Home » 2015 » March » 18 (page 2)

Daily Archives: March 18, 2015

கேணிவனம் – 20

காலை 10.30 மணி… ரெட்ஹில்ஸலிருந்து பூதூர் செல்லும் ரோட்டில், ரெண்டு பக்கமும் வயல்களும் பனைமரங்களும் சூழ்ந்திருக்கும் வளைவான பாதைகளில், இன்ஸ்பெக்டர் வாசுதேவனின் ஜீப் சீறிக்கொண்டிருந்தது… சென்னை மாநகரத்தின் மிகச்சொற்ப தூரத்தில் இப்படி வயல்படர்ந்த கிராமம் இருப்பது சில சமயம் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது என்று மனதளவில் வாசுதேவன் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். லிஷா சந்தோஷூக்கு கடைசியாக செய்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் செய்ததில், அது இந்த பூதூர் கிராமத்தின் செல்ஃபோன டவரிலிருந்துதான் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்று இன்று காலை அவருக்கு தகவல் வந்திருந்தது… ... Read More »

கேணிவனம் – 19

இன்ஸ்பெக்டர் வாசு ஃபோனில் பேசிக் கொண்டிருக்க… தாஸூம் சந்தோஷூம் அவர் பேசுவதை ஆவலாக பார்த்துக் கொண்டிருதனர்… ‘ஹலோ..?’ ‘. . . . . . . . ‘ ‘அப்படியா..?’ ‘. . . . . . . . ‘ ‘அந்த ஃபோன்கால்-ஐ ட்ரேஸ் பண்ண மேட்டர் என்னாச்சு..?’ ‘. . . . . . . . ‘ ‘அப்படியா..? வேற எதுவும் வழி இல்லியா..?’ ‘. . . ... Read More »

கேணிவனம் – 18

கடத்தல்காரனிடமிருந்து வந்த ஃபோன்கால், ஒருவகையில் மிரட்டலை விட்டு சென்றாலும், ஒரு வகையில் லிஷா இன்னும் உயிரோடு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தியிருந்ததால் தாஸ் சற்று ஆறுதலாயிருந்தான்… ஆனால், இருப்பிடம் தெரியாத பிரம்ம சித்தர் சமாதியை, எங்கென்று போய் தேடுவது… சோழ மன்னன், அதுவும் எந்த காலத்து சோழன், அவன் பெயரென்ன என்று ஒன்றும் தெரியாத நிலையில் எப்படி தேடுவது… மேலும், நான் சித்தர் சமாதியை தேடிக்கொண்டிருப்பதை எப்படி வெளியே தெரிந்தது… யாரோ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறார்கள். யாராயிருக்கும்… இந்த ... Read More »

கேணிவனம் – 17

காலை 7.30 மணி… தாஸூம் சந்தோஷூம் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர்… இன்ஸ்பெக்டர் வாசு, சந்தோஷின் தொலைபேசி அழைப்பினால் ஸ்டேஷனுக்கு அந்த காலை வேளையில் துரிதமாக வந்திருந்தார். நடந்த நிகழ்வுகளை விசாரித்து, லிஷா முன்னாள் இரவு ஓட்டிக் கொண்டு போன தாஸின் கார் நம்பரை வெவ்வேறு ஸ்டேஷனுக்கு தெரிவித்து, தேடிப்பார்க்குமாறு உத்தரவிட்டிருந்தார். சந்தோஷ், ஒரு சிலையைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்… இரண்டு நாட்களுக்கு முன்பும், இதே போலீஸ் ஸ்டேஷனில், விரக்தியாய் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. ... Read More »

கேணிவனம் – 16

ஆபீசுக்கு பின்புறம், பீச் வியூ பார்க்கில், தாஸும் சந்தோஷூம் புகை பிடித்துக் கொண்டிருந்தனர்… சந்தோஷ் ஆழ்ந்த சிந்தனையில் கடற்கரையை பார்த்தபடி புகை இழுத்துக் கொண்டிருந்தான்… சிகரெட்டை பிடித்திருந்த அவனது கைகள், அவனுக்கும் தெரியாமல் நடுங்கிக் கொண்டிருந்ததை எதிரிலிருந்த தாஸ் கவனித்தான்… ‘சந்தோஷ்..? ஏதாவது பிரச்சினையா..?’ என்று கேட்டதும், கவனம் கலைந்த சந்தோஷ் தாஸிடம் திரும்பினான்… ‘ஏன் பாஸ்… அப்படி கேக்குறீங்க..?’ ‘உன் கை சிகரெட் பிடிக்கும்போது நடுங்குது!?! ஒருவேளை ஏதாவது பதற்றத்துல இருக்கியோன்னு தோணுது… அதான் கேட்டேன். ... Read More »

கேணிவனம் – 15

அந்த மதிய வேளையில் போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் அமைதியாகவே இருந்ததால்… லிஷா போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தபோது, அனைவரது கவனமும் அவள்மேல் திரும்பியது. உள்ளே உணவருந்திமுடித்து தினசரியை புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர்  ‘வாசு’வுக்குஅருகில் சென்று நின்றாள்… ‘சார் வணக்கம் என் பேரு லிஷா…’ லிஷாவின் வணக்கத்தால் பேப்பரிலிருந்து கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் வாசு, அவளை ஏறிட்டு பார்த்தார்… ‘என்னம்மா விஷயம்..?’ ‘சார், என் வருங்கால ஹஸ்பெண்ட்-ஐ இங்க அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கீங்க..? அதான் உங்ககிட்ட நடந்த உண்மையை சொல்லலாம்னு ... Read More »

கேணிவனம் – 14

லிஷாவைப் பற்றி அவதூறாக கம்ப்ளைண்ட்டில் குணா எழுதியிருந்ததைப் படித்த சந்தோஷ்… போலீஸ் ஸ்டேஷனில் உறைந்து போய் அமர்ந்திருந்தான். ‘சார், இது அநியாயம் சார், இதெல்லாம் பொய்..’  என்று தனக்கருகிலிருந்த கான்ஸ்டெபிளிடம் கூற, அவர் அவனை சிறிதும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தார். ‘சார்… உங்ககிட்டதான் சார் சொல்லிட்டிருக்கேன். இந்த கம்ப்ளைண்ட்ல எழுதியிருக்கிறதெல்லாம் சுத்த பொய் சார்..’ ‘அதுக்கு நான் என்னய்யா பண்ண்டடும்..? எதுவா இருந்தாலும் ஐயா வந்ததும் பேசிக்கோ..’ என்று அவர் தனது வேலையில் மூழ்க… சந்தோஷால் இதை ... Read More »

கேணிவனம் – 13

தாத்தா, தாஸ் தன்னிடம் கேட்ட அந்த சித்தரைப் பற்றி தொடர்ந்தார்… ‘அந்த சித்தரோட பேரு என்னன்னு இன்னும் சரியா தெரியலப்பா… ஆனா, நாம தேடின மாதிரி, பிரம்மா கடவுளை உபாசகம் பண்ணிக்கிட்டு வாழ்ந்த ஒரு சித்தரோட சமாதி இருக்கிற இடம் தெரிஞ்சிருக்கு..’ என்று கையில் ஒரு புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து கட்டிபிடித்தபடி சொன்னார். ‘எப்படி தெரிஞ்சுது தாத்தா..?’ ’18ஆம் நூற்றாண்டுல, பூலித்தேவ ராசா காலத்து ஓலைச்சுவடிகள்ல சில சுவடிகள் சித்தர்களோட சமாதிகளை பத்தி சொல்லுது… அந்த சுவடிகளை ... Read More »

கேணிவனம் – 12

ப்ரொஃபெஸர் கணேஷ்ராம், ஃபோனில் தாஸிடம், தான் ஓவியத்தில் கண்டுபிடித்த மூன்றாவது நபர் பற்றி கூறிக்கொண்டிருந்தார். ‘அந்த மூணாவது நபர், அரசருக்கு பக்கத்துல, உக்காந்துட்டிருக்கிற மாதிரியிருக்கு… ஒரு அரசன் நின்னுட்டிருக்கும்போது, பக்கத்துல உக்கார்ற தகுதி ரொம்ப சிலருக்குத்தான் இருக்கும்… அந்த வகையில பாக்கும்போது, ஒண்ணு யாராவது ஒரு பெரிய புலவரா இருக்கலாம்… இல்லன்னா யாராவது ஒரு முனிவராவோ இல்லை சித்தராவோ இருக்கலாம்..’ ‘நீங்க என்ன சார் நினைக்கிறீங்க..?’ ‘எனக்கு தெரிஞ்சு அது புலவரா இருக்க வாய்ப்பில்லை..!’ ‘ஏன்..?’ ‘ஏன்னா, ... Read More »

கேணிவனம் – 11

சென்னையிலிருந்து 45 கி.மீ தொலைவில்… CTH ரோட்டில்…. ஒரு கார் சீறிக்கொண்டிருந்தது. உள்ளே…. தாஸ் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் லிஷா அமர்ந்திருந்தாள். ‘இன்னும் எவ்வளவு தூரம் போகணும்…’ ‘ஆல்மோஸ்ட் தேர்… ஏன் லிஷா? சந்தோஷ் இல்லாம போரடிக்குதா..?’ ‘அப்படியில்ல… சும்மாதான் கேட்டேன்..’ என்று பேசியவள், சற்று தயங்கி… ‘உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா..?’ ‘என்ன லிஷா..?’ ‘நேத்து, நீங்க சந்தோஷ்கிட்ட பேசும்போது இந்த வார்ம்ஹோல் எங்கேயிருக்குன்னு வெளிநாட்டுக்கு சொல்லக்கூடாதுன்னு சொன்னீங்க..?’ ‘ஆமா..?’ ‘அப்ப ஏன், நம்ம நாட்டு விஞ்ஞானிங்ககிட்ட ... Read More »

Scroll To Top