Home » 2015 » March (page 23)

Monthly Archives: March 2015

பிறவி மர்மங்கள் – 5

கேத்தரின் அடுத்த முறை சிகிச்சைக்கு வருவதற்கு முன் இதைப்பற்றி யோசித்தேன். சிகிச்சைக்கு முன், தான் கண்ட ஒரு கனவு பற்றி விவரித்தாள். பழமையான கற்களாலான படிகளில், தான் செக்கர் போர்ட் விளையாடியது போல் இருந்ததாகக் கூறினாள். அவளுக்கு அந்த கனவு நன்கு ஞாபகம் இருந்தது. இந்த முறை சிகிச்சையில், அவளுடைய பிறவிகளில், வரும் நிகழ்ச்சிகளுக்கும் இந்த கனவுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று அறியும்படி கூறினேன். “ஒரு கோட்டையை நோக்கிச் செல்லும் படிகளைக் காண்கிறேன். மலையையும், கடலையும் காண்பதற்கு ... Read More »

பிறவி மர்மங்கள் – 4

ஒரு வாரத்திற்குப் பிறகு கேத்தரின் மீண்டும் ஹிப்னடைஸ் சிகிச்சைக்கு என் கிளினிக்கு வந்தாள். அவள் எப்பொழுதையும் விட மிகுந்த அழகுடனும் தேஜஸுடனும் காணப்பட்டாள். அவளிடம் இதுவரை இருந்த, தண்ணீரில் மூழ்கும் பயம் மறைந்துவிட்டது என்று மிக மகிழ்ச்சியுடன் கூறினாள். ஆனால் மூச்சுத்திணறல் பயம் முற்றிலுமாக குறையவில்லை. பாலம் உடைந்து மூழ்கும் கனவுத் தொல்லை இல்லாமல், நன்றாக உறங்க முடிகிறது என்றும் கூறினாள். அவளுக்கு முற்பிறவி விவரங்கள் நினைவில் இருந்தாலும், அவள் இதுவரை அந்த விவரங்களை ஓரளவுக்கு மேல் ... Read More »

பிறவி மர்மங்கள் – 3

கேத்தரின் சமாதி நிலையில் இருந்தபோது மிகவும் பொறுமையாகவும், வேண்டுமென்றே முணுமுணுப்பாகவும் பேசினாள். அதனால் கேத்தரின் கூறியதில் ஒவ்வொரு வார்த்தையையும் குறித்துக்கொள்வது எளிதாக இருந்தது. (கேத்தரின் மீண்டும் மீண்டும் கூறிய விஷயங்களை இங்கு தவிர்த்திருக்கிறேன்.) கேத்தரினை இரண்டு வயதுக்கு முன்பு அழைத்துச் சென்றேன். ஆனால் அவளுக்கு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் எதுவும் நடந்ததாக ஞாபகம் இல்லை. அவளை “உனக்கு பயம் அதிகம் உள்ள சூழ்நிலைக்குச் செல்” என்று ஆணையிட்டேன். ஆனால் அவளிடமிருந்து வந்த பதிலுக்கு நான் என்னைத் தயார்படுத்தியிருக்கவில்லை. கேத்தரின் ... Read More »

பிறவி மர்மங்கள் – 2

கேத்தரின் ட்ரீட்மெண்டுக்காக என் க்ளினிக்கு வாரம் ஒரு முறை வந்தாள். கிட்டத்தட்ட பதினெட்டு மாதங்கள் மிகவும் தீவிரமான மனநல சிகிச்சை அவளுக்கு கொடுத்திருந்தேன். ஒரு நோயாளி என்ற பார்வையில் கேத்தரின் குணமாகி நல்ல நிலைக்கு வர வேண்டுமென்று மிகவும் ஆர்வத்துடன் வந்தாள். அவளுக்கு நான் சொல்வதை நன்கு புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலும், நல்ல உள்ளுணர்வும் இருந்தன. அந்த ட்ரீட்மெண்ட் சமயத்தில் அவளுடைய சிந்தனைகளையும், உணர்வுகளையும் அவளுக்கு வரக்கூடிய கனவுகளையும் பற்றி ஆராய்ந்தோம். அவளுடைய நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் ... Read More »

பிறவி மர்மங்கள் – 1

முதன் முதலாக நான் கேதரினை பார்த்தபோது சிவப்புநிற உடையணிந்து என் கிளினிக் வரவேற்ப்பு அறையில் அமர்ந்திருந்தாள். மிகவும் பதற்றத்துடன் கிளினிக்கில் இருந்த பத்திரிகைகள் அனைத்தையும் புரட்டிப் புரட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மூச்சுவிட சிரமப்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்களாக, எப்படியாவது இன்று டாக்டரை பார்த்தே ஆகவேண்டும், பயந்து ஓடிவிடக்கூடாது என்று மனதைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தாள். நான் வரவேற்ப்பு அறையில் இருந்து அவளை வரவேற்று எனது அறைக்கு அழைத்து வந்தேன். கைகுலுக்கும்போது அவள் கை ... Read More »

பிறவி மர்மங்கள் – முகவுரை

பிறவி மர்மங்கள் – முகவுரை “Many Lives Many Masters” – உண்மை நிகழ்வுகள் மட்டுமே கொண்ட ஒரு நூல். DR.Brian Weiss – என்ற பெயருடைய மன நல மருத்துவர் 1988-ல் எழுதி வெளிவந்தது. என்னால் முடிந்தவரை மொழி பெயர்க்க முயற்சி செய்கிறேன். இனி புத்தகத்திற்கு செல்வோம். முகவுரை நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதாவது ஒரு காரணம் உண்டென்பது எனக்குத் தெரியும். ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அது ஏன் நடக்கிறது, பிறகு என்ன ... Read More »

பேய்கள் ஜாக்கிரதை – 5

திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான். காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், “என்ன எழுதியிருக்கு , வாசி….” “என்னடா நரேன் . அதேதானே இது?” “டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ ... Read More »

பேய்கள் ஜாக்கிரதை – 4

நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான். அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், “டேய் என்னடா ஆச்சு…. இவனுக்கு என்ன ஆச்சு? எங்க இருந்தான்?” ரத்னகுரு சொன்னான், “அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன். எழுந்தப்பவே ... Read More »

பேய்கள் ஜாக்கிரதை – 3

நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. “நரேன், நரேன் ….. ராகேஷ்.. ராகேஷ்…. இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்..  ராகேஷ்..” தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப் பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி ... Read More »

பேய்கள் ஜாக்கிரதை – 2

தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப் ... Read More »

Scroll To Top