யாரோ தன்னை பின்னல் இழுப்பதை உணர்ந்ததும் அவன் கை வேகமாக அருகில் இருந்த சுவற்றில் இருந்த ஒரு சிறிய இடுக்கினை பற்றிக்கொண்டான். பயம் அவனுள் ஆழமாக குடிகொண்டிருந்தது.அதில் அவனுக்கு தெரிந்த அரைகுறை நீச்சலும் மறந்து போயிருந்தது. அவன் அந்த இடுக்கினை பிடித்தாலும் அவனதுகால்களை யாரோ பின்னோக்கி இழுத்தனர்.
அவனது நண்பன் தள்ளிவிடும்போது தான் நீரின் உள்ளோட்டதிற்கு அருகில் தள்ளபட்டிருப்பதை உணர்ந்தான் அமுதன். வருகின்ற நீரின் கொந்தளிப்பால் ஒரு பாதி நீர் உள்பக்கமாகவும் மறு பாதி வெளியேயும் அடித்து செல்லும். உள்செல்லும் நீரின் இழுவையினை அன்று தான் அமுதன் முதன் முதலாக பார்க்கிறான். அதனால் அவன் அந்த இடுக்கினை மிக அழுத்தி பிடித்தான். அவனது கைகள் வலிக்கதொடங்கின.
……எதிரே யாராவது உதவிக்கு வருவார்களா என பார்த்தான் எதிரே நீரில் கோபி ஏற்கனவே குதிதிருந்தான். கரையில் சுவற்றின் மீது விஜி தனது ஒரு காலை மட்டும் நீட்டிக்கொண்டு ” டே…. புடிடா… காலை புடிச்சுக்கோ மச்சான்…” என கத்தினான். கோபிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. விஜிக்கு தான் குதித்தால் எங்கே அமுதன் தன்னையும் சேர்த்து நீரினுள் அமுக்கிவிடுவான் என்று அவனுக்கு நன்றாக தெரிந்தது.
அமுதன் நம்பிக்கை இழந்தான். அவனுக்கு ஏதோ நீரின் மேலே தெரிந்தது. அதில் பெரிய மீசை வாய்த்த ஒருமனிதன் கயிற்றோடு வா வா என அமுதனை நோக்கி அழைத்தான். அமுதன் மரணத்தை நேருக்கு நேராக பார்த்தான். மரண பயத்தில் அவனது இதயம் பிய்த்துக்கொண்டு வெளியே வருவது போல் துடித்தது.
உன் வாழ்வு அவ்வளுவு தான் அமுதா என அவன் மனசாட்சி அவனிடம் சொன்னது. அவன் கண் முன்னே அவனது சின்ன வயது தோழி பாத்திமா, அம்மாவின் தாலாட்டு ,கணக்கு ஆசிரியர் மஞ்சுநாதன் , அப்பா, அவனது கல்லூரி தோழி, காதல் சொல்லா காதலி , அண்ணன்கள் , தோழன்கள் என அனைவரும் அவனது கண் முன்னே வந்து போனார்கள்.
தனது கையின் மேலே யாரோ ஏறி நிற்பது போல அவனுக்கு தோன்றியது. கை அவனிடம் ” என்னை வெட்டி எறிந்துவிடு.. என்னால் வலி தாங்க முடியவில்லை” என கெஞ்சியது. கால்கள் நீரின் இழுவையில் வளைந்து அவனது உடலையும் சேர்த்து இழுத்தது.அமுதானால் முடியவில்லை. தனது வாழ்வு முடிந்ததென தெரிந்து கொண்டான்.
அவன் வானது ” அம்மா அம்மா அம்ம்மா …. ” என முனகியது. நண்பர்கள் எவனும் அருகே வரவில்லை.அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அமுதன் கையினை விட துணிந்தான். “போதும்மா நீ தந்த வாழ்வு.. மீண்டும் பிரப்பெனெனில் அது உன் வயிற்றிலே ” என அம்மா வை நினைத்துக்கொண்டான். அவனையறியாமல் கண்ணீர் எட்டிபார்த்து.கண்களை மெதுவாக மூடத்தொடங்கினான் அமுதன். ஆனது கண்ணீர் மெல்ல உருண்டு வந்து தண்ணீரின் மேற்பரப்பை தொட்டது.
தொடரும்…