Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » இரை தேடிய இரவுகள் – 4

இரை தேடிய இரவுகள் – 4

பயணிகள் கவனத்திற்கு…என்று ஆரம்பிக்கும் அறிவிப்புக்கள் தொடர்ந்தவண்ணமிருக்கிறது..
சென்னை சர்வதேச விமான நிலையம்.இ 1993ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி மாலை 7.00 மணி

அந்தப் பையைத் திறம்மா..
பயணிகளின் பயணப்பொதிகளை காவல்துறையினர் சோதனையிடுகின்றனர்..இது ஆரம்பம்

யார் யாரு கூட வாறாங்க..
இல்லைங்க நான் தனியாத்தான் போறன்

ஓ..லீவுல போறிங்களா..
கேள்விகளைக் கேட்டபடியே அவளுக்கான போடிங் காட்டினைத் தயார் செய்கிறார் உத்தியோகத்தர்.
ஒரு தடவைக்கு இரு தடவை அவளது கடவுச் சீட்டினை மேலும் கீழுமாக புரட்டிப்பார்த்தவர்..

உங்க ஹஸ்பன்ட் வரலியா..?
இல்லைங்க..நான் தான் அவரப் பார்க்கப்போறன்..
பதில் சொல்லும் போதே அவளுக்கு சின்னதாய் வியர்வை ஆரம்பிக்கின்றது.

என்னம்மா..வேர்க்குதா..?
சிரித்தபடி உத்தியோகத்தர் கேட்க..

இல்லைங்க என்று அசடு வழிய பதில் சொல்லிவிட்டுஇதனது ஆவணங்களைப் பெற்றுக்கொண்டவள்
பயணிகள் தற்காலிக தங்குமிடம் (றயவைiபெ டழரபெந) நோக்கி நடக்கிறாள்..
கையில் மாத்திரம் சிறியதொரு ட்ரவலிங் பை..

கொஞ்சம் நில்லுங்க..
இதோ மீண்டும் ஒரு சுங்க உத்தியோகத்தர்

உங்க பையைக் கொஞ்சம் பார்க்கனும்..
இப்பதான் அங்க பார்த்தாங்களே..

இல்லைம்மா ப்ளைட் தூரத்திற்குப் போகுதா..ஏதாவது நடந்துட்டா அப்புறம் நாங்கதானே பொறுப்பு சொல்லனும்.

வழியும் வியர்வையைத் துடைத்தபடி தன் பையைத் திறந்து காட்டினாள்.
அங்கும் இங்கும் நன்கு துலாவிப் பார்த்த சுங்க அதிகாரி..

சரிம்மா.பணம் ஏதும் வைச்சிருக்கிங்களா..
பண..ம். ஆமா ட்ரவலர்ஸ் செக்.

ஓகே அது ஓகே.ரூபா நோட்டு ஏதும் வைச்சிருக்கிங்களா..
இல்லை.

சரி இதோ அந்தப்பக்கமா போங்க..

தனது சோதனைகளை முடித்த அதிகாரி வழியைக் காட்டிவிடஇ தன் புடைவை நுனியால் வழியும் வியர்வையைத் துடைத்தபடி நடந்து சென்று.. ஓரமாக இருந்த அந்த இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள்.

குனிந்த தலை நிமிர வில்லை.. ஏதோவிதமான படபடப்பு.

சற்று நேரம் கழித்து மெதுவாகத் தலையைத் தூக்கி அங்கும் இங்கும் பார்க்கிறாள்..
முகத்தில் ஏதோ ஒரு விதமான பயம் தெரிகிறது..

ஏம்மா..நீங்க ஐசி504 பசன்ஜரா.?
நிமிர்ந்து பார்த்தாள்.

விமானப் பணிப்பெண் போன்று நீல உடையில் காட்சி தந்தாள் அந்தப் பெண்.
ஆமாம் என்று தலையசைத்தாள்..

டைமாகிடுச்சு..கேட் 4க்கு போறிங்களா..?
எங்கே.கேட்4..? – பதிலுக்கு இவள் கேட்க

அதோ…என்று கேட் 4இனை இவளுக்குக் காட்டிவிட அவசர அவசரமாக ஓடிச்செல்ல.கதவின் வாயிலில்இ

உங்க போடிங் காட் காட்டுங்க.
தன் கைப்பையில் இருந்த ஆவணங்களை முழுமையாக எடுத்துக் காட்டினாள்..

மீண்டும் ஒரு பரிசோதனை. அதுவும் முடிந்ததும் காத்திருந்த பயணிகள் சொகுசு வண்டி.
ஏறிக்கொண்டாள்.

விமானத்தின் ஏறுபடிவரை கொண்டுசென்ற வண்டியிலிருந்து அனைவரும் இறங்கி விமானத்தில் ஏறுகிறார்கள். மற்றவர்களைப் பின்தொடர்ந்து இவளும் ஏறுகிறாள்.

இதோ இறுதிப்படியும் தாண்டிவிட்டது.விமானத்தின் வாயில்.

கென் ஐ சீ யூர் போடிங் பாஸ் ப்ளீஸ்..

வாயிலில் நின்ற பணிப்பென் கேட்கவே .. மீண்டும் தனது பையைத் திறந்து சிறியதாக இருந்த அந்தத் துண்டினை எடுத்துக் காட்டுகிறாள்.

அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஆசன இலக்கத்திற்கான செல் முறையைப் பணிப்பெண் விளக்கும் போது..
இவள் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை.
என்ன செய்கிறாள்…?

சிவந்த கண்களுடன் மெதுவாக ஒரு தடவை திரும்பிப் பார்க்கிறாள்.விமானத்தின் வெளியே..
ஆதற்குள் எக்ஸ்க்யூஸ் மீ… என்று அவளை விலக்கிக்கொண்டு இன்னும் ஒரு பயணி..உள் நுழைய..
சுதாரித்துக்கொண்டவள் தனது இருக்கையைத் தேடி நடக்கிறாள்..

அப்போது குறுக்கே வந்த விமானப் பணியாளர் ஒருவர். யூர் சீட் நம்பர் ப்ளீஸ்.? என்றார்..
கையில் இருந்த துண்டைக் காட்ட .. .அதிஷ்ட வசமாக அந்த இலக்கத்துக்குரிய ஆசனம் அருகில் தான் இருந்தது..

விமான இருக்கைகளின் நடு வரிசை. வலது ஓர இருக்கை தன் கையிலிருந்த கைப்பையைப் பணியாளர் உதவியுடன் மேலே பாதுகாப்பாக வைத்துவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்..

அவளுக்கு அடுத்ததாக இருந்த இருக்கையில் யாரையும் காணவில்லை. அதற்கடுத்ததாக இருந்த இருக்கையில் சாதாரண நடுத்தர வயதினை மதிக்கத்தக்க ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

சற்றே பதட்டத்துடன் காணப்பட்டதால் தன் புடைவை நுனியால் முகத்தினைத் துடைத்துவிட்டு சற்று முகத்தினை மூடிப்பிடித்தபடி தலையை சாய்த்து அமர்ந்து கொண்டாள்..

ஒரு இரண்டு மூன்று நிமிடம். கண்ணை மூடி ஒரு குட்டித் தூக்கம் போட்டது போன்று ஒரு உணர்வு..அதற்குள் மீண்டும் ஒரு எக்ஸ்க்யூஸ்..மீ

சுதாரித்து எழுந்தவள் முன் .
காந்தக் கண்களுடன் பார்க்க சற்று கம்பீரமாக ஓரளவு மா நிறத்தில் ஒரு . இளைஞன்..

தனது இருக்கைக்காக வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவள்..விலகி இடங் கொடுக்க..
அவளுக்கருகில் இருந்த அந்த இருக்கையில் அமர்ந்து கொள்கிறான் அந்த இளைஞன்.

அவனருகே அடுத்த இருக்கையில் இருப்பது யார் என்பதை இவள் முதலில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே. இருவரும் நெருங்கிக் கதைக்கவே சற்றே.. முன் நகர்ந்து ஓரக் கண்ணால் எட்டிப் பார்க்கிறாள்.

யாரோ மிகவும் நெருங்கிய உறவுக்காரர்கள் அல்லது தெரிந்தவர்கள் போலிருந்தது.
யாராயிருந்தால் என்ன? பெருமூச்சொன்றை சிறியதாய் விட்டபடி தனது ஆசனத்தில் சாய்ந்து கொள்கிறாள்..

அனைவரும் ஆசன இருக்கைகளை மாட்டிக்கொள்கின்றனர். சப்தங்களால் உணர்ந்து..கொண்டவள் தனது ஆசன இருக்கையையும் போட்டுக்கொள்ள முயற்சித்தாள். ம்.முன் அனுபவமும் இல்லை..
தடுமாறிக்கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்த முகத்துடன் கையை நீட்டினான் அருகில் இருந்தவன்..

சற்று அதிர்ச்சியில் அவனை அவள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இவள் ஆசன இருக்கையை மாட்டி விட்டவன்.. மீண்டும் ஒரு சிறிய புன்முறுவலுடன் தனது இருக்கைக்குச் சட்டென்று திரும்பிக்கொண்டான்.

வியப்போடு மீண்டும் தன் ஆசனத்தில் சாய்ந்து கொண்டாள்.

தலைக்கு மேலாக ஏசி வேலை செய்கிறது. விமானத்தின் மற்ற பகுதிகளை விட இவள் இடம் சற்றுக் குளிராகவே இருந்தது. தன் புடைவையை ஒரு சுற்று இழுத்து போர்த்திக்கொள்கிறாள்.

சர்வதேச விமானப் பயணக் கட்டுப்பாட்டுகளுக்கமைய விமானத்தின் பாதுகாப்பு நடைமுறைகள் விளக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விமானத்தின் கப்டனின் அறிவுறுத்தல்கள். வேக வேகமாக அங்கும் இங்குமாக நடைபோடும் பணியாளர்கள்.

விமானம் மெதுவாக நகர்கின்றது.. ஐரோப்பிய வானில் பயணம் செய்து லண்டன் மண்ணில் தரையிறங்கும் ஆவலோடு.!

சாதாரணமாக சர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உபசரிப்புக்கள். உதவிகள் என்று விமானப் பணியாளர்கள் சேவை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் தற்போது நடுவானில்..

நேரம் இப்பொழுது.இரவு 11 மணி (இந்திய நேரம்)

ஏன்ன களைப்போ.. பதட்டமோ தெரியவில்லை.. ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாள் அவள்.
பயணிகளுக்கான இரவுப் போசனமும் வழங்கப்பட்டு விமானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.

குளிர் மிகுதியில் அவளது உதடுகள் படபடக்கத் தொடங்கின.. இருந்தாலும் ஆழ்ந்த நித்திரை.
அடிக்கடி உடம்பை சிலிர்த்துக்கொண்டும் அசைத்துக்கொண்டும்.. சற்றுக் குழப்பமான நிலையில் தான் உறங்குகிறாள்.

இவள் நிலையை உணர்ந்து கொண்ட அருகில் இருந்தவன்.கீழே கிடந்த அவளுக்காக வழங்கப்பட்டிருந்த போர்வையை எடுத்து போர்த்தி விடுகிறான்.

இப்போது ஒரு தடவை முன்னால் நகர்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அவள் முகத்தினைப் பார்க்கிறான்.

ம்..பெரிய அழகியென்று இல்லை.. இருந்தாலும் கவர்ச்சியான முகம். ஒருவகையான அப்பாவித்தன்மை நிறைந்த தோற்றம்..

என்ன இவள்.. வந்ததிலிருந்து சாப்பிடவோ ஒரு தண்ணி குடிக்கவோ இல்லை. இப்படி அசந்துவிட்டாளே.. தனக்குள் அந்தப் பெண்ணைப்பற்றி நினைத்துக்கொண்டவனாய். இந்தப்பக்கமாக தலையை வைத்து அவனும் சாய்ந்து கொள்கிறான்.

இவனும் சற்று நேரம்.உறங்கியிருப்பான் போலிருந்தது..

திடீரென விழிப்பு வந்தது..இதே ஆசன வரிசையின் மூலையில் இருப்பவர் தனது ஆசனத்திற்கான விளக்கினைப் போட்டுக்கொண்டு ஏதோ புத்தகம் படிக்கிறார்.

மங்களான வெளிச்சம்.. சற்றே கண்ணைக் கசக்கியபடி பார்வையைக் கீழே செலுத்தியவன் கண்களின் மெல்லிய வெளிச்சத்தில் விலகியிருக்கும் போர்வை நடுவில் அவள் . வயிற்றின் ஒரு பகுதி தெரிகிறது.

ம்..சற்று மனசுக்குள் குழப்பமடைந்தான்..மறு பக்கம் திரும்பிப் பார்த்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வேண்டாம்.என்று தனக்குள் சொல்லிக்கொண்டவன் மறுபக்கம் திரும்பித் தன் தலையைச் சாய்த்துக்கொண்டான். ம்.மனசு பொறுக்கவில்லை.

மீண்டும் திரும்பிப்பார்க்கிறான் நாணிக்குறுகி போர்வையை இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கும் அவள் விரல்கள். இவனுக்குள் ஏதோ விதமான ஒரு சலசலப்பு.

நன்கு அவளை உற்றுப் பார்க்கிறான். ஓ.காலிரண்டையும் கூடத் தூக்கி ஆசனத்தில் வைத்தபடி குறுகிக்கொண்டு அவள் உறங்குகிறாள்.

இவனுக்குள் ஒரு காமத் தீ ஊசலாடிக்கொண்டிருந்தது..

அவள் போர்வையை மெதுவாக இழுத்து.. வெளியில் தெரியும் அவள் கால் விரல்களையும் சேர்த்தே போர்த்தி விடுகிறான்.

ம்.கழுத்திலிருந்து கால் வரை இழுத்துக்கொண்டு பணிபுரியும் போர்வை இடப்பக்கம் ஒரு இடைவெளியைக் கொடுக்கின்றது. அந்த இடைவெளியின் ஊடே..மங்கள் வெளிச்சத்திலும் உந்தியிழுக்குமேர் கவர்ச்சி..

..பதபதைக்கும் மனம் இவனுக்குள் எதையோ பற்றவைத்துவிட்டது..

குளிர் மிகுதி வேறு.இவன் மனதுக்குள் சற்று சலசலப்பு அதிகரிக்கின்றது..
தன் கண்களை மூடிக்கொள்கிறான்.

சற்று நேரத்தில் கண்கள் திறந்த போது…
இதுவரை உறங்கிய அவளும் கண் விழிக்கிறாள்.

கண் விழித்து அங்கும் இங்கும் பார்த்தவள் கால்களைக் கீழிறக்கி.ஆசனத்தில் நேராக அமர்கிறாள்.
ஏதோ ஒரு ஞாபகம் வரவே அருகில் இருக்கும் அவனை மெதுவாகத் திரும்பிப் பார்க்கிறாள்.

அவனோ கண்களை இறுக்கி மூடியபடி உறங்குகிறான்.?

மெதுவாகத் தன் நித்திரைக் கலக்கத்திலிருந்து விடுபட்டவள் நேராக அமர்ந்து கொண்டு..இடப்பக்கம் இருக்கும் கைப்பிடியில் தன் கையை வைத்துக்கொண்டாள்..

அருகில் இருப்பவன் ஆழ்ந்த நித்திரையில் என்பது இவள் நினைப்பு.

சற்று நேரத்தில்.

அவள் கையை உரசிக்கொள்ளும் வகையில் இவன் கை … மெதுவாக கைப்பிடியில் சாய்ந்தது.
அவள் சட்டை செய்யவில்லை.

ஆழ்ந்த நித்திரையில் அவன் இருக்கிறான். இதுதான் அவள் நினைப்பு

தன் கையையும் அவள் எடுக்கவில்லை.

இன்னும் சற்று நேரம்..கழிந்தது

அவள் விரல் நுனிகளை இவன் விரல்கள் தொட்டது.. ஏந்த வித ஆட்சேபனையும் இல்லை.

கண்ணை மூடிக்கொண்டிருக்கும் இவன் மனது இப்போது வேகமாகப் படபடத்தது..
அதே நேரம் சற்று தைரியமும் பிறந்தது.

எது நடந்தாலும் பரவாயில்லை.மனதுக்குள் பற்றியெரியும் சுவாலை இவன் உஷ்ணத்தை அதிகரித்தது..

ஒவ்வொரு மில்லி மீற்றராக..த் தன் விரல்களை அவள் விரல்களுக்குள்.நுழைத்தான்.

திடீரென..

இவனை யாரோ உசுப்புகிறார்கள்.
பயத்துடன் கண்விழித்தான். ஓ அது அவள் தான்..

மனசு படபடத்தது..ஐயையோ. சத்தம் போட்டு ஊரைக் கூட்டிருவாளோ.. யாருக்காவது சொல்லிடுவாளோ. அவன் மனசு இன்னும் வேகமாகப் படபடத்தது.

எதற்கும் என்று தைரியமாக அவள் முகத்தினைப் பார்த்தான். அவள் கண்களும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் அவனைப் பார்ப்பதாக இருந்தது.

அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. புருவங்களை சற்று உயர்த்தி.கண்களை விரித்துப் பார்க்கிறான். ஆம்.அவள் கண்கள் ஒரு மாதிரியாகத்தான் இவனை பார்க்கின்றது.

இவையனைத்தும் நொடிப்பொழுதில் நடந்து கொண்டிருக்க.

தன் தலையை மெதுவாக அசைத்தபடி..த..மி.ழ்.. என்று தன் சுட்டு விரலை உயர்த்தி அவனிடம் கேட்டாள் அவள். ம்.ம். என்று அசுர வேகத்தில் இவன் தலையாடியது.

ஒரு உதவி பண்ண முடியுமா.? எதையோ எதிர்பார்த்தவனுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

ம்.சொல்லுங்க என்ன வேணும். – என்றான்
பாத் ரூம் எந்தப்பக்கம்..?

ஓ.இதுதானா.தனக்குள்ளே அலுத்துக்கொண்டான் ..
இருந்தாலும் ஒரு முடிவுடன். வாங்க கூட்டிட்டுப்போறேன் என்றான் தைரியமாக.

அவளும் மறுக்கவில்லை. எழுந்தவள் தோள்களைத் தயக்கமே இல்லாமல் தொட்டவன்..
ம்..இந்தப்பக்கம் என்று வழிகாட்டினான்..

அவள் முன்னே செல்ல.. இவன் அவளை மிக நெருக்கமாக அண்மித்து பின்னால் சென்றான்.
ம்.கொஞ்சம் பொறுங்க.. இது லேடீஸா. ஜென்ட்ஸான்னு பார்க்கிறேன்..

விமானங்களில் அப்படியும் இருக்குமா..தனக்குள்ளே சிரித்துக்கொண்டவன்.
ம்..போங்க. என்று கதவைத் திறந்து விட்டான்..

மறக்காமல் தன் கைப்பையுடனேயே எழுந்து வந்திருந்தவள். உள்ளே நுழைகிறாள்.
வெளியில் நிற்கும் இவன் மனம் படபடக்கிறது.

விமானப் பயணத்தில் புது அனுபவமான அவள். கதவினை சாத்தியிருந்தாள்… ஆனால் மூடவில்லை.
விமானத்தின் மெல்லிய குலுக்கலுக்கு மெதுவாக அசையும் கதவு..

சுவாலைவிட்டெரியும் இவன் மனதுக்குள் எதையோ உருவாக்கியது.

இனந்தெரியாத உணர்ச்சியினால் தவித்துக்கொண்டிருக்கும் இவன்.. தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவனாக சற்று முன்நோக்கி நடந்தான்..ஓ அது உணவு தயாரிக்கும் இடம்.

இப்போது மறு திசையை நோக்கி நடந்தான். விமானமே அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தது.

எத்தனை சுருக்கினாலும்.. தேவைகள் மட்டும் விரிகிறது !!
தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top