தனகிரி – தாமரைக்குளம் அந்தரீஸ், நரேன், சுதர்சனா மூன்று பேரும் நின்றிருந்தனர். மேலே பொதி பொதியாய் மேகங்கள்; கீழே தண்ணென்று பூத்த தாமரைகள்… “ என்ன மேடம், நீங்க பாட்டுக்கு புராணக் கதையில வர்ற மாதிரி நாதா, எனக்கு தாமரைப் பூக்களைப் பறித்துத் தருகிறீர்களான்னு கேட்டு இங்க கொண்டு வந்து நிறுத்திட்டீங்க! ” அந்தரீஸ் பேச்சை ஆரம்பித்தான். “படத்தைப் பாருங்க ! தாமரைப் பூக்களை கண்டு பிடிச்சுட்டோம்! முதலையை கண்டு பிடிக்கணும்! ” என்றாள் சுதர்சனா. “ ... Read More »
Monthly Archives: March 2015
தங்கத் தண்டு – 19
March 12, 2015
அம்பல சித்தர் குகையிலிருந்து வெளி வந்தனர் சுதர்சனாவும் நரேனும் அந்தரீஸும். விக்டர் மார்ஷலின் ஒரே நோக்கம் ரசவாத ரகசியம்தான். அது பத்திரமாக இருக்கிறது; அம்பல சித்தர் குகைக்கு மட்டுமல்ல; இரண்டு மலைகளுக்கிடையில் அவன் வந்ததற்கான அறிகுறியே இல்லை ! ஆனால் தனகிரிக்கு வந்திருக்கிறான்; காட்டுவாசிகளை கொன்றிருக்கிறான் ! ஏன்? இப்போது எங்கிருக்கிறான்? என்ன ஆனான்? சுதர்சனா நரேனிடம் கேட்டாள், “சார், ரிது அகோரிகள் கிட்ட மாட்டிக்கிறதுக்கு முன்னாடி அவ கூட்டத்தோட எங்க தங்கியிருந்தா? ” “தனகிரிக்குப் பின்பக்கம், ... Read More »
தங்கத் தண்டு – 18
March 12, 2015
நரேன் மேல் தன் உடம்பு அழுந்த படுத்திருந்தாள் ரிது ! அறைக்குள் ஒரே ஒரு ஜன்னல் வழியாக வெளிச்சமும் குளிர்காற்றும் வந்து கொண்டிருந்தது. நரேன் ஜன்னல் கதவை முழுதும் சாத்தினான் ! அறைக்குள் புழுக்கம் அதிகரித்ததால் ரிது அவனை விட்டு விலகி கட்டாந்தரையின் சில்லிப்பை விரும்பி அங்கு சென்று படுத்துக் கொண்டாள் ! தனக்கு மட்டும் காற்று வரும்படி லேசாக ஜன்னலை திறந்த நரேன், கன்னத்தை துடைத்துக் கொண்டு வசதியாகப் படுத்துக் கொண்டான்………. அவன் மனிதன்தானே? விடிந்தது. ... Read More »
தங்கத் தண்டு – 17
March 12, 2015
அந்தரீஸுக்கும் மூச்சுத் திணறியது. நிலத்தில் போட்ட மீனாகத் திணறி முடித்தான். அவன் வாய் திறக்க முயற்சித்த அதே விநாடி… ஒரு கை அவன் மூக்கையும் வாயையும் பொத்தி குளத்தின் அடித்தரைக்கு இழுத்துப் போனது! அடித்தரையில் அவனைப் படுக்க வைத்து வாயோடு வாய் வைத்து காற்றை ஊதி மூச்சு திணறலை சரிப்படுத்திய பின் திரும்பவும் மூக்கையும் வாயையும் பொத்தியது! இரவு பத்து மணி இருக்கலாம். ரிது நரேனின் மடியில் கை போட்டு கதையளந்து கொண்டிருந்தாள். நரேன் தன் சுபாவத்துக்கு ... Read More »
தங்கத் தண்டு – 16
March 12, 2015
ஸ்தனகிரி குகை முழுக்க ரத்த எழுத்துக்களும், சிறுத்தைகள் பிய்த்து போட்ட மிச்சமும்… ரத்த வாடை இன்னமும் அடித்துக் கொண்டிருந்தது. மண்டையோடு பிய்ந்து வந்த கொத்து முடி குகைக்கு வெளியே செடியில் மாட்டியிருந்தது. நரேன் நிதானமிழந்து குகையின் சுவரை கைகளால் குத்தி தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். கைகளில் புள்ளி புள்ளியாய் ரத்தம்! அவன் லாவண்யாவை நேசித்தான்; மனமார நேசித்தான். எத்தனை முறை அவளை மனதுக்குள் கட்டித் தழுவி இருப்பான், எத்தனை முறை சின்ன உதடுகள் கரைந்து போகுமளவு ... Read More »
தங்கத் தண்டு – 15
March 12, 2015
சுதர்சனாவின் குறுஞ்செய்தியை நாற்பது நிமிடம் கழித்துப் பார்த்தான் அந்தரீஸ். ஐயையோ! அவள் விரல் ரேகையை ரெஜிஸ்டர் பண்ணவில்லையே! அதைப் பற்றி பேசினதே இல்லையே! சுதர்சனா நாத்திகை ஆயிற்றே! தேவியின் பாதங்களில் கை பதிக்க மாட்டாளே! உடனே ஃபோன் செய்தான்! எடுக்கப்படவில்லை! விபரீதம் நிகழ்ந்து விட்டதா? சுதர்சனாவின் குறுஞ்சிரிப்பும், புத்திசாலித்தனமும்… தாயே விஷ்ணு துர்க்கா! சுதர்சனாவுக்கு ஏதும் ஆகியிருக்கக் கூடாது! என்னால் தாங்க முடியாது! உனக்கு விரதமிருந்து முடி காணிக்கை செலுத்துகிறேன்.. டிரைவருக்காக காத்திராமல் தானே வண்டியோட்டி வந்தான். ... Read More »
தங்கத் தண்டு – 14
March 12, 2015
லாவண்யாவின் வீடு வீட்டைத் தலைகீழாய்ப் புரட்டிக் கொண்டிருந்த விக்டர் மார்ஷலுக்கு அவன் தேடியது கிடைத்தது! தலை சுற்றி ஒளி வட்டத்தோடு நோவாவின் மரப்பாச்சி பொம்மை! அப்போதுதான் அவன் சொந்தக்காரனிடமிருந்து ஃபோனும் வந்தது! என்னது? விக்டர் மார்ஷலின் அத்தனை சட்ட விரோதச் செயல்களும் கொலைகளும் ரத்தத்தில் எழுதப்பட்ட மரண வாக்குமூலமாக வெளி வந்து விட்டதா? அது “பல்ஸ்” பத்திரிக்கையில் கவர் ஸ்டோரியாகப் பிரசுரமாகப் போகிறதா? அதெப்படி? “பல்ஸ்” பத்திரிக்கை நெட்டிலும் வருமே? உலகம் முழுக்க அதற்கு வாசகர்கள் உண்டே; ... Read More »
தங்கத் தண்டு – 13
March 12, 2015
சகாக்களிடமிருந்து விக்டர் மார்ஷலுக்கு கடைசியாகத் தகவல் வந்தது இரவு ஒரு மணிக்கு! அதன் பிறகு ஒரு தகவலும் இல்லை. விக்டர் ஃபோன் செய்தால் ரிங் போனது; எடுப்பாரில்லை. இரவு இரண்டு மணிக்கு மேல் எல்லாமே நிசப்தம்! ஏதோ விபரீதம்! “ஸ்வர்ணகிரியா? ஸ்தனகிரின்னு ஞாபகம்! ” லாரலின் வார்த்தைகள் காதில் ஒலித்தன! கொலை வெறியோடு புறப்பட்டான் லாவண்யாவைத் தேடி….! லாவண்யாவின் வீடு கதறி அழுது கொண்டிருந்தாள் லாவண்யா! எதிரில் லாவண்யாவின் தாய் பட்டுப்புடவை, தங்க வளை அணிந்த நிலையில் ... Read More »
தங்கத் தண்டு – 12
March 12, 2015
அன்று லாவண்யா காலை ஏழு மணிக்கே சித்தா கிளினிக் கிளம்பிக் கொண்டிருந்தாள். வழியில் கண்டமங்கலம் குளத்தருகில் போலிஸாரும் வேறு சிலரும் நின்றிருந்தனர். குளத்திலிருந்து ஒரு ஆண் சடலத்தை வெளியில் எடுத்தனர். அடடா, நரேன் மேல் பாம்பை ஏவி விட்ட சாக்கு வாலா! யாரோ அவனை குளத்தில் மூழ்கடித்துக் கொன்றிருக்கின்றனர். சாக்கு வாலாவின் மூடிய கையைப் பிரித்து எதையோ எடுத்தார் இன்ஸ்பெக்டர். ஒரு கைக்கடியாரம்! கைக்கடியாரத்தை பார்த்த மாத்திரத்தில் லாவண்யாவுக்குப் புரிந்தது- விக்டர் மார்ஷலின் வாட்ச்! இதன் பொருள், ... Read More »
தங்கத் தண்டு – 11
March 12, 2015
பாண்டிச்சேரி தன் வீட்டு தங்கத்தண்டு ஓவியத்தை தலை கீழாகப் புரட்டி ஆராய்ந்து கொண்டிருந்தாள் சுதர்சனா. வெற்றிடமாகத் தெரிந்த ஓவியத்தின் பின்புறம் லேசாக அமிலம் சேர்த்து அகச்சிவப்பு கதிரில் வைத்து போட்டோ எடுத்தாள். போட்டோவை சில்வர் நைட்ரேட் கரைசலில் முக்கி இன்னொரு போட்டோ எடுத்து ஸ்கேன் பண்ணி பார்த்தபோது…. எழுத்துக்கள் தெரிந்தன! ஏதோ பாட்டு.. “ஸ்தன மத்ய” என்று தொடங்கியது! இரண்டு மார்பகங்களுக்கு இடையில் புறப்பட்டு நாபியில் லாண்ட் ஆவதா? ஐயையே? காமாந்திரப் பாட்டாக அல்லவா இருக்கிறது? இதையா ... Read More »