வருஷம் 1960 காரவீடு
நடு இரவு மணி ஓன்று, ஐயோ யாராவது ஓடிவாங்களென்னு ஒரு குரல், ஐயோ பாவி மகளே இப்படி பண்ணிட்டியே, இதுக்காகவா உன்னை சீராட்டி தாலாட்டி வளர்த்தேன்.
அதே வருசத்திலே இரண்டு மாதம் கழித்து,நடு இரவு மணி ஓன்று
நான் உன்னை என்ன பண்ணினேன், நீ இருக்கும் போதுதான் எங்களை நிம்மதியா இருக்க விடலே, செத்தும் எங்க நிம்மதியை கெடுக்க பேயா அலையுறியே.
அதே நாள் அதி காலை 5 மணி, மணியக்கார ஐயா..ஐயா.. இங்க வாங்களேன், அம்மா.. அம்மா என் அழ ஆரம்பித்தாள்.
“அட..சீ இப்ப என்ன இழவு விழுந்து விட்டதுன்னு காலங்காத்தாலே ௬ப்பாடு போடுறே”
“ஐயா அம்மா நம்மளை விட்டு போய்ட்டாங்க, நீங்களே வந்து பாருங்க, அவளுடன் சென்ற மணியன் உத்திரதிலே தன் மகள் மரித்த அதே கயிரிலே தன் மனைவியும் தொங்குவதை பார்த்தார்.”
வருஷம் 2008
ஒரு மாதத்திற்கு முன்
வீட்டிலே யாராவது இருக்காங்களா?
வீட்டின் உள்ளே இருந்து ராஜாமணி அம்மாள் வெளியே வந்தாள்.
‘ஐயா நீங்க யாரு என்ன வேணும்?”
அம்மா,என் பேரு கருப்பையா, இந்த ஊருக்கு புதுசா வந்திருக்க வாத்தியாரு, நான் ஓட்டு பட்டியல் தயார் செய்கிறேன், உங்க வீட்டுல இருக்கிற எல்லோரோட பெயரையும் சொல்லுங்க”
எங்க வீட்டுல மொத்தம் மூணு பேரு, தனது பெயரையும், தன் மகன் பெயரையும் சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவளின் மனநிலை புரிந்து கொண்ட வாத்தியார், “உங்க வீட்டுக்காரர் பேரு எழுதி இருக்கிற சீட்டு இருந்தா கொடு”
தனது குடும்ப அட்டையை எடுத்து கொடுத்தாள், அதிலே உள்ள பெயரை பதிவு செய்துவிட்டு, பெயரை ஒருதடவை வாசிக்கிறேன்னு சொல்லி விட்டு அவர் வாசிக்கும் போது தன் கணவன் பெயரை கேட்டதும், “ஐயா அவரு பேரு அது இல்லைங்கோ”
குழப்பமாக அவளை பார்த்து விட்டு ” என்னம்மா சொல்லுற?”
“ஆமாங்க அவ சொல்லுறது உண்மைதான்” என் தன் பின்னால் இருந்து வந்த குரலுக்கு சொந்தக்காரரை திரும்பி பார்த்தார்.
சரி.. இப்ப உங்க பேரு என்ன?
“ஐயாவுக்கு குடிக்க காப்பி தண்ணி கொடு”
காப்பி தண்ணி எடுத்துவர ராஜாமணி சென்றதும், இப்ப என் பேரு ஜெபத்துரை, இதுக்கு எல்லாம் காரணம் எங்க வீட்டிலே இருக்கிற பேய்தான்.
பேய்க்கும் பேருக்கும் என்ன சம்பந்தமுன்னு தெரியலையே?
அதை என்ன ஐயா கேட்குறீங்க, இந்த மேல் வீட்டுல இருக்கிற பேயை அடிச்சி விரட்ட நான் பண்ணாத சடங்கு இல்லை, கேரளா நம்புதிரிகளை எல்லாம் வச்சி ஓட்டிப்பாத்திட்டேன், காசு காலியானதுதான் மிச்சம், அப்புறமா ஒரு பாதிரியாரிடம் சொன்னேன், அவரு வந்து ஜெபம் பண்ணின பாத்தாரு அப்படியும் போகலை, ஒரு வேளை பேரையும் சாமியையும் மாத்தினா போகுமான்னு மாத்திகிட்டேன். ஆனா பேய் போன பாடு இல்லை, இப்பக் ௬ட மசூதிக்கு போய் ஒரு ஆளை பார்த்து விட்டு வாரேன். அவரு நாளைக்கு வந்து பார்கிறேன்னு சொல்லி இருக்கார்.
எதோ சொல்ல வந்த வாத்தியார், உங்களுக்கு ஆட்சோபனை இல்லைனா நான் மேல் வீட்டை பார்க்கலாமா?
ஐயா வேண்டாம்… உங்களை பேய் அடிச்சிரும்
இதே வீட்டுல இருக்கிற உங்களை அடிக்காத பேய் எண்ணை என்ன செய்யும்?
பதில் சொல்ல முடியாமல் அவரை மாடிக்கு அழைத்து சென்றான், மாடியை சுற்றி பார்த்து விட்டு
இங்கே பேய் இருக்குன்னு எப்படி சொல்லுறீங்க?
பகல்ல அவ்வளவா நடமாட்டம் இருக்காது, ராத்திரி பாக்கனுமே அதோட ஆட்டத்தை, ஒரே கொலுசு சத்தமும் ஆட்டமுமா இருக்கும், செத்துப் போன என் தங்கச்சிக்கும், அம்மாவிற்கும் என் மேல ரெம்ப பாசம் அதுதான் அடிக்கடி நீயும் எங்க ௬ட வா ன்னு அடிக்கடி சொல்லுவாங்க.
வாத்தியார் வீட்டின் அமைப்பை கவனித்து கொண்டு இருந்ததால் ஜெபத்துரையின் வார்த்தைகளை காதில் வாங்கி கொள்ளவில்லை, வீட்டை நன்கு கவனித்து விட்டு ஒரு இடத்தில் கை வைத்தார். வைத்ததும் தூக்கி எறியப்பட்டார்.விழுந்தவர் நினைவை இழந்தார்.
வாத்தியார் நினவு எழுந்து எழும் போது அவரை சுற்றி ஒரு பெரிய ௬ட்டம் இருந்தது, பெரியவர் ஒருவர் “வழி விடுங்க நல்லா காத்து வரட்டும்”, ௬ட்டம் கலைய ஆரம்பித்தது
இன்று
வாத்தியார் ஐயா, நீங்க தான் என் கண் கண்ட தெய்வம், என்னோட நீண்ட நாள் குறையை தீர்த்து வச்ச மகராஜன் நீங்க தான்.p>
நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க ௬டாது, எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான், பேய் ஓட்ட செலவழித்த ரூபாயை வீட்டை திருத்த செலவு செய்து இருந்தால் உங்க பிரச்சனை எப்பவோ தீர்ந்து போய் இருக்கும். மாடி வீட்டுல பேய் இருக்குன்னு யாருமே அங்கே போகாததினாலே வீட்டுல ஓட்டை விழுந்து மின்சார கசிவு ஏற்பட்டு இருக்கு, அதனாலே வருகிற சத்ததாலே அது பேய் தான்னு நீங்க முடிவு பண்ணீட்டீங்க. இதே மாதிரி போய் கொண்டு இருந்தால் நீங்க மாறுவதற்கு மதமே இருக்காது. எதையும் ஆழமா சிந்திங்க, செயல் படுங்க வெற்றி உங்க பக்கம் தான். சரி..சரி நேரமாச்சு நான் பள்ளிக் ௬டம் போகணும் வாரேன்
செல்லும் வழியிலே “வாத்தியாரு முரட்டு ஆசாமிடா அடங்காத கார வீட்டு பேயையே அடிச்சி விரட்டி பிட்டாரு, இனிமேல பேய் ஓட்ட வாத்தியாரை தான் ௬ப்பிடனும்” என்று சொல்வதை கேட்க முடிந்தது.