மினா தன்னுடைய காதலரைப் பற்றிய அந்தரங்கமான விஷயங்களை தன்னுடைய தோழி லூசியுடன்தான் எப்போதும் பகிர்ந்து கொள்வது வழக்கம். லூசியும் தன்னுடைய காதலர் டாக்டர் ஆர்தரைப் பற்றி பேசுவதால் இருவரின் பேச்சிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அவர்கள் இதற்காக அவ்வப்போது கடற்கரைப் பக்கம் செல்லுவ துண்டு. அந்தக் கடற்கரையை ஒட்டி ஒரு மாதா கோவிலும் கல்லறையும் தென்படும். இந்தக் காட்சி மிக ரம்மியமாக அவர் களுக்குத் தோன்றுவதால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப் பார்கள். ஒருமுறை அப்படி அவர்கள் கடற்கரையில் ... Read More »
Monthly Archives: March 2015
ரத்த காட்டேரி – 16
March 17, 2015
அதைத் திறக்கும் சாவி பிரபு அறையில்தான் இருக்க வேண்டும். ஜன்னல் வழியாக எப்படியாவது பிரபுவின் அறைக்குள் சென்றாக வேண்டும். ஒருவேளை இந்த முயற்சியில் பிரபு தன்னைக் கொல்வதாக இருந்தால்கூட பரவாயில்லை. இந்த மரணாவஸ்தை யிலிருந்து உடனடியாக மீள வேண்டும் என்று முடிவு செய்தார். கருங்கல் சுவர் வழியாக ஊர்ந்து இறங்கினார். பிரபுவின் அறையை அடைந்தபோது அந்த அறை காலியாக இருந்தது. அந்த நேரத்தில் டிராகுலா பிரபு எங்கே போயிருப்பார் என்று யூகிக்க முடிந்தது. ஜோனாதன் நேராக மயானப் ... Read More »
ரத்த காட்டேரி – 15
March 17, 2015
அதே சமயம் மிகுந்த பரபரப்புடன் ஜோனாதன் தன்னுடைய பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு அவரது அறையிலிருந்து வெளியேறி சற்றுத் தொலைவு வந்தபோது, அவருக்கு முன்பாக ஏராளமான ஓநாய்கள் உரத்த சத்தமுடன் ஊளையிட்டதைக் கண்டு அப்படியே அதிர்ந்துபோய் நின்றுவிட்டார். இது முழுக்க முழுக்க டிராகுலா பிரபுவின் ஏற்பாடுதான் என்பது விளங்கியது. அதன்பின்பு எதுவுமே நடக்காததைப்போல முன்னால் சென்ற டிராகுலா பிரபு அந்த கருங்கல் கோட்டையின் தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறந்தபோது, ஓநாய்கள் கூட்டம் கூட்டமாக கதவின் முன்புறம் அணிதிரள ஆரம்பித்தன. ... Read More »
ரத்த காட்டேரி – 14
March 17, 2015
மற்றவர்கள் யாவரும் விழித்திருக்கும் பொழுதுகளில் தான் உறங்குவதும் அவர்கள் உறங்கும் நேரத்தில் தான் விழித்திருப்பதும் டிராகுலா பிரபுவின் பழக்கமாக இருந்தது. பகல் நேரத்தில் டிராகுலா பிரபுவை எத்தனை முயன்றும் பார்க்க முடியவில்லை. எப்படியாவது அவரை பகல் நேரத்தில் அவரது அறைக்குள் நுழைந்து பார்த்துவிட வேண்டும் என ஜோனாதன் முடிவு செய்தார். டிராகுலா பிரபு ஜன்னல் வழியாக பல்லி மாதிரி ஊர்ந்து செல்வாரே- அதுபோலவே தானும் செல்ல வேண்டியதுதான். ஆபத்தான முயற்சிதான் அது என்றாலும், அதனை எப்படியாவது செயல்படுத்திப் ... Read More »
ரத்த காட்டேரி – 13
March 17, 2015
மாடிப்படிகள் வழியே வேகமாக ஏறிச் சென்று, மேலே இருந்து அந்த குதிரை வண்டிக்காரர்களை சத்தம் போட்டு அழைத்தபோது, அவர்கள் அவரைப் பார்த்து தங்களுக்குள் கேலியாக சிரித்துப் பேசிக் கொண்டனர். அந்த வண்டி நிறைய நீண்ட சதுரப் பெட்டிகள் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் குதிரைகள் அவற்றை மிகவும் சுலபமாக இழுத்துச் சென்ற தன்மையிலிருந்தே அவையத்தனையும் காலிப் பெட்டிகள் என்பது முடிவாயிற்று. அந்தப் பெட்டிகள் எல்லாவற்றையும் அந்த கோட்டையின் பின்புறத்திலுள்ள முற்றப்பகுதியில் அவர்கள் அடுக்கி வைப்பதையும் ஜோனாதன் பார்த்தார். ... Read More »
ரத்த காட்டேரி – 12
March 17, 2015
தன்னுடைய பாக்கெட்டைத் தடவிப் பார்த்தபோது டைரி மற்றும் சில பொருட்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து நிம்மதியடைந்தார். அந்த டைரியை டிராகுலா பிரபு பார்த்திருந்தால் கண்டிப்பாக அதை அழித்திருப்பார். அந்த டிராகுலா கோட்டையைப் பற்றி தன்னுடைய குறிப்புகளைப் பார்த்திருந்தால் ஒருவேளை தன்னுடைய உயிருக்குக்கூட ஆபத்தை உண்டாக்கியிருக்கலாம். எப்படியோ உயிர் தப்பியது அதிர்ஷ்டம்தான். இரவு முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக கோர்வையாக நினைத்துப் பார்த்தபோது, அந்த அழகிகள் பற்றிய நினைவு மனதை அலைக்கழித்தது. இரவில் பார்த்த அந்த சம்பவம் ... Read More »
ரத்த காட்டேரி – 11
March 17, 2015
கன்னங்கரிய விழிகளும் புறாவின் மூக்கைப் போன்று நீண்டு வளைந்த மூக்கையும் கொண்டு மாநிறத்தில் இரண்டு பெண்கள் தோற்றமளித்தனர். மற்றொருத்தி வீனஸ் தேவதைபோல அப்படி யொரு அழகியாகத் தென்பட்டாள். பவளம் போன்ற அதரங்களும் பளபளக்கும் பளிங்கு வரிசைப் பற்களுமாக அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் அவருக்குள் ஏதோ ஒரு விசை இழுக்க, தன்னை அவர்கள் முத்தமிடமாட்டார்களா என்று ஏங்கினார். அப்போது தன்னுடைய நேசத்திற்குரிய காதலி மினாவைக்கூட அவர் மறந்துவிட்டார். அந்தப் பெண்கள் இவரைப் பார்த்து அச்சமயம் வாய்விட்டுச் சிரித்தனர். அந்தச் ... Read More »
ரத்த காட்டேரி – 10
March 17, 2015
அதன்பிறகு அந்த பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் ஏறி கோட்டையின் மேல்புறத்தை அடைந்தார். மேலே இருந்து பார்த்தபோது கோட்டைக்கு வெளிப்புறம் கரிய இருள் சூழ்ந்து காணப்பட்டது. ஆயினும் அங்கே இருக்கும் சுதந்திரம் இங்கே இல்லை என்பது மனதை நெருடியது. எதேச்சையாக கோட்டையின் இன்னொருபுறம்நோக்கி உற்று கவனித்தபோது, நிலவின் வெளிச்சத்தில் தெரிந்த அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. அந்த மாடிப்பகுதியின் தெற்குப் பக்கமாக ஏதோ ஒன்று அசைவதுபோலத் தெரிந்தது. அந்த இடம் டிராகுலா பிரபுவின் அறையிலிருந்து முன்புற முற்றத்தை நோக்கிய பகுதிதான் ... Read More »
ரத்த காட்டேரி – 9
March 17, 2015
அவரது கையானது எதேச்சையாக ஜோனாதன் கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலையில் பட்டுவிட்டது. விறுக்கென தீயைத் தொட்டதுபோல கைகளைப் பின்புறமாக இழுத்துக் கொண்டார். அதன்பின்பு மெல்ல தன்னை இயல்பு நிலைக்கு கொண்டுவர டிராகுலா பிரபு முயன்றார். “எப்பொழுதும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். காயம் ஏற்படாமல் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். வீண் ஆபத்தை அது விளைவிக்கக் கூடும்” என்று யதார்த்தமாகப் பேசுவது போல டிராகுலா பிரபு பேசினார். அதே சமயம் சட்டென்று அந்த ஜன்னல் கம்பியில் ... Read More »
ரத்த காட்டேரி – 8
March 17, 2015
இங்கிலாந்தில் டிராகுலா பிரபு வாங்க முடிவு செய்திருந்த அந்த எஸ்டேட், பேர்பிளீஸ் என்ற இடத்தில் ஏறத்தாழ இருபது ஏக்கர் பரப்பைக் கொண்டது. கருங்கல் சுவர்களால் நான்குபுறமும் கட்டப்பட்ட அந்த இடத்திற்குள் “ஃபோர் ஃபேசஸ்’ என்ற புராதன காலத்து பங்களா ஒன்று இருந்தது. அந்த பங்களாவையும் நிலப்பகுதியையும் வெவ்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து ஜோனாதன் அவருக்காகக் கொண்டு வந்திருந்தார். இங்கிலாந்திலுள்ள தனது நண்பர் ஹாக்கின்ஸுக்கு கடிதம் எழுதி இதற்குரிய ஏற்பாட்டினைச் செய்திருந்தார் டிராகுலா பிரபு. அந்த இடத்தை முறைப்படி ... Read More »