ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அந்த காலை வேலையில் தாஸ், சந்தோஷ், லிஷா மூவரும் காரில் சீறிக்கொண்டிருந்தனர். தாஸின் கையில், முன்னாள் இரவு, சந்தோஷ் வீடியோவில் கண்டெடுத்த சித்தரின் பாடல் ப்ரிண்ட் அவுட் இருந்தது. அதை தாஸ் ஆவலுடன் படித்துக் கொண்டிருந்தான். என்கண் நிறையிறை யவன் எண்கண்ணு வுடையவனா ஆனதில் நான் முகனவன் முகமதில் நாரெண் டெட்டாம் கண் நீகண்ட ததுவொன்றெனி லெஞ்சியுள தேழென வெடுத்துரைத்தேன் எனதா ஆசனுக்கு என்று சித்தர் எழுதிய இப்பாடலை பார்த்தபடி தாஸ் காரில் ... Read More »
Daily Archives: March 18, 2015
கேணிவனம் – 29
March 18, 2015
2ஆம் காலக்கோட்டில் நடந்துக் கொண்டிருப்பது… இதுவரை தாஸின் லேப்டாப் திரையில், ஹேண்டிகேமிராவில் பதிவான 12ஆம் நூற்றாண்டு காட்சிகளையும், 1ஆம் காலக்கட்டத்தில் நடந்ததாக தாஸ் கூறியதையும் ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்த லிஷாவும், சந்தோஷூம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ‘பாஸ்… என்னென்னவோ நடந்திருக்கு..! எங்க உயிரையே காப்பாத்தியிருக்கீங்க..! உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்ன தெரியல பாஸ்..!’ என்று சந்தோஷ் செண்டிமெண்டாக ஆரம்பித்தான். ‘நன்றி சொல்ல வேண்டியதெல்லாம் அந்த சித்தருக்குத்தான். இப்படி ஒரு கேணி இருக்கிறதாலதான் இதெல்லாம் சாத்தியமாச்சு.!’ ... Read More »
கேணிவனம் – 28
March 18, 2015
சடகோப சித்தர், தாஸின் முற்பிறவி இரகசியத்தை கூறியதும், தாஸினால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறினான். அவன் கையில் பிடித்திருந்த ஹேண்டிகேமிராவில் அவனது நடுக்கம் தெரிந்தது. ‘ஏனப்பா இப்படி நடுங்குகிறாய்…?’ என்று சித்தர் சிரித்தபடி கேட்டார் ‘ந… நான்தான் நீங்க… சொன்ன.. ராஜாவா..?’ ‘ஆம், இன்றிலிருந்து 53 வருடத்திற்கு முன்புவரை நீதான் இராஜசேகரவர்மனாக வாழ்ந்து வந்தாய்.. நீதான் கேணிவனக்கோவில் கட்ட காரணமாயிருந்தவன். மனிதப் போர்களை நிறுத்தி உலகில் அமைதியை நிலைநாட்ட எனக்கு உதவியவன். எல்லாம் நீதான்.’ ’53 வருஷத்துக்கு முன்னாடியா..! ... Read More »
கேணிவனம் – 27
March 18, 2015
12ஆம் நூற்றாண்டில் நடந்தது… தான் வந்தடைந்திருக்கும் வனப்பிரதேசம் வித்தியாசமாகவிருப்பதை கண்டு சுற்றிலும் தெரியும் வானவனாந்திரங்களை கண்ணிமைக்காமல் தாஸ் கண்டுகளித்துக் கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக அமர்ந்திருப்பதைவிட பாதசாரியாய் நடந்து பார்ப்போமென்று முடிவெடுத்தவன் எழுந்து நடக்கலானான். காற்றில் சந்தனவாசம் கலந்து வந்தது. சுற்றிலும் சந்தன மரங்கள். தான் சந்தனக்காட்டில் நடந்து கொண்டிருப்பதையுணர்ந்தான். தோளில் அவன் மாட்டியிருந்த ஹேண்டிகேமிரா அப்படியே இருந்தது. அதைக் கண்டதும் அதை எடுத்து இயக்கினான். சந்தனக்காட்டை, காட்சிப்பதிவில் கடத்திக் கொண்டான். காலம் நடந்தவற்றை மறக்கடிக்கும் அரிய மருந்து… ஆனால், ... Read More »
கேணிவனம் – 26
March 18, 2015
1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! (தொடர்ச்சி) லிஷாவை துப்பாக்கியைமுனையில் பிடித்தபடி சக்கரவர்த்தி அனைவரையும் அந்த கேணிவனக்கோவிலுக்குள் நடத்தி சென்றான். இன்ஸ்பெக்டர், சக்கரவர்த்தியை மெதுவாக நெருங்க முயற்சிக்க, சக்கரவர்த்தி அவர்பக்கமாய் திரும்பி அவருக்கும் துப்பாக்கியை நீட்டி எச்சரித்தான். ‘வேண்டாம் இன்ஸ்பெக்டர்… கிட்ட வராத… சுட்டுருவேன்…’ என்று மிரட்டவே, அவர் பின்வாங்கினார்… கோவில் மண்டபத்தில் ஆறு பேரும் நின்றிருக்க… சக்கரவர்த்தி, கொஞ்சம் பின்னுக்குவந்து அனைவரும் தனது பார்வையில் படும்படி வந்து நின்றுக்கொண்டான். அங்கிருந்த அனைவருக்கும் சக்கரவர்த்தியின் இந்த செயல் மிகவும் ... Read More »
கேணிவனம் – 25
March 18, 2015
1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! பொழுது விடிந்தது… லிஷா கண்விழித்தபோது, அந்த காலைவேளையில் காடு முழுவதும் பனி சூழ்ந்து… காடு கனவுலோகமாய் காட்சியளித்தது… சே! இந்தக் காட்டை பார்த்தா நேற்று நான் இப்படி பயந்தேன் என்று அவள் வியக்குமளவிற்கு அந்த காட்டுச்சூழல் ரசிக்கும்படியாய் ரம்யமாய் காட்சியளித்தது… திரும்பி கூடாரத்திற்குள் பார்க்க, தாஸ் மட்டும் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். அனைவரும் எழுந்து ஆளுக்கொரு வேளையில் ஈடுபட்டிருந்தனர்… தாஸ் மட்டும் ஏன் இவ்வளவு நேரம் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று அவனை எழுப்புவதற்காக அவனருகில் ... Read More »
கேணிவனம் – 24
March 18, 2015
ஆஆஆஆ….! லிஷா அலறிவிட்டாள். அவள் அலறல் கேட்டு அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். ‘என்ன லிஷா என்னாச்சு..’ என்று சந்தோஷ் அவளை நெருங்கியபடி கேட்க, அப்போதுதான் அவனும் தாஸின் முகத்தைப் பார்த்தான். வித்தியாசமாக இருந்தது… ‘அய்யோ.. பாஸ்க்கு என்னாச்சு..?’ என்று அவனும் பதற்றமடைய… சக்கரவர்த்தி தாஸின் உடலை நெருங்கி வந்தார். ‘இருங்க.. நான் பாக்குறேன்..’ என்றுகூறி, அவனது கையைப் பிடித்துப் பார்த்தார். அவனது மார்பில் காதுவைத்துப் பார்த்தார்… ‘பயப்படாதீங்க… உயிரோடத்தான் இருக்கார்… ஆனா மயக்கமடைஞ்சியிருக்கார்…’ என்று கூறி, ... Read More »
கேணிவனம் – 23
March 18, 2015
திசைமாறி வந்துவிட்டோம் என்று தாஸ் சொன்னதைக் கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்றனர். ‘திக்கு தெரியாத காடு’ என்று கதைகளில் உபயோகப்படுத்தபடும் உவமை எவ்வளவு கொடுமையானது என்று அங்கிருந்த 6 பேரும் உணர்ந்து கொண்டிருந்தனர். காட்டில் தொலைந்து போவது என்பது, கிட்டத்தட்ட உயிருடன் இறந்து போவதற்கு சமம். அடுத்த என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் சிலையாய் நின்றிருக்க… சக்கரவர்த்தி மிகவும் கவலை கொண்டவராய் தாஸின் அருகில் வந்தார்… ‘தாஸ்? என்ன இப்படி சொல்றீங்க..? இது தப்பான ரூட்டுன்னு எப்படி ... Read More »
கேணிவனம் – 22
March 18, 2015
பானரோமிக் பார்வையில் மலைத்துப்பார்க்க வைக்கும் ஹரிஸாண்ட்டல் அதிசயம் இரயில்…. தாஸ், அந்த இரவு வேளையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 11ஆவது ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த ரயிலை, தன் மனதுக்குள் ரசித்தபடி, கவிதை என்று எதையோ எழுத முயன்றுக்கொண்டிருந்தான். இரயிலுக்குள், ஜன்னலோரத்தில் எதிரெதிர் இருக்கையில் சந்தோஷூம், லிஷாவும் அமர்ந்தபடி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர்… அங்கு பரவியிருந்த விளக்கு வெளிச்சத்தில், ஆங்காங்கே வெவ்வேறு ஊரைச் சேர்ந்த பயணிகளின் நடமாடிக்கொண்டிருக்க, அவர்களது முகமும், நடையும், உடையும் தாஸை ஒரு குழந்தையாய் மாற்றி, ரயில் நிலையத்தை ... Read More »
கேணிவனம் – 21
March 18, 2015
ப்ரொஃபஸர் கணேஷ்ராமின் வீடு… அவர் வீடு, பெரியளவில் இல்லாவிட்டாலும், ஒரு குட்டி பங்களா என்றே சொல்லலாம்… ரசனையுடன் கட்டியிருந்தார்… வீட்டின் மாடியிலிருந்த ஒரு அறையை, பிரத்யேகமாக தனது ஆய்வுக் கூடமாக மாற்றியிருந்தார். (குட்டி ரகசியம் : முன்னொருநாள், இவர் வீட்டுக்கு வந்தபோது, இந்த அறையை பார்த்த தாஸ்-க்கு மிகவும் பிடித்துப் போகவேதான், பின்னாளில் பிரம்மாண்டமாய் Ancient Park என்று தனது ஆஃபீஸை வடிவமைக்க வேண்டும் என்று முடிவெடுத்து நிறைவேற்றினான்) இப்போது, அதே அறையில் தாஸ்-ம், சந்தோஷூம், லிஷாவும் ... Read More »