Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » மிரட்ட வரும் பேய் – 8

மிரட்ட வரும் பேய் – 8

அது நம் நாட்டின் பெருநகரங்களில் ஒன்றாகும். அங்கு பல மாநிலத்தவரும் வெளிநாட்ட வரும் வந்து போகும் வணிக மாநகரம். எந்நேரமும் வாகனங்களும் பொதுமக்களும் பரபரப்புடன் காணப்படும் அம்மாநகரின் ஒருபகுதியில் இரவு வேளைகளில் பேய் நடமாட்டம் உள்ளதாகவும் அடிக்கடி குழந்தைகள்,பெண்கள் காணாமல் போவதாகவும், தனியே செல்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும் தினசரி நாளிதழ்களிலும் டி வியிலும் தினமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இது என்னவென்று தெரியாமல் பொதுமக்களையும் காவல் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆகவே அந்தப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு இரவு நேர ரோந்துப்பணிகள் தீவிரமாக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருநாள் இரவு…

இரண்டு போலீசார் இரவு நேர ரோந்துப் பணியில் இருக்கும் போது அவர்களின் ஜீப் வாகனத்தை ஒரு சந்து ஓரத்தில் சற்று இருளான பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு வெளியில் நின்று சுற்றும் முற்றும் பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தார்கள். இதுயென்னமோ ஒன்னும் புரியாத புதிரா இருக்கு சார்… பேய்எப்புடி சார் இப்புடி எல்லாம் செய்யமுடியும் ?……அந்தப் பேய ஒன்னும் செய்ய முடியாதா..? என்று மேலதிகாரியிடம் கேட்டார். அதுதான் எனக்கும் ஒன்னும் புரியல. எப்புடியும் நாம இது என்னான்னு கண்டுபுடிச்சி ஆவணும்…என்று அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கையில்…நல்ல ஏழடியை நெருங்கிய உயரம் ஆஜானுபாவான வலிமையானஉடல் நீண்டகைகள் கோரைப் பற்கள் கொடூர முகம் சிவந்துபழுத்த கண்கள் என பார்க்கவே பயங்கரத்தோற்றத்துடன் ஒரு உருவம் அவர்களின் முன்பு வந்து நின்றது…

செய்வதறியாது திகைத்து நின்று திருதிருவென முழித்தபடி அந்த உருவத்தை பார்ப்பதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் கடுமையாக தாக்கி விட்டு அந்த உருவம் மறைந்து விட்டது. மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.அங்கு மற்ற காவலாளிகள் வந்து இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிச்சை அளித்து இருக்கிறார்கள்.

அங்கு மேலதிகாரி வந்து நலம் விசாரிக்கும் போது…. சார் அந்தப் பேய நாங்க ரெண்டுபேருமே கண்ணால பாத்தோம் சார்.. அது பேய் தான்சார். என்று ஆணித்தரமாக தனது மேலதிகாரியிடம் சொன்னார்கள். …ஒன்றும் புரியாமல் குழம்பியவராய்…..சரி நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு டூட்டிக்கி நாளக்கி வாங்க பேசிக்குவோம். என்று சொல்லிவிட்டு இவர்களிடத்திலிருந்து விடை பெற்றுச்சென்று விட்டார்.

அதன் பிறகு மீண்டும் அதே பகுதியில் ஒருநாள் இரவு இத்தகைய ஒரு சம்பவம் நடந்திருக்கிறது… ஆமாசார் …என்னைய பேய்தான் சார் அடிச்சிச்சி… அந்த பேயோட முகத்தெ நா பாத்தேன் சார். ரொம்ப கொடூரமா இருந்திச்சி சார்… அது என்னைய அடிச்சதும் மயங்கி விழுட்டேன் சார்…அப்பறம் மயக்கம் தெளிஞ்சி எந்திரிச்சப்போ என்னட பணங்காசு எதயும் காணோம்சார். யாரோ எடுத்துக்கிட்டாங்க சார் …என்று ஒப்பாரி வைக்க த்தொடங்கினார். பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதுடன் தனது பணம், பொருள்களையும் சேர்த்து இழந்துள்ளதைப் பார்த்து காவல் துறையினருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
இது நிச்சயமா பேயேதும் கிடையாது திருட்டுக் கும்பலின் வேலையாத்தான் இருக்கும் இதை எப்படியும் கண்டுபிடிக்க வேண்டுமென்று உறுதி மொழி எடுத்தவராய் அதற்க்கான பாதுகாப்பு நடவடிக்கையில் துரிதமாக இறங்கினர்.

அடுத்தநாள் முதல் அந்தப்பகுதிக்கு ஸ்பெஷல் டீம் போட்டு கண்காணிக்கப்பட்டது . அப்போது இருட்டின் நடுவில் இனம் தெரியாத கொடூர முகத்துடன் உருவம் ஒன்று வந்து ஓடிமறைந்தது. அப்போது அதைக் கவனித்துவிட்ட காவல் துறையினர் உஷாராகி அந்த உருவத்தை பின்தொடர்ந்து சென்று கடும் போராட்டத்திற்குப்பின் மடக்கிப்பிடித்து விலங்கிட்டனர். அந்த இளைஞனை அழைத்துச் சென்ற போலீஸ்காரர்கள் நன்கு கவனித்தபின்…பயங்கரத் தோற்றமுடைய முகமூடிகளை அணிந்து கொண்டு இத்தகைய நடவடிக்கைகளை செய்து வந்ததையும், அவர் யார் என்றஎல்லா உண்மைகளும் சொன்னதைக் கேட்டு வியப்படைந்தனர். ஆம்..அந்த இளைஞன்  தான்படித்த படிப்புக்கு தகுதியான வேலைகிடைக்காத விரக்தியில் தீய நட்புக்களை ஏற்படுத்திக் கொண்டு இப்படி இரவில் வருபவர்களை தனது முரட்டுக் கரம் கொண்டு தாக்கி பேயென நம்பவைத்து சூறையாடலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

படித்த இளைஞர்களின் சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைவார்த்தைகாட்டி சில சமூக விரோதிகள் அவர்களை குழந்தை கடத்தல், தனிமையில் வரும் வாலிபர்கள் வயதுப் பெண்கள் கடத்தி பனையக்கைதியாக வைத்துக்கொண்டு மிரட்டிப் பணம் பறிப்பது வீட்டில் தனிமையில் இருப்பவர்களைத் தாக்கி பணம் நகைகளைக் கொள்ளையடிப்பது போன்ற கொடுஞ்செயல்களைச்செய்வதுடன் தட்டிக் கேட்பவர்களைக் கொலை செய்து விடுவது போன்ற இத்தகைய சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தி வருவது தெரியவந்தது..

படித்த இளைஞர்கள் சிலர் வேலையின்மையின் காரணத்தால் மன விரக்தியில் தீய நட்புக்களை வளர்த்துகொண்டு இத்தகைய கொடுஞ்ச்செயல்களை பெருநகரங்களில் செய்து வருவதை சமீபகால நிகழ்ச்சிகளின் மூலம் அறிய முடிகிறது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top