அடுத்த அமர்வுக்கு கேத்தரின் வருவதற்குள் மூன்று வாரங்கள் ஓடிவிட்டன. எனக்கு உடல்நிலை சரியில்லாததனாலும் கேத்தரின் விடுமுறையில் சென்றிருந்ததனாலும் சற்று தாமதமாகிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் கேத்தரினின் உடல்நிலை முன்னேற்றம் திருப்திகரமாக இருந்தது. ஆனால் இந்த முறை ஹிப்னாடிஸ அமர்வு ஆரம்பித்ததும் கேத்தரினிடம் பதற்றம் காணப்பட்டது. கேத்தரின் தன் மனநிலை மற்றும் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், ஹிப்னாடிஸம் இதற்குமேலும் தனக்கு உதவி செய்யக்கூடும் என்று நினைக்கவில்லை என்று கூறினாள். சாதாரணமாக கேத்தரினுடைய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, சில வாரங்களுக்கு முன்னரே ... Read More »
Monthly Archives: March 2015
பிறவி மர்மங்கள் – 24
March 9, 2015
கேத்தரின் நன்கு குணமாகிவிட்டாள். துன்பங்களைக் கொடுத்த அவளுடைய மனக்கலக்கங்கள் முற்றிலும் விலகிவிட்டன. ஹிப்னாடிஸ அமர்வின்பொழுது அவள் சென்றுவந்த பிறவிகள் திரும்பவும் வரஆரம்பித்தன. நாங்கள் ஒரு இறுதி நிலையை நோக்கிச் செல்வதை உணர்ந்தேன். ஐந்து மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் சிகிச்சை அடுத்த அமர்வோடு முடிந்து விடக்கூடும் என்று நான் நினைக்கவில்லை. “சிற்பவேலைப்பாடுகளைக் காண்கிறேன்.” கேத்தரின் கூற ஆரம்பித்தாள். “சில பொன்னால் செய்யப்பட்டுள்ளன. களிமண்ணைப் பார்க்கிறேன். மக்கள் மண்பாண்டங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவை செந்நிறத்தில் உள்ளன. ஒருவகையான செம்மண்ணை ... Read More »
பிறவி மர்மங்கள் – 23
March 9, 2015
“நான் மிதக்கிறேன்.” கேத்தரின் முணகினாள். “நீ எந்த நிலையில் இருக்கிறாய்?” “இல்லை. நான் மிதக்கிறேன். எட்வர்ட் எனக்கு ஏதோ கடன் பட்டிருக்கிறார். . . . . . ஏதோ கடன் பட்டிருக்கிறார்.” “என்ன என்று உனக்குத் தெரியுமா?” “இல்லை. . . . . . ஏதோ எனக்கு புரியவைக்க வேண்டியது தொடர்பாக . . . . . எனக்கு கடன் பட்டிருக்கிறார். எனக்கு அவர் சொல்லவேண்டிய விஷயம் இருக்கிறது. என் சகோதரியினுடைய குழந்தை ... Read More »
பிறவி மர்மங்கள் – 22
March 9, 2015
கேத்தரினுக்கு முதன்முதலாக ஹிப்னாடிச சிகிச்சையை துவங்கியதிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிவிட்டன. கேத்தரினிடம் நோயின் சுவடே இல்லாமல் போனது மட்டுமல்லாமல், அவளுடைய அமைதியும், தேஜசும் அதிகரித்தது. அவளை அறியாமலேயே அவளைச் சுற்றியுள்ளவர்களை அவள் கவர்ந்தாள். பல வருடங்களாக அவள் மருத்துவமனை கேன்டீனில் தன் காலை உணவை உண்கிறாள். அவளை யாரும் அவ்வளவாக கவனித்தது கிடையாது. ஆனால், இப்பொழுதெல்லாம் முன்பின் தெரியாதவர்கள் கூட அவளிடம் பேச விழைகிறார்கள். ஆண்களும், பெண்களும் விரும்பிப் பேசுகிறார்கள். “உங்களிடம் ஒன்று கூற விரும்புகிறேன். நீங்கள் ... Read More »
பிறவி மர்மங்கள் – 21
March 9, 2015
இறுதியாக கேத்தரின் மீண்டும் பேச ஆரம்பித்தாள். “நகைகள் சென்றுவிட்டன. . . . . . ஒளியும் மறைந்துவிட்டது. . . . . . . எல்லாம் மறைந்துவிட்டன.” “அசரீரிகளும் சென்றுவிட்டனவா?” “ஆமாம். என் கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை.” தலையை பக்கவாட்டில் அசைக்க ஆரம்பித்தாள். “ஒரு ஆன்மா என்னை நோக்குகிறது.” “உன்னையா?” “ஆமாம்.” “அது யாரென்று அடையாளம் காணமுடிகிறதா?” “சரியாகத் தெரியவில்லை. . . . . . அது எட்வர்ட் என்று நினைக்கிறேன்.” எட்வர்ட் ... Read More »
பிறவி மர்மங்கள் – 20
March 9, 2015
சில நாட்களுக்குப் பிறகு, ஒரு நள்ளிரவில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த நான் திடீரென்று நடுக்கத்துடன் விழித்தெழுந்தேன். மீண்டும் மீண்டும் கேத்தரினுடைய முகம் என் நினைவில் வந்துகொண்டே இருந்தது. மிகுந்த சோகத்துடன் அவளது முகம் காணப்பட்டது. அவளுக்கு என் உதவி தேவைப்படுவது போன்ற எண்ணம் தோன்றியது. மணியைப் பார்த்தேன். அதிகாலை 3:36. வெளியிலிருந்து எந்த ஓசையையும் கேட்டு நான் எழுந்ததாகத் தோன்றவில்லை. மனைவி கரோல் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். நடந்ததை சற்று மறந்துவிட்டு உறக்கத்தில் ஆழ்ந்தேன். சரியாக அதே ... Read More »
பிறவி மர்மங்கள் – 19
March 9, 2015
யார், யாரிடம் நீ நம்பிக்கையில்லாமல் இருக்கிறாய்?” “எனக்கு ஸ்டுவர்ட்டிடம் நம்பிக்கையில்லை. பெக்கியிடம் நம்பிக்கையில்லை. அவர்கள் எனக்கு தீங்கு செய்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.” “உன்னால் இவ்வகையான எண்ணங்களிலிருந்து வெளிவரமுடியாதா?” “முற்றிலும் வெளிவர முடியாது. ஆனால் சில விஷயங்களில் வெளிவர இயலும். ஸ்டுவர்ட்டுக்கு நான் அஞ்சுவது தெரியும். அதனை உபயோகித்து அந்த நிலையிலேயே நிறுத்திவைக்க முயற்சிசெய்கிறான்.” “அப்புறம் பெக்கி?” “நான் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்களிடம், என்னை நம்பிக்கையிழக்க வைக்க முயற்சி செய்கிறாள். எனக்கு நல்ல விஷயங்களாக தெரிபவைகளை, அவள் தீயவிஷயங்களாகக் காண்கிறாள். ... Read More »
பிறவி மர்மங்கள் – 18
March 9, 2015
அந்த வாரம் விரைவாக கழிந்தது. சென்ற வார சிகிச்சை டேப்பினை மீண்டும் மீண்டும் காதுகொடுத்துக் கேட்டேன். நான் எப்படி புதுப்பிக்கப்படும் நிலையை அடைகிறேன்? நான் எதுவும் ஞானம் பெற்றதாக உணரவில்லை. இப்பொழுது எனக்கு உதவி செய்வதற்காக ஆன்மாக்கள் மீண்டும் அனுப்பப்படும். ஆனால் நான் என்ன செய்யவேண்டும்? இது எனக்கு எப்பொழுது தெரியும்? எனக்கு செய்யக்கூடிய திறமை இருக்கிறதா? நான் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்று எனக்கு புரிகிறது. “பொறுமையும் தகுந்த நேரமும் . . . ... Read More »
பிறவி மர்மங்கள் – 17
March 9, 2015
கேத்தரின் மீண்டும் முணக ஆரம்பித்தாள் “கிடியன் . . . . . கிடியன் என்பவன் என்னுடன் பேசமுயற்சிக்கிறான்” “என்ன கூறுகிறான்?” “அவன் எங்குமிருக்கிறான். அவன் ஒரு காக்கும் தேவதையைப் போன்றவன். இப்பொழுது என்னுடன் விளையாடுகிறான்.” “உன் பாதுகாப்பாளர்களில் ஒருவனா?” “ஆம். என்னுடன் விளையாடுகிறான். . . . . அவன் எனக்காக எப்பொழுதும் இருக்கிறான் என்று என்னை உணரவைக்க முயற்சிக்கிறான் என்று நினைக்கிறேன்.” “கிடியன்?” மீண்டும் வினவினேன். “அங்கே சென்றுவிட்டான்.” “அவனுடன் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறாயா?” ... Read More »
பிறவி மர்மங்கள் – 16
March 9, 2015
மனோவியாதியால் பதற்றமும், பயமும் கொண்டிருந்த கேத்தரினுடைய நிலையில், ஒவ்வொரு வாரமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிந்தது. அவள் மிகவும் பொறுமைமிக்கவளாகவும், அமைதியுடனும் காணப்படுவதும் தெரிந்தது. புதியவர்களை சந்திப்பதை பிரச்சனையாக நோக்கிய கேத்தரின், இப்பொழுதெல்லாம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர்களை எதிர்நோக்க ஆரம்பித்தாள். புதியவர்களிடம் அன்பையும் பரிமாறிக்கொண்டாள். அவளுள் ஒளிந்திருந்த, அவளுடைய தனித்தன்மை வாய்ந்த நற்குணங்களை அவளைச் சுற்றி இருப்பவர்கள் உணரும்படி, அவளால் எந்தவித பயமுமின்றி வெளிப்படுத்த முடிந்தது. ஹிப்னடைஸ் அமர்வின்பொழுது கேத்தரினுடைய பிறவி நினைவுகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ... Read More »