Home » 2015 » March (page 26)

Monthly Archives: March 2015

பேய்கள் ஓய்வதில்லை – 33

பெரும் பாறைக்கற்கள் தன் மீது பறந்து வருவதைக் கண்டு மிரண்டு கிரானைட் குவாரி இருக்கும் திசையில் ஓடினான் ரெட்டி. செல்வியின் மீது இருந்த ப்ரவீணா  அதைக் கண்டு கெக்கலித்து சிரித்தாள். ஏய் ரெட்டி! என்னை எப்படி கதற கதற கற்பழித்து கொன்றாய்? உன் பணத்திமிரும் ஜாதி வெறியும் இப்போது எங்கு போயிற்று! முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள்!  என்று கத்தினாள். ரெட்டியால் ஒன்றும் பேச முடியவில்லை! அவன் நிற்கும் போது மேலே பறந்து வந்த கற்கள் அவனை ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 32

அவனுக்கு சாவு மணி அடித்து விட்டது என்று எக்காள சிரிப்புடன் சொன்ன செல்வியை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ். அதே நேரம் கொண்டபள்ளியின்  மிகப்பெரிய வீடு ராமையா ரெட்டியின் வீட்டில் ஒரே அதகளமாக இருந்தது.  ஏமய்யா!  ஸ்வாமி காரு ஓச்சினாரா! என்று பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் வீட்டின் முன் அந்த பழைய அம்பாசிடர் வந்து நின்றது. அதிலிருந்து சுவாமிஜி மெல்லிய சிரிப்புடன் இறங்கினார். வாங்கோ சுவாமிஜி! நீங்க தான் எங்க ஐயாவை காப்பாத்தனும்! ரெண்டு ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 31

தாயே என்னை மன்னித்து விடு என்று காலில் விழுந்தவனை ஆவேசத்துடன் பார்த்தாள் ப்ரவீணா. அன்னிக்கு நானும் இப்படித்தானே கதறினேன்! என்னை விட்டு விடுங்கள் என்று சொன்னேனே கேட்டீர்களா? கதற கதற கற்பழித்து கொன்றீர்களே? தாயே! அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை! நான் அந்த வீட்டை வாடகைக்கு விட்டவன். என்னிடம் ஏமாற்றி விட்டார்கள். வீட்டை கொடுத்ததை தவிர வேறு எந்த பாவமும் அறியாதவன் நான். செல்வி எகத்தாளமாய் சிரித்தாள். அதனால் தான் பாவமன்னிப்பு கேட்கிறாயா? போ! ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 30

குஹாத்ரி மலையின் மாலைப்பொழுது மிகவும் ரம்யமாக இருந்தது. ஒன்றிரண்டு குயில்கள் கூவ சில்லென்று மலைக்காற்று வீசிக் கொண்டிருக்க சூரியன் அஸ்தமனத்திற்காக மேற்கில் மறைந்து கொண்டிருந்தான். குஹாத்திரி மலையில் பழனி ஆண்டவர் வடிவமாக வீற்றிருக்கும் அந்த தண்டபாணி கோயிலின் முன் வாசலில் சுவாமிஜியின் எதிரில் நின்று கதறி அழுது கொண்டிருந்தான் ரவி! சுவாமிஜி! என்னை மன்னிச்சுருங்க! எனக்கு பேய் எல்லாம் பிடிக்கலை! என்னோட அக்காவை கொன்னவங்களை பழிவாங்கத்தான் இப்படி பேய் பிடிச்சா மாதிரி நடிச்சேன். ஆனா என் துரதிருஷ்டம் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 29

அந்த அதிகாலை வேலையிலும் ப்ரவீணாவின் தாய் பொன்னம்மாளுக்கு வியர்த்துக் கொட்டியது. மகளைக் காணாது தவியாக தவித்தாள்.எங்கு சென்றிருப்பாள் ஒருவேளை மகேஷுடன் எங்காவது ஓடிப் போய் விட்டாளோ? கடவுளே அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது! அப்புறம் ஊரில் தலைக்காட்ட முடியாது. நமக்குப் போய் இந்த நிலை வரவேண்டுமா? என்று அவள் நெஞ்சம் குமுறிக்கொண்டிருந்தது. விடிந்ததும் ஒவ்வொருவராய் விசாரிக்க ஆரம்பித்து விடுவார்களே? என்ன பதில் சொல்வது. அவள் கலங்கி நின்றபோதுதான் பக்கத்து ஊர் தர்காவின் ஓதுதல் காதில் ஒலித்தது. ஒரே ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 28

என்ன இட்லிக்காரம்மா! வாயை திறக்க மாட்டேங்கிற! இப்படியே ஊமையா இருந்தே ஊரை கெடுத்து வைக்கறே! உன் தகுதி என்ன? என் தகுதி என்ன? நான் உன் வீட்டு படியேற வேண்டிய நிலைய வரவைச்சிட்டே இல்லே? அப்படியெல்லாம் இல்லீங்க ஐயா! ஏதோ சின்ன புள்ள அறியாம தப்பு பண்ணிடுச்சு! நான் கண்டிக்கறேன் ஐயா! யாரு! உன் பொண்ணு சின்ன புள்ளயா? அதுக்கு விளையாட என் பையன் தான் கிடைச்சானா? இல்லீங்க ஐயா! நான் கண்டிச்சு வைக்கிறேன்! உங்க பையனை ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 27

ப்ரவீணா! அவள் எங்கள் செல்லக்குட்டி! என்ன பாய் சொல்றீங்க! நீங்க முஸ்லீம்! அவ இந்து அப்புறம் எப்படி அவ உங்க செல்லம்? இந்த முஸ்லீம்- இந்து- கிறிஸ்து  இந்த மதங்களை எல்லாம் கடந்த மதம் ஒண்ணு இருக்கு! அது நம்ம எல்லோர் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறது. அது சிலரிடம் வெளிப்படும் சிலரிடம் மறைந்து கிடக்கும் அதுக்கு பேருதான் அன்பு. தூய அன்பு நிறைஞ்சவங்க கிட்ட மத மாச்சர்யமெல்லாம் இருக்காது. அவங்களுக்கு தெரிஞ்சது உயிர்களிடத்தில் அன்பு செலுத்தனுங்கிறது மட்டும்தான். இதைத்தான் ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 26

ஆமாம்! ப்ரவீணா என்னோட மக மாதிரி! இங்கேயே வளந்தவ! அவ செத்து போனது இயற்கையா இருந்தா ஒண்ணும் செஞ்சிருக்க போறது இல்லே! அவளை அநியாயமா கொன்னு போட்டாங்க படுபாவிங்க! அவங்க சாகனும்! அதுதான் அவனுங்களுக்கான தண்டனை! அந்த தண்டணையை கொடுக்க வந்த ப்ரவிணாவை நான் தடுப்பதா? அதான் தடுக்கலை! பாய் சொல்லிக்கொண்டே வர வினோத் மறித்தான். பாய் நீங்க தப்பு பண்ணறீங்க! தப்பு செஞ்சவங்களை தண்டிக்க நாம கடவுள் கிடையாது. அவங்களுக்கு தண்டனை தர கோர்ட் இருக்கு ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 25

எங்க மகள் எங்கே? அவளுக்கு என்ன ஆச்சு? என்று செல்வியின் பெற்றோர் கேட்கவும் பதில் பேசாமல் தலைகுனிந்து நின்றான் வினோத். பாய்தான் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு உங்கள் மகளுக்கு ஒன்றும் ஆகவில்லை! அவளை கட்டாயம் கண்டுபிடித்துவிடுவோம். என்று சொன்னார். அதைக்கேட்டதும் அந்த அம்மாள் அப்படியே முகம் வெளிறி  அய்யோ! அப்படின்னா என் மக இங்க  இல்லையா? என்றவாறு மயங்கி சரிந்தாள். இதைக்கண்டதும் அவளின் கணவர் என்னப்பா இது! என்ன ஆச்சு? என்றவாறு அப்பெண்மணியை தூக்கி மடியில் நிறுத்தி ... Read More »

பேய்கள் ஓய்வதில்லை – 24

நீங்க நினைச்சா இந்த ஆவியை அடக்கி இருக்கலாம்தானே! வினோத்  இப்படி கேட்கவும் பாய் திகைத்து போனார். அப்ப நீங்க என்னை நம்பலையா? இல்ல பாய்! இது இறைவனோட ஆலயம்! இங்கு ஒரு ஆவி துர் ஆத்மா புகுந்து தப்பிச்சி போகுதுன்னா அது.. இது உங்க அறியாமையைத்தான் காட்டுது! கோவில்களில் ஆவிகள் உலாத்தாதா என்ன? என்ன சொல்றீங்க பாய்? கோவில்கள் புனிதமான இடம்! அங்க எப்படி ஆவிகள் உலா வரும்! ஆவிகள் பாவாத்மாதான்! ஆனாலும் அதுவும் இறைவனிடம் மன்னிப்பு ... Read More »

Scroll To Top