அவள் தான் யாதவி…..,மோதிரத்தின் சொந்தக்காரி. நான் ஆனந்தன். முழு பெயர் நித்தி ஆனந்தன். வழக்கமான ஆளாகத்தான் நானும் இருந்தேன். இருந்தேன் என்பது இறந்தகாலம்தானே. ஆனால் அந்த ஒவ்வொரு மாற்றமும் என் நினைவில் உயிராய். ஆங்கில படங்களில் மின்னல் பட்டு சக்தி பெறுவது, சிலந்தி கடித்து சக்தி பெறுவது, மோதிரம் அணிந்து சக்தி பெறவது போல இப்படித்தான் இதுதான் இதலால்தான் என என் சக்தியை நான் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த சக்தி எனக்குள் இருப்பது அல்ல; என்னுடன் ... Read More »
Monthly Archives: March 2015
அப்பாயணம் – 8 இறுதி அத்தியாயம்.
March 11, 2015
‘‘சார் அந்த காப்சூல் விவகாரம்?’’ டாக்டர் ஹென்றியும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் பார்வையும் பாட்டி மேல் படர்ந்தது. பெரிய மனிதர்கள் முன் வரவே தயங்கும் பாட்டி இப்போது ஏக கூச்சத்துடன் முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டார். ஹென்றி கூறத் தொடங்கினார். ‘‘இதற்கு நீங்கள் உங்கள் பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் உண்மையில் சாப்பிட்டது மூன்று காப்சூல்கள்தான். அதற்கே தீவிர மஞ்சகாமாலை வந்து விட்டது. அந்த காப்சூல் உங்களை பாதிப்பதை துல்லியமாக கண்டு பிடித்து, காப்சூல்களின் ... Read More »
அப்பாயணம் – 7
March 11, 2015
அதே சமயம்.. கதவை உடைத்து அப்பாவும் டாக்டர் ஹென்றியும் போலீஸ் புடை சூழ உள்ளே நுழைந்தனர். டாக்டர் ஹென்றி என்னை ஆசுவாசப்படுத்த, அப்பா ரங்கபாஷ்யத்தின் மேல் புலிப் பாய்ச்சல் பாய்ந்தார். அவர் மாறி மாறி அடித்ததில் ரங்கபாஷ்யத்தின் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வடிந்தது. போலிஸ் அவனைக் கைது செய்து கொண்டு போனது. அப்பா என் வாட்சை கழற்றினார். ‘‘இது ஒரு ரெகார்டிங் டிவைஸ்’’ என்றார். ஆடியோ, வீடியோ துல்லியமாக ரெகார்ட் ஆகும். என் பாதுகாப்புக்காகவும், அவனை ஆதாரத்தோடு ... Read More »
அப்பாயணம் – 6
March 11, 2015
மறு நாள் காலை எட்டரை மணி. டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கிளினிக்கிலிருந்து சற்று தொலைவில் காரை நிறுத்திய அப்பா என்னை மட்டும் உள்ளே போகச் சொன்னார். கிளம்பும்போது அன்பளிப்பாக ஒரு வாட்சை கையில் கட்டி விட்டார். டாக்டர் ரங்கபாஷ்யத்தின் கன்சல்டேசன் அறை. சத்தமில்லாத ஏ.சி. இடப்பக்கம் சின்னப் படுக்கை, உபகரணங்கள், மருந்துகள், பக்கவாட்டு ஷெல்ஃபில் அவர் வாங்கிய மெடல்கள்…டாக்டர் ரங்கபாஷ்யம் என்னை ஆர்வத்தோடு வரவேற்று அமர வைத்தார். பட்டாம்பூச்சியாய் ஓடிய நர்ஸை வெளியே துரத்தினார். என் ஆரோக்கியம் பற்றி ... Read More »
அப்பாயணம் – 5
March 11, 2015
நேர்முகத் தேர்வை திருப்திகரமாக முடித்தேன். அறை எண் ஏழில் டாக்டர் ஹென்றி என்பவரை பார்க்கப் பணித்தார்கள். பெரிய சைஸ் ஆப்பிளை நினைவூட்டும் முகத்துடன் டாக்டர் ஹென்றி. டாக்டர் ரங்கபாஷ்யத்துக்கு கொடுத்த வாக்குறுதிப்படி செய்தேன். டாக்டர் ஜான் லீவர்ட், கல்லீரல் புற்று நோய், இரண்டு வாரக் கெடு, இத்யாதி எல்லாவற்றையும் சொன்னேன். காப்சூல் கவரை காட்டினேன். ‘‘ஜனவரி பதினேழா?’’ டாக்டர் ஹென்றி புருவம் உயர்த்தினார். ‘‘உங்கள் கேஸ் சம்மரி, ரிபோர்ட்ஸ் அடங்கிய ஃபைல் எங்கே? முக்கியமாக பயாப்சி ரிபோர்ட்? ... Read More »
அப்பாயணம் – 4
March 11, 2015
அப்பாவை அப்பாவாகப் பார்க்காமல் வெறுமனே ஆண்மகனாகப் பார்த்தேன். வெள்ளிக் கலசம் போல் தேகம். குதிரையின் லாவகமும் சிங்கத்தின் கம்பீரமும் இணைந்த உடல் அசைவுகள். அதற்கு மேல் பார்க்க பயம்மாக இருந்தது. ‘‘சைட் அடிச்சது போதும், வா’’ என்று கூப்பிட்டு விடுவார்! ஒரே இரவில் மாற்றி விட்டாரே! என் ஈகோ தடுத்தது. இவரா மாற்றினார்? மாற்றியது கல்லீரல் கான்சராக்கும். பாட்டி எதிர்பட்டார். பூஜையறையை சுத்தப்படுத்தி விட்டு வருகிறார் போலும். புடவை மடிப்பிலும் கை நகங்களிலும் விபூதி தீற்றல். ‘‘சௌதாமினி, ... Read More »
அப்பாயணம் – 3
March 11, 2015
வீறிட்டு அலறினேன்! பாட்டி ஓடி வந்தாள். பாட்டியின் வெள்ளைப் புடவையை பற்றினேன். ‘‘என்னாச்சு என்னாச்சு சௌதாமினி? ’’ பாட்டி பதறினாள். நான் நிலை குத்தி நின்றேன். மெதுவாக கைகளை எடுத்து விட்டு புடவையை பார்த்தேன். திட்டு திட்டாக மஞ்சள் நிறம். ‘‘பாட்டி நான் சாகப்போறேன்; சீக்கிரமே சாகப்போறேன்; கொஞ்ச நாள்ல வாயிலும் மூக்கிலும் ரத்தம் வரும். அவ்வளவுதான்… அவ்வளவுதான்.’’ திமிறி திமிறி கதறினேன். வயதான பாட்டியால் என்னை சமாளிக்க முடிய வில்லை. ‘‘அது வெறும் மஞ்சகாமாலை, சௌதாமினி, ... Read More »
அப்பாயணம் – 2
March 11, 2015
‘‘உங்க அப்பாவோட பணத்துக்கும் பவருக்கும் நீ இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லையே, சௌதாமினி?’’ மாதங்கி ஒரு முறை கேட்டபோது நான் ஆத்திரத்தில் வெடித்து விட்டேன். ‘‘நான் அந்த ஆளோட பொண்ணு. உன்ன மாதிரி அவர… ’’ அதற்கு மேல் பேசவில்லை. ‘‘எங்க அம்மாவுக்கு இடமில்லாத மனசிலும் வீட்டிலும் எனக்கும் இடம் வேண்டாம்.’’ இங்கு அம்மாவின் அம்மாவோடு இருக்கிறேன். அம்மாவின் பூர்வீகம் கேரளாவில் செட்டிலான தமிழ் குடும்பம். பாலகிருஷ்ணன் மகள் என்கிற அடையாளம் துறந்து ‘ மல்லிகே சேச்சி’ யின் ... Read More »
அப்பாயணம் – 1
March 11, 2015
தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய செவ்வந்திப் பூக்களை பார்த்து கொண்டிருந்தேன். என் கண் முன்னே பூவின் இதழ்களை ஒவ்வொன்றாக பிய்த்து போட்டது காற்று. பார்க்க சகிக்காமல் உள்ளே வந்தேன். ஒரு மண் புழுவை துள்ள துடிக்க எறும்புக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. ஏன் எங்கு பார்த்தாலும் சித்ரவதையாக இருக்கிறது? நெற்றிப்பொட்டை அழுத்தி கொண்டேன். தலையில் அழுத்தி விரல்களை எடுத்தபோது கொத்து முடி கையோடு வந்தது. அந்த காற்றைப் போல, எறும்புக் கூட்டத்தைப் போல என்னை சின்னா பின்னப்படுத்திக் கொண்டிருந்தது ... Read More »
அதே மோதிரம் – 5
March 11, 2015
உடைந்த கைபேசியில் இருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வருவது சாத்தியமா..? வந்திருக்கிறதே! எப்படி..? மணியின் கைபேசி கோளாறை எப்படி சொல்வது. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் சில சமயம் இதைவிட தாமதமாகவும் கிடைத்திருக்கிறது. பல முறை பொம்மி சொல்லியும் தன் கைபேசியை மணி மாற்ற விரும்பவில்லை. வழக்கம் போலவே எழுந்தவன் அலுவலகம் சென்றான். வழக்கத்திற்கு மாறாக மணியின் முகம் வேறுமாதிரி இருந்தது. யார் கவனித்தார்களோ இல்லையோ மணியின் மேலதிகாரி கவனித்திருக்க வேண்டும். மணி, முதலாளி அறைக்கு அழைக்கப்பட்டான். மதிய உணவு நேரம். ... Read More »