கதவுகள் திறக்க,,,,,,,,,,,
யாரென்று பார்த்தனர் மனோகரும் அருணும் ,,, அது முடியரசன் தான்,,,
மனோகரனை பார்த்த முடியரசன் பரவசபட்டான்,,
“சார் நீங்களா??,,,, உள்ள வாங்க சார்”- என்றான்
மனோகரும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்,,, பின் அருண் தயக்கமாக கேட்டான்
“இங்க முடியரசன்னு???”
“நான் தான் சார்,,,,,, உள்ள வாங்க சார் ” – அழைத்தான்
இருவரும் உள்ளே சென்றனர்,,,, வீடு சுத்தமாக இருந்தது,,,, இரண்டு ரூம் , ஹால், சோபா, டிவி என எல்லா பொருள்களும் எங்கு எங்கு இருக்க வேண்டுமோ அங்கன்னு இருந்தது
ஆனால் வீட்டில் ஒரு நிசப்த்தம்,,,, ஒரு மயான அமைதி நிலவியது
“சாரி சார் நான் குளிச்சிட்டு இருந்தேன் அதான் உடனே கதவு திறக்க முடில்ல” – மன்னிப்பு கேட்டான்
“அதனாலென்ன பரவாயில்லை “- பதில் கொடுத்தார் மனோகர்
“அப்புறம் சார் என்ன சாப்புடுரீங்க?”
“இல்ல ஏதும் வேண்டாம்,,,,,,, உங்க பரிசு பார்த்தேன் அருமையா இருந்துச்சு அதன் உங்களக்கு நன்றி சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன்”- என்றார் மனோகர்
“அப்படியா சார் ரொம்ப சந்தோசம் சார்,,,,,, உங்களுக்கு நல்ல மனசு சார்,,,,, இப்பெல்லாம் ரசிகர்களை கருவேப்பில்லை கொத்து மாதிரி தான் பயன் படுத்திக்கிறாங்க ஆனா நீங்க எனக்கு நன்றி சொல்ல என் வீடு வரைக்கும் வந்துருக்கீங்க”- நெகிழ்ந்தான்
அருண் மனோகரை ஒரு பார்வை பார்த்தான்,,,
“அது என்ன முடியரசன்னு ஒரு பேர் வித்தியாசமா இருக்கே” – என்றான் அருண்
“அதுவா சார் என் பேரு “கேசவ ராஜ்” அதை தான் முடியரசன்னு வச்சிக்கிட்டேன் “- என்றான்
தான் பேச வந்ததை பேச ஆரம்பித்தார் மனோகர்
“நீங்க வரைஞ்சி கொடுத்த படம் ரொம்ப அழகா இருக்கு அத எங்க பாத்து வரைஞ்சீங்க”
“வானத்துல தான் சார்”- பதில் கொடுத்தான் முடியரசன் என்கிற கேசவ ராஜ்
“என்ன சொல்றீங்க “- குழப்பத்தோடு கேட்டான் அருண்
“ஆமான் சார் ,,,, வானவில்லை வானத்துல தான பாக்க முடியும்” – சாதாரணமாக பதில் கொடுத்தான் கேசவ ராஜ்
“வானவில்லா இல்லையே அது ஒரு காடு ஆச்சே”- கேட்டார் மனோகரன்
“காடா இல்லையே சார் நான் மழை நேர வானவில் தான் வரைஞ்சி கொடுத்தேன்”
“இல்ல கேசவா இங்க பாருங்க”- அருண் கையேடு கொண்டு வந்த படத்தை காகிதத்தில் மூடி வைத்திருந்தான்
அதை பிரித்து காட்டினான் ,,,,,,,,,,,,,,,,,
அதை பார்த்த முடியரசன் அதிர்ந்தான்
“இல்ல சார் இது நான் வரைஞ்சது இல்ல”
“இது உங்க கையெழுத்து தானே”
“ஆமான் சார் ஆனா இப்டி ஒரு காட நான் பாத்ததே இல்லையே,,,,,,, அது மட்டும் இல்லை சார் எனக்கு காடு வரையுற பழக்கமே இல்ல”
“அப்போ இது எப்படி எனக்கு வந்தது”- குழப்பத்தோடு இருந்தனர் மூவரும்
“சார் ஒரு நிமிஷம் இருங்க” – சொல்லிவிட்டு அந்த படத்தை வாங்கி கொண்டு தன் அறை நோக்கி போனான் முடியரசன்
சிறிது நேரம் சென்றது,,,,,
“ஐயோ ,,,,,,,,,,யோ யோ ” -அலறல் சத்தம்
சத்தம் கேட்டு உள்ளே சென்றனர் அருணும் மனோகரனும்
உள்ளே,,,,,,,,,
வாயில் நுரை தள்ளிய நிலையில் முடியரசன் ,,,,,,,,
தொடரும்…