Home » 2015 » March (page 15)

Monthly Archives: March 2015

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 9

அன்று புதன் கிழமை. ஒன்றரை மாதம் அசம்பாவிதம் இல்லாமல் ஓடி விட்டது- அதாவது நான் பிரைவேட் செக்யூரிட்டி வைத்த நாளிலிருந்து! என் முதலாளி கூட இதற்காக என்னைப் பாராட்டினார். நான் கேட்ட பத்திரிக்கைகள் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன் நவீனை சந்தித்தேன். தன் கான்ட்ராக்டை வெற்றிகரமாக முடிக்கப் போகிறார் என்றே தோன்றியது. வீட்டுக்குச் சென்று முதலாளியைப் பார்த்து பேசி விட்டு வந்தார். நானும் கூடப் போயிருந்தேன். வரும் வழியில் அவர் பாணியில் பேசிக் கொண்டு ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 8

அன்று ஞாயிற்றுக் கிழமை. இந்த பலீனா எப்படிபட்டவர்? முதன் முதலாக என் நெற்றி சுருங்கியது. நவீன் மேல் இவருக்கு என்ன கோபம்? ஒரு வேளை… ஒரு வேளை இவர்தான் ஜூவாலாவின் அக்கா அன்னிகாவா? நெற்றியை தேய்த்துக் கொண்டேன். அன்னிகாவுக்கு இன்றைக்கெல்லாம் வைத்துக் கணக்கிட்டாலும் வயது இருபதுக்கு மேல் போகாது. பலீனாவுக்கு என் வயது. இது உடற்கட்டிலும் மூட்டு அசையும் விதத்திலும் மனமுதிர்ச்சியிலும் தெரிகிறது… நவீனால் பாதிக்கப்பட்ட பெண் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொண்டு வந்திருக்கிறாளா? பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 7

அன்று சனிக்கிழமை. காலையில் நானும் பலீனா மேடமும் சமையலறையில் மேற்பார்வை செய்து கொண்டிருந்தோம்- பலீனா மேடம் என்னை ஜாலியாக வம்பிழுத்துக் கொண்டிருந்தார். பணியாளர்கள் காய்கறியில் பூக்கள் செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மஞ்சள் குடை மிளகாயில் பூ செய்து பெண் பணியாளரிடம் நீட்ட, அவர் வேறு பக்கம் சென்று விட்டார். “கல்யாணமான பெண்ணுக்கு மஞ்சள் பூ கொடுத்தால் வாங்குவாளா?” என்றார் பலீனா வேடிக்கையாக. “என்னவாம்” என்றேன் நான். “ஜீ, அதெல்லாம் காதலிக்கிறவங்களுக்கு தெரிய வேண்டிய சமாச்சாரம். உங்கள மாதிரி ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 6

அன்று வெள்ளிக் கிழமை. விடிந்ததும் விடியாததுமாக எலக்ட்ரீஷியனை வெளியே அழைத்துக்கொண்டு போனேன். கூட்டமே இல்லாத பெட்டிக்கடையில் உட்கார்த்தினேன். “என்ன சார், எந்த ஹோட்டல்காரனும் அவனோட ஹோட்டல்ல டீ குடிக்க மாட்டானோ? ” – அவர் கேலியை புறந் தள்ளினேன். “சொல்லுங்க, ராத்திரி நடந்தது ஆக்ஸிடெண்டா, சதியா? ” தீவிரத்தை புரிந்து கொண்டார் எலக்ட்ரீஷியன். “ சார், ஷாட் சர்க்யூட் ஆனா தீப்பொறி வரும். அப்புறம்தான் பவர் கட்டாகும். அந்த தீப்பொறியிலேயே தீ விபத்து வரலாம்; பார்த்தீங்கள்ள? ஸ்விச்சை ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 5

அன்று வியாழக் கிழமை. கருமேகம் போர்த்திய வானம் எந்நேரமும் மழையை கொட்டி விடுவேன் என்று பயமுறுத்தியது. அவ்வபோது இடியும் மழையும் வேறு. வழக்கப்படி மாலை ஏழு மணிக்கு வகுப்பு முடிந்து சமையலறை விட்டு வெளியே வந்தேன். வரவேற்பறையின் மத்தியில் டீபாய் மேல் சின்ன அட்டைப் பெட்டி இருந்தது. வண்டி உருளும் சத்தம் கேட்டுத் திரும்பினேன். ஆரண்யா மேடம் சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டு அறையிலிருந்து வெளிப்பட்டார். “குட் ஈவினிங் மேடம், ” என்றேன். “ஏதாவது உதவி வேண்டுமா? ” ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 4

அன்று செவ்வாய்க் கிழமை. மாலை ஐந்து மணி. பங்களாவின் சமையலறையில் பார்வதிக்கு ‘ஸ்ட்ப்டு எக்‘ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து விட்டு அதற்குப் பதிலாக சோயா உருண்டை, சிக்கன் அல்லது காளான் அடைத்து மைதா பிசினால் முட்டையை ஒட்டி வேக வைப்பது. கொழுப்பற்ற புரத உணவு. அவளை தனியே செய்யச் சொல்லிவிட்டு டைனில் ஹால் பக்கம் வந்தேன். அப்படியே கையை கட்டிக் கொண்டு கோழித்தூக்கம் போட்டபோது… “வீல்” என்ற பார்வதியின் அலறலும், தீய்கிற ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 3

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 3

அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஆறு மணிக்கு வெள்ளை வெளேர் என்ற செஃப் டிரெஸ்ஸில் ஓட்டமும் நடையுமாக ஒரு பெண்மணி வந்தார். வெளேர் முகத்தில் ஏகப்பட்ட சுருக்கங்கள். செம்பட்டை தலை முடி; சரிந்த வயிறு. அதிகமாக சக்தியை விரயம் செய்யாமல் எனக்கு மாத்திரம் கேட்கிற மாதிரி பேசினார்; “ஐ யம் பலீனா. ” அவரை வரவேற்று உபசரித்து அவருக்கான அறையைக் காட்டினேன். அடுத்த அரை மணி நேரத்தில் எனக்கான வேலைச் சுமையில் பாதியை பங்கிட்டுக் கொண்டார்! அன்று ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 2

அன்று புதன் கிழமை. முகூர்த்த நாள். ஹோட்டல் அறைகள் எல்லாமே நிரம்பி வழிந்தன. அதிகாலை நான்கு மணியிலிருந்து நானும் என் குழுவினரும் பறந்து பறந்து ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது என் பாஸ் ஜெகதீஷ் குமாரிடமிருந்து ஃபோன். வீட்டுக்கு வரச் சொன்னார். அவர் பங்களா ஹோட்டலிலிருந்து பத்து கிலோ மீட்டர். காரைக் கிளப்பிக் கொண்டு போனேன். இயற்கைக் காற்று சதிராடும் ஹால்… “மூணு முக்கியமான விஷயம் சூரி’’ என்றார், மளமளவென்று ஷேவ் செய்த முகவாயை வருடிக் கொண்டே. நான் ... Read More »

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 1

ஹோட்டல் கோல்டன் பாலஸ் – 1

மிஸ்டர் ஜெகதீஷ் குமார்: வயது ஐம்பத்து மூன்று. ஹோட்டல் கோல்டன் பாலஸ் ஓனர். என் முதலாளி. கோடிஸ்வரர்; வருமான வரியெல்லாம் கட்ட மாட்டார். மிஸஸ் ஆரண்யா: ஜெகதீஷ் குமாரின் மனைவி; பிரபல ஆயுர்வேத வைத்திய நிபுணரான வால்மீகியின் மகள். வயது ஐம்பது. சமூக சேவை, மாதர் சங்கம் என்று வீடு தங்காத பெண்மணியை கடந்த ஆறு மாதமாக ஒரு கார் விபத்து சக்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது. இடுப்பெலும்பு சேதமுற்றவர். உலோக இடுப்பு பொருத்தி இருந்தாலும் தொடர்ந்து ... Read More »

தங்கத் தண்டு – 21 இறுதி அத்தியாயம்

தங்கத் தண்டு – 21 இறுதி அத்தியாயம்

சுரங்கத்தின் மறு பாதை தனகிரி தாண்டிப் போகும். அங்கிருந்து புதுச்சேரி போய், சுற்றி வளைத்து கடல் மார்க்கமாய் இலங்கை சென்று தப்பித்த விக்டர் மார்ஷல் இப்போது தனியார் விமானத்தில் ஜூடி பக்லே என்ற விமானியுடன் பசிபிக் கடலிலுள்ள எரிமலைத் தீவுக்கு போய்க் கொண்டிருக்கிறான். நூற்று இருபது கிலோ எடையில் ராட்சசன் போல் இருந்த ஜூடி பக்லே கள்ளமறியாதவன். பணத்துக்காக விக்டர் மார்ஷல் ஏவிய வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். விக்டர் எரிமலைக் குழம்பு வருகிற வழியில் பள்ளம் வெட்டச் ... Read More »

Scroll To Top