Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இரை தேடிய இரவுகள் – 7

இரை தேடிய இரவுகள் – 7

எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே..
நிம்மதி வேண்டும் வீட்டிலே….

கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்த அவள் தோளில் மெதுவாக கையை
வைத்தாள் அவள்…

மேடம்..
ம்..
இடம் வந்தாச்சு..

சிரித்துக்கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்திருந்தாள்.. லதா..!
முன்னால் அவர்கள் இருவரும் இறங்கிச் சென்று..
வெளியில் சுற்று முற்றும் பார்த்த பின்…

வாங்க.. என்று சமிக்ஞையைத் தொடர்ந்து .. மெதுவாக அந்தப்
பேரூந்தின் படிகளில் இறங்கினாள்..

எத்தனை கோடி பணமிருந்தாலும் …
மீண்டும் அவள் உள் மனதில் எழுந்த அப்பாடல் வரிகளை அவளால்
உச்சரிக்காமல் முடியவில்லை…

யாருக்காக அடக்கி வைப்பது…சுதந்திரமாகப் பாடினாள்…
அப்போது அவளைக் கடந்து செல்லும் ஒருவர் …

கையில் விலங்கு .. வாயில் பாட்டு… ம்.. என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டு
செல்கிறார்…

லதா…
கையில் விலங்குடன் நீதி மன்ற வாசலை அடைந்துவிட்டாள்..

பாதுகாப்பாக இவளை நீதி மன்றம் வரை அழைத்துவந்திருந்த அரச பேரூந்து
திரும்பிச் செல்ல இவள் வரும் வரை காத்திருக்கிறது…

அருகில் செல்லும் இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகளும் .. அவளை
மரியாதையுடன்.. சிரித்த முகத்துடனே அழைத்துச் செல்கிறார்கள்..

மதிய நேரம்…
நீதி மன்ற வளாகமும் ஒய்வாக இருக்கிறது…

மேடம்… கொஞ்சம் இங்கே நில்லுங்க…
சிறைக்காவலர் வருகிறார்… நீதி மன்றம் உங்களை அழைக்கும் வரை
இந்த அறையில் காத்திருப்போம்….

சிரித்துக்கொண்ட லதா… ஆகட்டும் என்பது போன்று தலையசைத்தாள்…

சொன்னது போல் சிறைக்காவலர்.. வியர்வையைத் துடைத்துக்கொண்டு
வேக வேகமாக வருகிறார்…

லதா…மட்டும் அந்தப் பாடலை விடவே இல்லை…
தொடர்ந்து பாட எத்தனித்த லதா…

இந்தத் தடவை…எத்தனை கோடி…என்று முதல் வரிகளை அவள் முடிக்க முன்….

16 ட்ரக் ஒலியமைப்புக் கொண்ட டிஜிட்டல் தியேட்டரில் 007 படங்களில் வரும்
துப்பாக்கிச் சத்தம் போல்…

டுமீல்…. டுமீல்…..
டுமீல்….

எதிர்பாராத அதிர்வு நீதி மன்ற வளாகத்தில்….
பாடிக்கொண்டிருந்த லதா…

அமைதியாக சாய்கிறாள்…..
கீழே விழ முன் அவளைத் தாங்கிக்கொண்ட அருகில் இருந்த
பெண் போலீஸ்..

உதவி… யாராவது ஆம்புலன்ஸ்…க்கு போன் …..
என்று சப்தமாக அலறினாலும்… கேட்க யாரும் அங்கே இல்லை
என்ற அளவுக்கு…. ஓடி ஒளிந்துவிட்டது மக்கள் கூட்டம்….

குற்றுயிராய்க் கிடந்த லதா…
சில நிமிடப் போராட்டங்களின் பின்னர்…
நீதி மன்றத்தில் நின்றிருந்த அரச வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு…
அருகில் இருந்த தனியார் வைத்தியாசாலையில் …

இப்போது ஐசியு பிரிவு பரபரப்பில்….
கைதி லதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சியில்..

நீதி மன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு…
செய்தி தீயாகப் பரவிக்கொண்டிருக்கின்றது…

காவல் துறை உசார் நிலையில்…
வைத்திய சாலை வட்டாரமே போலீஸ் பாதுகாப்பில் வளைக்கப்பட்டுள்ளது..

லதா…உயிர் பிழைப்பாளா….
பல மணி நேர போராட்டம்…

நேரம் இரவு 9.33…
அருகில் மருத்துவர்கள் எவரும் இல்லை…

அடிக்கடி கண்ணாடி வழியே வந்து எட்டிப் பார்க்கும்… போலீஸ்
கான்ஸ்டபிள் கூட களைப்படைந்துவிட்டார்….

இரவின் அமைதி சூழ்ந்துகொண்டிருக்கிறது….

தட்டுத் தடுமாறி..பிதுங்கித் திறக்க முற்படுகிறது .. லதாவின் கண்கள்..
ம்….முடியவில்லை

மீண்டும்…முயற்சிக்கிறாள்… முடியவே இல்லை..
போராட்டம்….

கலங்கித்தெரியும் வெளியுலகத்தை…
அவள் கண்கள் அந்த சிறு இடைவெளியூடாக பார்க்கிறது…

எதுவுமே தெளிவாக இல்லை..
அவள் இதயம் … ஒரு சிறு உணர்வைக் கொடுக்க..

சிந்திக்கத் தொடங்கியது அவள் மூளை..

அன்று மாலை…

லதா…
அதிகாரக்குரலில் அழைத்தான் கனகன்…

கனகன்..அவளுக்கு அன்பான கணவன்…
அவளை ராணி போன்று .. போன்றல்ல ராணியே தான்…

அப்படியானால் கனகன் என்ன ராஜாவா…
ம்..ஒரு வகையில் அதுவும் உண்மை தான்…

புரியவில்லையா…
நகரின் நடுப்பகுதியில் வாழும் கனகன்…

தலைநகரையே குலை நடுங்க வைக்கும்… ஒரு தாதா..பெரிய ரவுடி..
கனகன் அந்தப் பகுதியால் நடந்தாலே… வீட்டுக்கதவுகள்.. திறக்காது…

பயம்… அவ்வளவு பயம்..
மனதளவில் அவனும் மனிதன் தான்…

ஆனாலும் … பயம்…
ஏன் …
அவன் பெரிய தாதா….

கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,பஞ்சாயத்து….
போதைப் பொருள் கடத்தல் அவன் பிரதான தொழில்..

ஏன்….
வேறு எதைத்தான் செய்வது…

ஒரு தாதா என்றால் சும்மாவா…
சுற்றி வர எத்தனை எதிரிகள்… எங்கேயும் தனிமையில் செல்ல முடியாது

அண்ணன்…அண்ணன்.. என்று எப்போதுமே சுற்றிக்கொண்டிருக்கும்
தொண்டர் கூட்டம்….

குடும்பப் பிரச்சினைகள் முதல்… வட்டி,கடன்,வியாபாரம் என்று
இவன் உதவியைத் தேடி வரும் பொது மக்கள்…

லஞ்சம்…வாங்கிக்கொண்டு சேவை புரியவும்…
கண்டும் காணாதுவிடவும் … அரச சேவையாளர்கள்…. போலீஸார் உட்பட..

சுற்றிக் காணப்படும்… ஆபத்தை எதிர்நோக்க எந்த நேரமும் விழிப்புடன்
இருக்கும்… வாழ்க்கை….

பயங்கரமான சூழ்நிலை…கொளுத்த பணம்…
அவனைப் பார்ப்பவர்களுக்குப் பயம்…

ஆனால் அவனும் மனிதனே….

வெளியில் செல்லத்தயாராகிக் கொண்டிருந்த கனகன்…
எப்போதும் போல அக்கறையுடன் லதாவிடம்…

லதா… கவனம்…
தனியா… எங்கேயும் போகக்கூடாது….

சரிங்க .. எங்க போறிங்கன்னு கேட்க விரும்பல…ஆனா…
சிரித்தவனாய்… தூரத்துல ஒரு இடத்துக்கு…
சின்ன வேலை…
ஏங்க..
ம்..சொல்லு…
இறுக்க அணைத்துக்கொண்டாள்…
எனக்கு உங்கள விட்டா யாரும் இல்லை….. கவனமா..
என்று சொல்லி முடிக்க முன் அவளை பேச விடாமல்…. விழி பிதுங்க
வைத்தன அவன் உதடுகள்….
எனக்கும் தெரியும்… ஆனா இதுதான் நம்ம வாழ்க்கை….
சரி…நீயும் கவனம்….
விட்டு விலகத் தயாரானான் கனகன்…

அப்போது அவனிடம்…
ஏங்க…
ம்..
யார் யார் கூட வாராங்க…
ரவி… பாலா…
அசோக் வரலயா…
அவனும் வாரான்…
அப்போ இங்க ….
செல்லம்..பாண்டி..முத்து அவங்கெல்லாம் இங்கதான்…

படையணிகளின் பெயர்களைக்கூறி விட்டு திரும்ப முன்..
அவன் கையில் இருந்த செல்… அலறுகிறது..

என்ன ரெடியா… வண்டியை இங்க கொண்டுவா…
அவசர அவசரமாக வெளிக்கிளம்பினான்… கனகன்…

இரவு 7.30…
கனகன் வீட்டு அழைப்பு மணி….

கனகன் வீட்டுக்கு வருவதென்றால் அவ்வளவு இலகுவான காரியமில்லை
யார் வந்தாலும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும்… கனகன் விசுவாசிகள்..

போலீஸ் செக் போஸ்ட் போன்றில்லை…
சந்தேகம் என்றால்… ஆளே இருக்க மாட்டான்…

கதவு திறக்கப்பட்டது…
வாங்க…
லதா அன்போடு அவனை உள்ளே அழைத்தாள்…

அண்ணன் இல்லையா…
அவர் நாளை தான் வருவார்..

சூடான தேநீர்…
சில நிமிட உரையாடல்….

கொஞ்சம் இருங்க…
எழுந்து சென்ற லதா…
தன் கைப்பையிலிருந்து…ஒரு அழகான மோதிரத்தை கொண்டு வந்தாள்..
அழகா இருக்கு… அவன் புன்முறுவலுடன்..
அவர்தான் வாங்கினார்…
இன்றா…
ம்..இன்று தான் தந்தார்….
பெறுமதியான மோதிரமாம்…
மீண்டும் ஒரு புன் முறுவல்…

சில நிமிட உரையாடல்…
சாப்பிடுவோமா…

என்ன தர…
ம்…இன்றைக்கு வித்தியாசமா நூடில்ஸ….செய்யப்போறன்..
ம்… என்று அவனும் தலையாட்டினான்…

சாப்பாடும் முடிந்துவிட்டது…

சகஜமாகவே சமையலறை வேலைகளை முடித்துவிட்டு வந்தாள் லதா…

இரவாகி விட்டது… வீட்டின் ஜன்னல்கள் … கதவுகள் தாழ்ப்பாக்களை சரி
பார்த்துக்கொண்டிருந்தாள்…

அப்போது தனது கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த அவன்…
எழுந்து கொண்டான்…

லதாவும் உறங்கச் செல்லும் நேரம்…

சிரித்த முகத்துடனே… அவளும் ..

இருவரும் சென்றனர்….
விரிக்கப்பட்டடிருந்த கட்டில் அவர்களை இளமையுடன் தாங்கிக் கொண்டது……

தன்நிலை மறந்த கோலத்தில்…
காமசுகத்தின் இச்சைப் படலங்கள்….
இரண்டு வாரமாச்சு… இடையில் லதாவின் சிறிய முணகல்…
ம்… பேசுவதற்கு அவன் தயாரில்லை…

இன்பலோகப் பிடியில்…சிக்கித் தவிக்கும் நேரம்..
அதை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்…

மூடியிருந்த முன் கதவு திறக்கப்பட்டது………
விளக்குகள் போடப்பட்டது….

வீட்டுக்குள் கனகன்…..
பெருமூச்சோடு .. முன்னறை சோபாவில்… தலை சாய்த்தான்…

கட்டிலில்….
கட்டிப் புரண்டவர்களுக்குத் திரும்பிப் பார்க்க நேரமில்லை…

எழுந்தான் … கனகன்…
அவனை எப்பவோ கொன்றிருக்கனும்…
புலம்புகிறான் கனகன்…

ஒருவரையொருவர் இழந்த… களைப்பில்… கண் திறக்க
விரும்பாத…. காதலர்கள் உள்ளே…

ம்… விடியட்டும்…முதல் வேலை அவனுக்கு ஆப்பு…
கண்களில் கோபம் பொங்க…கனகன்…

கலையுணர்வுடன் பொங்கியெழுந்த காதல் நினைவுகளில்…
அவர்கள்… மயக்கமும் உறக்கமும் ஒன்றரக் கலந்த நிலையில்..

சென்ற இடத்தில்..ஏதோ பிரச்சினை…
கனகனுக்கு கோபம்….. ம்… விடியட்டும் என்று தன் கோபத்தை
அடக்கியவனாய்…

முகத்தில் கொஞ்சம் நீர் தெளித்துவிட்டு….
நேரத்தைப் பார்க்கிறான்…

இரவு 10.50..

அணிந்திருந்த சட்டை பொத்தான்களைக் கழற்றியவாறு…
அறைக் கதவை திறந்து….

விளக்கை எரித்த கனகன்……
விழித்தெழுந்த காதலர்கள்…

அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை…
பிறவியிலேயே கோபக்காரன்….
திரும்பினான்..
வேகமாகத் திரும்பினான்…
சோபாவில் வீசியெறிந்த துப்பாக்கியை எடுக்க கனகன் திரும்ப…
கட்டிலறைக் ஜன்னல் வழியே…. இவன் எட்டிப் பாய….
பொட்டுத் துணி கூட இல்லாத  நிலையில்…
ஓடி வந்த லதா….

கனகன் கால்களில் விழுந்தாள்…
ஐயோ…. கதறினாள்… அவனை ஒன்றும் செய்யாதிங்க…
ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த கனகனின் கால்களில்…
சுருங்கிக் கிடக்கின்றாள் லதா….

ஏய்… ஏய்.. எழுந்திரு… நாயே… எழுந்திரு…
கனகனின் கண்களில் கோபம் கொந்தழித்தது….
இரண்டு கால்களையும் இறுக்கிப்பிடித்துக்கொண்டவள் விடவே இல்லை..

துப்பாக்கி தயாரானது…
குண்டுச் சத்தம் கேட்கவில்லை…
ஏன்…
அவன் சுடவில்லை..
ஏன்..
முடியவில்லை… அவனால் முடியவில்லை…
அப்படியே சாய்ந்தான்….
அதிர்ச்சியும் ஆத்திரமும் ஒன்று சேர … சாய்ந்த கனகன் கால்களை
அவள் இன்னும் விடவில்லை…

கனகன் அழுகிறான்….
ஆம் .. அவனை அறியாமலே அவன் அழுகிறான்…
காலில் சுருண்டு கிடந்தவள் மேலே எழுந்து அவன் உடலோடு இறுக…

ஏய்…விடு..நாயே… போடி …. தள்ளிவிட முனையும் அவன் பலமற்ற
இதயத்தை…அவன் பலவீனத்தை…
அவள் இறுக்கம் நன்றாக பயன்படுத்திக்கொண்டது…
இறுக்கி அணைத்தவள் விடவே… இல்லை….

அழுகை…. பின் … அமைதி….

கனகன் பித்துப்பிடித்தவன் போல்…
ஆனால் இப்போது அமைதியாக இருக்கிறான்….

லதாவின் பிடி தளர்ந்தது….
ஓடிச்சென்று ஆடையணிந்து கொண்டாள்…

அவளும் அழுகிறாள்….

அவள் அழுகையைப் பார்க்க இவனுக்கு நேரமில்லை…
இவனுக்கு பொங்கும் அழுகையை இவனால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை..

நேரம் அறிந்தவளாய்…
உடனடியாக அவனுக்கு சாப்பாடு….

சாப்பிடுங்க..

போடி போ…. நாயே…தூ…
சரி சாப்பிடுங்க..
போ… எட்டி உதைக்க அவனால் முடியவில்லை…
சாப்பிடுங்க…. ப்ளீஸ்….
வயிற்றுப் பசி .. அது இயற்கையான விசயம்…
ஆனாலும் அவனால் முடியவில்லை….
திரும்பவும் எழுந்து ஓடினாள் லதா…
இந்தப் பாலையாவது குடிங்க…
போ… நாயே… அவனுக்கு வேறு வார்த்தையே வரவில்லை…
குடிங்க…..
அழுகிறாள்….
கதறி அழுகிறாள்…

வெறிச்சோடிய பார்வையுடன் அவளைப் பார்த்த கனகன்…
அதே வெறியுடன் எழுந்து அந்தப் பாலைக் குடித்தான்….
எழுந்தான்….

ஆத்திரம் தாங்க மாட்டாமல்… அழுகையுடன் போய் படுக்கையில்
சாய்ந்தான்…

ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும்…
கனகன் அருகில் சென்றாள்… லதா…
அவனை உற்றுப் பார்த்தாள்… அருகில் சென்று…
அவன் நெஞ்சில் கை வைத்து….
மீண்டும் அவன் நெஞ்சில் அவள் முகம் புதைத்து….

திடீரென்று எழுந்தாள் லதா…
போனை டயல் செய்தாள்….

வாங்க… வீட்டுக்கு வாங்க…
ஒன்றும் பிரச்சினை இல்லை வாங்க…
மறு முனையில் அவன் வர முடியாது என்று சொல்கிறான்…
இல்லை வாங்க… நான் சொல்றன் வாங்க…

சில நிமிடங்களில் மீண்டும்… அவன் …
ஓடிச்சென்று அவன் கையைப் பிடித்து வந்தவள்…
கனகன் மலைபோல் சாய்ந்திருப்பதைக் காட்டினாள்…

கனகனைப் பார்க்கும் போதே அவனுக்கு பயம் வந்தது…
ஆனால் லதா அவன் கைகளை இறுகப்பற்றிக்கொண்டிருந்த தைரியம்..
அதுவும் கனகன் முன்னால்…

அவனால் நம்பவும் முடியவில்லை…
ஆனால்…லதா சிரிக்கிறாள்…
சிரிப்புடனே அவனைக் கட்டிலுக்கு இழுக்க…
அவன் பயத்துடன் தயங்குகின்றான்…

வாங்க… வந்து பாருங்க…
எதை…
இவரைப் பாருங்க…
ஏன்…
பாருங்க…
தொட்டுப் பார்க்கிறான்…
கனகன் உடல் குளிர்ந்திருக்கிறது…
மூச்சு…. ம்… வரவே இல்லை
இதயம்… துடிக்கவே இல்லை…
கனகன்…. இறந்துவிட்டானா…

ஆம்….
இருவரும் கண்களாலேயே பேசிக்கொண்டனர்…

இரவுக்கென்ன… மீண்டும் ஒரு விருந்து…..

மறுநாள் விடிந்தது…
ஊரே பதட்ட நிலையில்….
கனகன் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது..
அம்மா….. கதறி அழும் வார்த்தைகள்..
என்ன..என்ன … ஒன்றும் தெரியாதவளாய் லதா…

அண்ணன கொன்னுட்டாங்கம்மா…
என்ன… அதிர்ச்சியில்… மயக்கம் போல்.. லதா…
அம்மா…. அதற்கு மேல் யாருமே லதாவிடம் பேசத் தயாரில்லை…

துண்டு துண்டாக வெட்டப்பட்டு….
பெரிய பையில் அடைக்கப்பட்ட நிலையில் …
குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட கனகன் உடல்…
ஐயோ… அலறல்களும் அழுகைகளும் ஒரு புறம்…

இரண்டு தசாப்தங்களாக போதைப்பொருள் மன்னனாக…
பல நூறு அடியாட்களின் தலைவனாக இருந்த கனகனின் தொண்டர்கள்..
தம்மை மறந்து சோகத்தில் ….

சூழ்நிலை மிகவும் சாதகமாக இருந்தது….
மரணக்கிரியைகள்…தொடர் அனுதாபங்கள் என்று விடயங்கள் மிகவும்
அமுக்க நிலையில் இருப்பதால்… லதா பாதுகாப்பாக….

ஆனால் அந்த நிலை தொடரவில்லை…
கனகனின் தீவிர விசுவாசி.. ரவி சிந்திக்கின்றான்…
ராத்திரி என்னோடுதானே அண்ணன் வந்தார்…
எங்கே தப்பு நடந்தது….

ஒருவரை ஒருவர் சந்தேகப்படும் சூழ்நிலை…
தனக்கு நம்பிக்கையான பாலாவை அழைத்தான் ரவி…
விசயம் பரிமாறப்பட்டது… தேடி அலசப்பட்டது….
தீவிரமான தேடல்… மிகவும் நுணுக்கமான தேடல்…
இறுதியில்… கனகன் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட..அந்த உள்ளாடை…
அவர்களுக்கு உதவியது…

முடிவு….. லதாவின் கள்ளக் காதலன் அகப்பட்டான்….
உண்மைகளைக் கக்கினான்…

விசம் கொடுத்து கொல்லப்பட்ட கனகனை துண்டு துண்டாக
அவனும் லதாவும் சேர்ந்து வெட்டி…பையில் அடைத்த கொடூரத்தை…
குற்றுயிர் நிலையிலும்…உயிரைக் காப்பாற்றும் நோக்கில்….
உளறித்தள்ளினான்…

ஆனால் .. அவன் ஆயுள் அன்றோடு முடிந்தது…
அடுத்து .. லதா…

அவளை நேரடியாக ஒன்றும் செய்துவிட முடியாது…
ஏன்..
அவள் ஊரறிந்த கனகன் மனைவி…

ரவி..பாலா… சிந்தித்தார்கள்….
போலீஸ் துணை நாடப்பட்டது…

கொல்லப்பட்ட கள்ளக்காதலனை நடு வீதியில் தூக்கியெறிந்தனர்…
விடயம் இலகுவானது…

கனகனின் கொலை நாடகம் நடந்த விதம் போலீசாருக்குத் தெரிவிக்கப்பட்டது…
அவர்கள் தம்மை நியாயப்படுத்த…. பத்திரிகைகளுக்கு அறிவித்தார்கள்…
இப்போது விடயம் இலகுவானது…

ஆனாலும்..
இவர்களை விட முந்திக்கொண்ட… போலீஸ்…
லதாவைக் கைது செய்தது…

அன்றைய தினம் நீதி மன்றத்தில் அவள் ஆஜர் செய்யப்பட்டாள்…..

உலகை விட்டு நிரந்தரமாகப் பிரிய முன்….
படுக்கையில் கிடந்த லதா….
சம்பவத்தை நினைவு கூர்ந்தாள்….

காலத்தின் கட்டாயம்….
அவள் உயிர் இப்போது முழுமையாக பிரிந்து செல்கிறது…..

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top