விக்டர் மார்ஷலின் தேடுதல் வேட்டை பெருமளவு பாதிக்கப்பட்டது. அது மட்டுமன்றி அருமையான ரேடியோ ட்ரான்ஸ்மிட்டர்கள் அடங்கிய கன்ட்ரோல் ரூமை அவதி அவதியாக தரை மட்டமாக்க வேண்டியிருந்தது! இனி எவருடனும் ரகசியத் தொடர்பு கொள்ள முடியாது. இதற்கெல்லாம் காரணம் நரேன்! கலெக்டர் நரேன்! முதலில் அவனை முடக்க வேண்டும்…. மார்ஷலின் கோபம் சீக்கிரமே நரேன் மேல் இறங்கியது – பணியிடை நீக்கமாக! தன் சஸ்பென்ஷன் ஆர்டரை அலட்டிக் கொள்ளாமல் வாங்கிய நரேன் கலெக்டர் பங்களாவை காலி செய்து விட்டு ... Read More »
Monthly Archives: March 2015
தங்கத் தண்டு – 9
March 12, 2015
கலெக்டர் நரேனின் நடவடிக்கைக்கு கை மேல் பலன் கிடைத்தது! அவரை அதிரடியாக கன்யாகுமரி மாவட்டத்துக்கு மாறுதல் செய்திருந்தனர்! தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அரசாணை வெளியாகி இருந்தது. அந்த பிரிண்ட் அவுட்டை வைத்துக் கொண்டே கன்யாகுமாரியில் சேரச் சொல்லி அடுக்கடுக்காய் வற்புறுத்தல்கள்! நரேன் அசரவில்லை! பிரிண்ட் அவுட்டை வைத்து சம்பளம் வாங்க முடியுமா? எழுத்துப் பூர்வமாக அரசாணையை கையெழுத்துப் போட்டு வாங்காமல் தன்னால் திருவண்ணாமலையை விட்டு இம்மி நகர முடியாது என்று தெரிவித்து விட்டார்! ஆயினும் ஏழாம் ... Read More »
தங்கத் தண்டு – 8
March 12, 2015
…………………………………………………..கி.மு. ஐம்பதாம் வருடம்…………………………………………………….. அம்பல சித்தர் அந்தக் குகையின் பாறைப் பலகையில் சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டார். அதற்கு நேர் கீழே திருமுடியான் வெட்டிய சுரங்கம் புறப்படுவது அவருக்கும் திருமுடியானுக்கும் மாத்திரமே தெரிந்த ரகசியம்! “ சுதர்சனா, என் பிரிய சீடனே, இந்தக் குகையில்தான் உனக்கும் திருமுடியானுக்கும் நிறைய அப்பியாசங்கள் கற்றுக் கொடுத்தேன்; நான் இந்தக் குகையிலேயே ஜீவ சமாதி அடைய விரும்புகிறேன்; இந்த ஓலைச்சுவடிகளும், குளிகைகளும் காலத்தால் அழியாமல் இங்கு பத்திரமாக இருக்கும். என் சீடர்கள் அல்லாது ... Read More »
தங்கத் தண்டு – 7
March 12, 2015
……………………………..கி.மு. ஐம்பதாம் வருடம்…. கல் பாத்திரத்தில் பச்சிலைகளையும் பாதரசத்தையும் போட்டு கலக்கிக் கொண்டிருந்தான் திருமுடியான். பாறாங்கல் அடுப்பு ஜூவாலை விட்டு எரிந்து கொண்டிருந்தது. குருநாதர் செல்லப்பிள்ளை சுதர்சனனை ரசவாதம் செய்ய அனுமதித்தார். தனக்குப் பிராணாயாமம் இன்னும் கைகூடவில்லை என்று அனுமதி மறுத்து விட்டார். பெரீய்ய பிராணாயாமம்! எல்லாம் வஞ்சகம்! குருநாதர் இல்லாமலே தனியாகச் செய்கிறான்….. அடிக்கடி தன் நெற்றி முடியை பாம்பு விரலால் நீவி சுருட்டிக் கொண்டான்; பார்த்து விடலாம்! மலை தாண்டிய பொட்டல் பிரதேசத்தில் அவன்! ... Read More »
தங்கத் தண்டு – 6
March 12, 2015
……………………………………………கி.மு. ஐம்பதாம் வருடம்………………………………… உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்தது எரிமலை.. கல்மேடையில் அமர்ந்திருந்தார் அம்பல சித்தர். அவரை சாஷ்டாங்கமாக வணங்கி, எழுந்து நின்றான் சுதர்சனன். “ சுதர்சனா, ஒரு முழ ஆரத்துக்கு குழி வெட்டு! ”- வெட்டினான். எரிமலையிலிருந்து கரும்புகை வெளி வந்தது! சுதர்சனன் அசரவில்லை! “ சுதர்சனா, இந்த துலாக்கோல் நட்சத்திரத்தைப் பார்! இதன் நடுமுள் ஈசான திசையோடு பாகை பத்து ஏற்படுத்தும் போது இந்த எரிமலை வெடிக்கும் ” – வெடித்தது! குழிக்குள் சேகரமான எரிமலைக் ... Read More »
தங்கத் தண்டு – 5
March 12, 2015
அமரேசன் வீடு “ ஆட்டையப் போட்டப்புறம் ஓடி ஒளிய இடமிருக்கு. இந்த வீட்டு ஆளுங்கதான் பிரசினை…… அந்தப் பெரியவர் அமரேசனோட பெண்டாட்டி, கௌரி- அந்தப் பாட்டி மட்டும்தான் எப்பவும் வீட்டுல இருக்கு. மத்தவங்க எப்ப போவாங்க, எப்ப வருவாங்க ஒண்ணும் மனசாகல; வீட்டுல நகையோ பணமோ வைக்கிறதில்ல. பாட்டி கிட்ட வாயைக் கிளறி எதுனாச்சும் தெரிஞ்சுக்கலாம்னா பொல்லாத கிழவி, “ ஏய் நீ வாசலோட; உள்ள வந்தா சீட்டு கிழியுங்கறா. பேரன் போஸ்டிங் வாங்கிட்டா நம்ம வண்டவாளம் ... Read More »
தங்கத் தண்டு – 4
March 12, 2015
…………………………….கி.மு. ஐம்பதாம் வருடம்……………………….. “ சுதர்சனா, நீ பிராணாயாமத்தில் தேறி விட்டாய்! அடுத்ததாக உன் உடல் உறுதியை சோதிக்கப் போகிறேன்! ” “ அதற்கும் பரீட்சை உண்டா குருதேவா? ” “ இல்லாமல் என்ன? ரசவாதத்தின் அடுத்த கட்டம் உள்ளதே? ” அம்பல சித்தர் சொல்லத் தொடங்கினார். “ சுதர்சனா, இந்த மூலிகை உருண்டைகளைப் பார். இந்த உருண்டை யானைக் கவளம்; யானை வாயில் போடுவதற்கேற்ற அளவில் பெரிய உருண்டை; இது பசுக் கவளம்; அடுத்தது பூனைக் ... Read More »
தங்கத் தண்டு – 3
March 12, 2015
………………………………………………………கி.மு. ஐம்பதாம் வருடம்…. அம்பல சித்தருக்கு சுதர்சனன் கைக்குழந்தை மாதிரி. அவரை விட்டு அப்படி இப்படி நகர மாட்டான். திருமுடியான் சற்று வளர்ந்த பிள்ளையைப் போல்; அவனுக்கென்று பிரத்யேகப் பணிகள் இருந்தன. குருநாதரை வணங்கி விட்டு வந்திருந்த மக்கள் கூட்டத்துக்கு உபதேசம் செய்யத் தலைப்பட்டான் திருமுடியான். கல்லால மரத்தடியில் விளங்கும் தட்சிணா மூர்த்தியை பற்றிய பிரசங்கம்… “ உமைக்குப் பாதி உடலையும், அடியவர்க்கு முழுமையாகத் தன்னையும் அளித்த வள்ளல் மோன நிலையில் தனித்து அமர்ந்தபோது அம்மை என்ன ... Read More »
தங்கத் தண்டு – 2
March 12, 2015
………………………………..கி.மு. ஐம்பதாம் வருடம்………………… “ குரு தேவரே, இரும்பைப் பொன்னாக்குகிற ரசவாதம் இவ்வளவு எளிமையானதா? ” “ சுதர்சனா! கேட்பதற்கு எளிதாய்த் தோன்றும் இந்த ரசவாதம் செய்வதற்குக் கடினமானது! மூலிகைகளையும் பாதரசத்தையும் சேர்த்துக் காய்ச்சும் போது எரியூட்டிய பிணத்தின் மேல் எழுந்தாடும் சூட்சும சரீரத்தைப் போல வெண்ணிற ஆவி வெளிப்படுவதும் அடங்குவதுமாக இருக்கும்……………. பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை கட்டுப்படுத்தி, வெண்ணிற ஆவியை உடலுக்குள் புகாமல் செய்ய வேண்டும். அவ்விதம் செய்ய இயலாதவர் பித்துற்றுப் ... Read More »
தங்கத் தண்டு – 1
March 12, 2015
……………………..கி.மு. ஐம்பதாம் வருடம்…. ……………………..ஓம் தும்பிக்கையானே துணை. சிறு குறிஞ்சி, ஙெமிலி, சீரொட்டும் ஊரன்பத்ரம் நறியகல் நெய் நசித் தெண்ணில் ஒன்றாய் ரசமூன்று கிளறி விசும்பின் மதியன்ன முகிழ்த்து மெழுகி வைப்பின் இலையொழுகி இரும்பும் பொன்னாம். அம்பல சித்தர் தம் சீடர்கள் திருமுடியானுக்கும் சுதர்சனனுக்கும் விளக்கிக் கொண்டிருந்தார். சிறு குறிஞ்சி, ஙெமிலி, ஊரக்கோட்டான், மகேந்திர பத்திரம் இவற்றை சம அளவு எடுத்து இடித்து பாஷாணக் கல்லுடன் நீரும் எண்ணெயும் தெளித்து எட்டு பங்கு ஒரு பங்காகும் வரை ... Read More »