ஜோனாதன் மறுநாள் மிகவும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்தார். இரண்டுநாள் பயணக் களைப்புக்கு நிம்மதியான உறக்கம். காலைக்கடன்களை முடித்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்கு வந்தார். அவருக்காக பிரபு டேபிள்மீது வைத்துவிட்டுப் போயிருந்த கார்டு ஒன்றை எடுத்து வாசித்தார். “எனக்காகக் காத்திருக்க வேண்டாம். கொஞ்ச நேரத்திற்கு இங்கு இருக்கமாட்டேன். – டிராகுலா.’ டேபிளில் இருந்த சுவையான சிற்றுண்டியை எடுத்து வயிறுமுட்டச் சாப்பிட்டார் ஜோனாதன். சாப்பிட்ட பின்பு அந்த டேபிளைச் சுத்தம் செய்ய வேலைக்காரர் யாரையாவது அழைக்கலாம் என்று நினைத்தார். அதற்கான ... Read More »
Monthly Archives: March 2015
ரத்த காட்டேரி – 6
March 17, 2015
பிரபு கடிதத்தை வாங்கி கவனத்துடன் வாசித்துவிட்டு, ஜோனாதனிடமே கொடுத்து வாசிக்கும்படி கூறினார். ஜோனாதன் வாங்கிப் படித்தபோது கடிதத்தின் ஒரு பகுதியில் தன்னைப் பற்றிய வாசகங்களையும் கண்டார். “தொலைதூரப் பயணம் செய்ய முடியாதபடி வாத நோயால் கடுமையாக நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கும் தங்களுடைய நாட்டுக்கு வரமுடியாது போனது வருத்தம்தான். இருந்தபோதிலும் என்னுடைய முழுமையான நம்பிக்கைக்குரிய ஒரு பிரதிநிதியை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறேன். ஜோனாதன் ஹார்க்கர் மிகுந்த கெட்டிக்காரர் மட்டுமின்றி விசுவாசமானவரும்கூட. தெளிந்த தீர்மானமான முடிவை எடுப்பதில் வல்லவர் இவர். ... Read More »
ரத்த காட்டேரி – 5
March 17, 2015
ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்றும் தெரிய வில்லை. நடுக்கமும் வியர்வையும் வழிய நின்று கொண்டிருந்த அவர் தன்னுடைய நிலை இப்படியாகி விட்டதே என்று வருந்தினார். தான் லண்டனில் இருப்பதாகவும் தனக்கு நேர்ந்ததெல்லாம் ஒரு கனவுதான் என்பது போல நினைக்கத் தோன்றியது. நடந்த உண்மை கனவாக முடியாதே! வழக்கறிஞர்களின் உதவியாளர் களுக்கெல்லாம் தன்னைப் போன்ற நிலைமைதானா? தான் இப்போது டிரான்சில்வேனியாவின் கார்பெத்தியன் மலைப் பகுதியில்தான் இருக்கிறோம் என்ற நிஜம் அவரை பயங்கொள்ளச் செய்தது. பொழுது விடியும்போதுதான் இந்தக் ... Read More »
ரத்த காட்டேரி – 4
March 17, 2015
அப்போது எதிர்பாராத நேரத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது. பளீரென ஒருவித நீலநிற வெளிச்சமானது அந்த வண்டிக்கு இடதுபுறமாகத் தோன்றியதுதான் தாமதம், அந்த வண்டிக்காரர் படக்கென வண்டியிலிருந்து இறங்கி எங்கேயோ மறைந்து காணாமல் போய்விட்டார். ஜோனாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எவ்வித அசைவுமின்றி அப்படியே உட்கார்ந்திருந்தபோது, ஓநாய்களின் சத்தம் மெல்லக் குறைந்தது. அப்போது அந்த வண்டிக்காரர் திரும்பவும் அங்கே வந்து சேர்ந்தார். மீண்டும் பயணம் தொடர்ந்தது. இதே சம்பவம் திரும்பத் திரும்ப நிகழ்ந்தபோதும் ஜோனாதனுக்கு ஏதும் புரியவில்லை. கடைசி முறையாக ... Read More »
ரத்த காட்டேரி – 3
March 17, 2015
ஜோனாதன் அப்படிப் பார்ப்பதை வண்டிக்காரர் பார்த்துவிட, “அய்யா உங்களை அழைத்துக்கொண்டு செல்ல வேண்டிய வண்டி ஒன்றும் காணவில்லையா? அப்படியென்றால் உங்களை யாரும் எதிர்பார்க்க வில்லை என்றுதானே அர்த்தம். எல்லாம் நல்லதுதான் அய்யா. இதே வண்டியிலேயே இப்போதே புக்கோவினாவுக்கு திரும்பிப் போய் விடுங்கள். நாளைக்காவது நாளை மறுநாளாவது வேண்டுமானால் நாம் திரும்பி வருவோம். அதுதான் உங்களுக்கு நல்லது” என்று வண்டிக்காரர் கூறினார். அச்சமயம் அந்த வண்டிக்காரர் மேலும் ஏதோ பதில் சொல்ல வாய் திறந்தபோது, சாரட்டில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் ... Read More »
ரத்த காட்டேரி – 2
March 17, 2015
ஜோனாதன் ஒன்றும் தெரியாதவராய் தலையசைத்தபோது, இன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் தினம். இன்றைக்கு நள்ளிரவில் இந்த உலகத்திலுள்ள துஷ்ட ஆவிகள் அனைத்தும் தூக்கத்திலிருந்து விழித்து எழுந்து வரும் நாள். நீங்கள் இன்று பயணம் செய்வதால் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியவில்லை” என்றாள் அந்த வயதான பெண்மணி. அவ்வாறு படபடப்புடன் கூறிக் கொண்டிருக்கும் அந்த வயதான பெண்மணியை சமாதானப்படுத்துவது எப்படி என்று ஜோனாதனுக்குப் புரியவில்லை. தன்னுடைய பயணம் பற்றிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அந்தப் பெண்மணி புரிந்து ... Read More »
ரத்த காட்டேரி – 1
March 17, 2015
இதுவரை தான் வாசித்த எந்த ஒரு புத்தகத்தி லாகட்டும் வரைபடங்களாகட்டும் நிலப்பகுதி பற்றிய செய்திகளிலாகட்டும் “டிராகுலாக் கோட்டை’ என்பதைப் பற்றி ஜோனாதன் ஹார்க்கர் எந்த ஒரு தகவலையும் அறிந்திருக்கவில்லை. டிராகுலா பிரபு எழுதியிருந்த கடிதத்தில் அவர் குறிப் பிட்டிருந்த பிஸ்ட்ரீடஸ் நகரத்தின் பெயர் மட்டும் எப்போதோ கேள்விப்பட்டதாக இருந்தது. கார்பெத்தியன் மலைப்பகுதி என்பது அந்த நாட்டின் ஒட்டுமொத்த மூட நம்பிக்கையின் இருப்பிடமாகத் திகழ்வதை தன்னுடன் பயணம் செய்பவர்கள் கூறியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஜோனாதனுக்கு மட்டும்தான் தூக்கம் ... Read More »
மிரட்ட வரும் பேய் – 10 இறுதி அத்தியாயம்.
March 16, 2015
நகரிலிருந்து சற்று தூரத்தில் நாலாப்புறமும் வனப்பகுதிகளால் சூழ்ந்த இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தினமும் காலைக்கதிரவன் வெளிவருமுன்பிருந்து மாலை வெயில் மறைந்து இரவு எட்டிப் பார்க்கும் வரை எந்நேரமும் சுற்றுப்புற நகரிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வண்ண வண்ணக்கார்களும் ஆட்டோக்களும் சகிதமாக அந்த கிராமத்துக் குறுகிய சாலையை அடைத்துக் கொண்டு வந்துபோகும்வண்ணமாக இருக்கும். அக்கிராமமே அந்தப் பகல்ப்பொழுது முழுவதும் பரபரப்புடன் காணப்படும். .காரணம் அந்தக்கிராமத்தில் பேய், பிசாசு, செய்வினை, சூனியம் ஆகியவற்றை நீக்குவதாக தன்னை பிரபல்யப்படுத்திக் ... Read More »
மிரட்ட வரும் பேய் – 9
March 16, 2015
பசுமை பரந்த வயல்வெளியாய்ப் பெற்று தென்னை, மா, பலா என்று பலவகை மரங்கள் ஒருபுறம் படை சூழ அழகிய இயற்க்கையமைப்பைக் கொண்ட அமைதிக்கு எடுத்துக்காட்டாய் ஒரு அழகிய சிறு கிராமம். விவசாயமே அந்த கிராம மக்களுக்கு பிராதானத் தொழிலாக இருந்தது..ஆதலால் இரவு வேளைகளில் வெளியில் செல்லும் விவசாயிகள் ஏதாவதொரு விளக்குத் துணையுடன் தான் சென்று வருவார்கள். கள்ளமில்லா உள்ளம் படைத்த இவர்களின் மனதில் காத்து,கருப்பு,பேய் என்று இந்த ஆவிகளின் மேல் அபார நம்பிக்கையும் இருந்து வந்தது. காரணம் ... Read More »
மிரட்ட வரும் பேய் – 8
March 16, 2015
அது நம் நாட்டின் பெருநகரங்களில் ஒன்றாகும். அங்கு பல மாநிலத்தவரும் வெளிநாட்ட வரும் வந்து போகும் வணிக மாநகரம். எந்நேரமும் வாகனங்களும் பொதுமக்களும் பரபரப்புடன் காணப்படும் அம்மாநகரின் ஒருபகுதியில் இரவு வேளைகளில் பேய் நடமாட்டம் உள்ளதாகவும் அடிக்கடி குழந்தைகள்,பெண்கள் காணாமல் போவதாகவும், தனியே செல்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும் தினசரி நாளிதழ்களிலும் டி வியிலும் தினமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இது என்னவென்று தெரியாமல் பொதுமக்களையும் காவல் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆகவே அந்தப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு ... Read More »