அதுக்குப் பதில் சொல்றேன்.”

“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நான் ஏன்டி பொய் சொல்லணும்? அழகான கிராமத்துப் பொண்ணை கட்டிக்கணும்ங்கறதுதான் என்னோட ப்ளான். நாட்டு நடப்பு கூடத் தெரியாம இருக்கற அப்படிப்பட்ட கிராமத்துப் பொண்ணு மனைவியா வந்தால்தான், சென்னைக்கு வந்த பிறகு அவளை வீட்டு வேலைக்காரி மாதிரி வெச்சுக்கிட்டு, எனக்குப் புடிச்ச பொண்ணுங்களோட அடிக்கடி ஜாலியா இருக்க முடியும்னு நினைச்சேன். அதனாலதான் உன்னை ஒ.கே. பண்ணினேன். என்னோட கேர்ள் ப்ரெண்ட்ஸ்களுக்கு இணையா நீ அழகா இருக்கலாம். ஆனா, உன்கிட்ட செக்ஸி அப்ரோச் இல்ல. அதுக்காக ட்ரை பண்ணத்தான், ஜீன்ஸ் டி – ஷர்ட் உனக்கு வாங்கித் தந்தேன். இந்த ட்ரெஸ்ஸை நீ போட்ட பிறகு உண்மையிலேயே நீ செக்ஸியா தெரிஞ்ச. அப்படி நீ தெரிஞ்ச படங்களைத்தான் என்னோட ஃபேஸ்புக்ல போட்டுவிட்டேன். இதுல என்ன தவறு?”

குணசீலன் இப்படிச் சொன்னதும் ஆவேசமாக குறுக்கிட்டுப் பேசினாள் அமுதா.

“போதும் உன்னோட விளக்கம். இந்த நிமிஷத்துக்கு மேலேயும் நான் உன் பொண்டாட்டியா இருந்தா… அது எனக்குத்தான் அவமானம். என் புருஷன் எப்படியெல்லாம் என்னை வெச்சிருக்கணும்னு நான் கனவு காணலதான். ஆனா, இப்படிக் கீழ்த்தரமான ஒருத்தனுக்கு மனைவியா வாய்ப்பேன்னு நெனைச்சுக் கூடப் பார்க்கல. உனக்கு எனக்கும் எந்த விதத்துலயும் பொருத்தம் இல்ல. அதனால நாம பிரிஞ்சிடுவோம். உனக்குப் புடிச்ச வாழ்க்கையை நீயே தேர்ந்தெடுத்துக்கோ. என்னால உன் கூட ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது…” என்ற அமுதா, தன்னுடைய லக்கேஜை எடுத்துக் கொண்டு லாட்ஜ் அறையில் இருந்து வெளியேற முயன்றாள். அவளைக் குறுக்கே புகுந்து தடுத்தான் குணசீலன். அக்கணமே வெறிப்பிடித்தவன் போல மாறினான்.

அமுதாவின் கையில் இருந்த சூட்கேஸை தட்டிவிட்டவன், அவளை நீளமாகக் கிடந்த பெட்டில் தள்ளினான். சட்டென்று அமுதா அணிந்திருந்த சேலையை அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் உருவினான். அவன் சேலையை உருவிய வேகத்தில் பெட்டின் ஓரமாக சுருண்டுபோய் விழுந்தாள் அமுதா. அவளது சேலை குணசீலனின் கையில் இருந்தது. அதைத் தனது கால்களுக்குக் கீழே போட்டு மிதித்தான்.

சட்டென்று தனது இரு கைகளையும் மார்புப் பகுதிக்கு கொண்டு சென்று, மானத்தை மறைக்கப் போராடினாள் அமுதா. ஆனால், குணசீலன் விடவில்லை. அவளது கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தான். எவ்வளவோ முயன்றும் அமுதாவுக்குத் தோல்வியே கிடைத்தது. அவளது மார்பகங்களுக்குத் தற்காலிகப் பாதுகாப்பு தந்த அவளது கைகளை எளிதாகப் பிரித்தான்.

தனது கற்பைக் காப்பாற்ற அடுத்த ஆயுதத்தைக் கையில் எடுத்தாள் அமுதா. சற்று நேரத்துக்கு முன்பு வரை அவனிடம் ஆவேசமாக வாதிட்டவள், அப்படியே அமைதியாகி அவனிடம் மன்றாடினாள்.

“தயவுசெஞ்சு என்னை விட்டுடு. நீ வேற என்ன சொன்னாலும் செய்யுறேன். ஆனா, என்னை மட்டும் தர முடியாது. அதையும் மீறி என்னை அடைஞ்சே தீருவேன்னு முயற்சி பண்ணினா… நான் தற்கொலை பண்ணிப்பேன்.”

அந்த நேரத்திலும், கலங்கிய கண்களுடன் அவனை மிரட்டிப் பார்த்தாள். ஆனால், குணசீலனின் கண்களை மோகம் மறைத்தது. அவள் கெஞ்சுவது அவன் காதுகளுக்குக் கேட்கவே இல்லை. அவளது உடல் அழகு மாத்திரமே அவனுக்கு பிரதானமாக தெரிந்தது.

மறுபடியும் அவள் மீது கை வைக்க முயன்றான். அவள் திமிரினாள். இந்தமுறை அவனது பிடி பலமாக இருந்தது. அவன் இழுத்த வேகத்தில் அமுதா அணிந்திருந்த ஜாக்கெட்டின் பின்பகுதி அப்படியே கிழிந்து அவன் கையில் வந்தது. அந்த வேகத்தில், அவள் அணிந்திருந்த சிவப்புநிற பிராவும் பதற்றத்தில் ஓரமாக பயந்து விலகிப் போனது.

தன்னைக் குணசீலன் வேட்டையாடப் போகிறான் என்பது அமுதாவுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. அவனிடம் இருந்து எப்படியாவது தப்பித்து ஆக வேண்டுமே! தன்னைத் தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று யோசித்த வேளையில், அங்கிருந்த மேஜையில் ஆப்பிள் நறுக்கப் பயன்படுத்திய கத்தி இருந்தது. அதைப் பாய்ந்து சென்று எடுத்து விட்டாள்.

“என்கிட்ட வராதே. மீறி வந்தால் இந்தக் கத்தியால உன்னை குத்திடுவேன். இப்பவே நீ வெளியே போயிடு. இப்போதும் கூட நான் உன்னை மன்னிச்சிடுறேன். இங்கே நடந்ததை நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். நீ உன்னோட ஊருக்கேப் போயிடு. நான் என் வழியைப் பார்த்துக்கறேன்.”

“என்னடி… நீ கத்தியைக் காட்டி மிரட்டினா நான் பயந்துடுவேனா? எங்கே… என்னைக் குத்துப் பார்க்கலாம்?” என்ற குணசீலன் அவளை நெருங்கி வந்தாள். அமுதா, தன்னால் முடிந்தவரை பின்னோக்கிச் சென்றாள். ஆனால், அவன் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. சட்டென்று அவள் கையைப் பிடித்து விட்டான். அவள் கையில் இருந்த கத்தியின் கைப்பிடி அவன் வசம் சிக்கிவிட்டது. அவன் வேகமாக இழுத்த வேகத்தில் அவன் கைக்கே வந்துவிட்டது கத்தி.

இப்போது அமுதாவிடம் எந்த ஆயுதமும் இல்லை. அந்த அறையில் இருந்து வெளியே ஓடுவதுதான் அவளுக்குப் பாதுகாப்பு. அதனால், தன்னுடையை நிலையையும் பொருட்படுத்தாது ஓடத் துவங்கினாள்.

அவளை வெளியே விட்டால் தனக்குத்தான் பிரச்னை என்பதால்… கையில் இருந்த கத்தியை, அது எங்கே விழுகிறது என்றுகூட பார்க்காமல் அவளை துரத்தினான் குணசீலன். இரண்டு முறை பெட்டைச் சுற்றிச்சுற்றி வந்தவள், மூன்றாவது முறை பெட் மீது ஏறி, கதவை திறந்து கொண்டு வெளியேற முயற்சித்தாள். ஆனால், அதற்கு முன்பாக ஓடிப்போய்க் கதவை பூட்டிக் கொண்டான் குணசீலன்.

அமுதாவின் நிலை பரிதாபகரமாகிப் போனது. மானத்தை மறைக்க முடியாமல் தோற்றுப் போய், தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினாள். அவள் பின்னோக்கி நகர, இவளை வீழ்த்தியாயிற்று. இனி, ருசிக்கலாம் என்கிற மனநிலையில் அவளை காமவெறியோடு நெருங்கினான் குணசீலன். திடீரென்று அமுதா, தப்பிப்பதற்காக இடது பக்கம் வேகமாக விலக, அவளைப் பிடிப்பதற்காக இவனும் கால்களை வேகமாக எடுத்து வைக்க… இரண்டு பேருமே எதிர்பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது.

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top