அருணை மருத்துவமனையில் சேர்த்தனர்,,,, அவன் சுயநினைவு இழந்திருந்தான்,,,,,,,,
அருண் அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்ல பட்டான்,,, அங்கே பலவகையாக நவீன மருத்துவங்கள் அவனுக்காக வரிசையில் காத்திருந்தனர்
மனோகரும் அசோக்கும் அந்த அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தனர்,,,,,,, மனோகர் மனம் கலங்கி இருந்தார்
“அருண்!! என் பையன் மாதிரி அசோக் அவனக்கு ஏதும் ஆயிடக்கூடாது “- மருகினார் மனோகரன்
“கவலபடாத்தீங்க அங்கிள் அருண்க்கு ஏதும் ஆகாது,,,,,,,, டோன்ட் பீல் அங்கிள்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அறையிலிருந்து வெளிப்பட்டார் மருத்துவர்
“டாக்டர்!! அருண்க்கு எப்படி இருக்கு “- அவசரமானார் மனோகர்
“நத்திங் டு வொரி,,,,,, அவர் ரொம்ப பயந்திருக்காரு
ஏற்கனவே ஆஸ்த்துமா பேசன்ட் வேற அதான் மூச்சு திணறல் அண்டு பிக்ஸ் வந்துருக்கு,,,, மத்தபடி அவர் ரொம்ப பலவீனமா இருக்காரு அவருக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும்
இந்த மருந்தெல்லாம் வாங்கிட்டு வாங்க,,,,,,,, அவர் ஒரு ஒன் ஆர் டு வீக்ஸ் இங்கயே இருக்கட்டும்” – என்றார்
மனோகர் அப்போத்துதான் நிம்மதி பெருமூச்சு ஒன்று விட்டார்
“ஓகே டாக்டர்””- அந்த மருந்து சீட்டை வாங்கினார் மனோகர்
“இங்க குடுங்க அங்கிள் நான் போய் மருந்து வாங்கிட்டு வரேன்,,, நீங்க ரிலாக்ஸ்-ah அப்படி உக்காருங்க” என்று சொல்லிவிட்டு அசோக் கீழ் தளத்திருந்த மருந்தகத்திற்கு சென்றான்
மனோகர் அந்த அறையின் வாசலில் இருந்தார்,,,,
அப்போது அங்கு அவர் காதருகில் ஒரு குரல்,,,,,
“என்ன மனோ எப்படி இருக்க???”
திரும்பிப்பார்த்தார்,,,,,,,,,, அங்கு யாருமே இல்லை,,,, அதை தன் பிரம்மை என்று நினைத்து கொண்டார்
சென்று இருக்கையில் அமர்ந்தார்,,,,,,,,
“என்ன மனோ கேட்டதுக்கு பதிலே சொல்லல??? நல்லா இருக்கியா???”
மீண்டும் வெகு அருகாமையில் அந்த குரல்,,,,,,,,, நல்ல பரிச்சயமானதுதான்,,,,,,, அடிக்கடி கேட்ட குரல்
ஒரு கம்பீரமான ஆணின் குரல்,,,,, அதை கேட்கும்போதே மனோகரின் மனதில் ஒரு மரியாதையும் பயமும் பரவ தொடங்கியது
“என்ன இது வினோதமா இருக்கே??” அவர் தனக்கு தானே சொல்லி கொண்டே நிமிர்ந்தார்,,,,,,,,,,
எதிரே அசோக்,,, திடுக்கிட்டார்
அசோக் அவர் முகத்தை பார்த்தான் வியர்த்திருந்தது,,,,,,,, குழப்பமும் கூடவே
“என்ன அங்கிள்,,,, அதன் டாக்டர் அருண்-க்கு ஏதும் இல்லானு சொல்லிட்டாங்கள அப்பறம் ஏன் அப்செட் ஆ இருக்கீங்க”
“இல்ல அசோக்,,,,,,,,, அது வந்து,,,,,,” என்ன சொல்வது என்றே அவருக்கு புரியவில்லை
“என்னாச்சு அங்கிள் ”
“நத்திங் அசோக்,,,,,, லீவ் இட்”
“ஓகே அங்கிள்,,,,,,,, நாம எப்போ “சொர்ணகாடு” கிளம்பலாம்”
“இன்னைக்கே”- அவரை அறியாமலே பதில் சொன்னதாய் உணர்ந்தார் மனோகரன்
“ஓகே அங்கிள்,,,,,,, அருண் இங்கயே இருக்கட்டும் நாம மட்டும் போலாம்”
“ம்ம்ம் ஓகே அசோக்,,,,,,,,, நீ வீட்டுக்கு போய் நாம போக தேவையான எல்லா ஏற்ப்படும் பண்ணு நான் சீப் டாக்டர் பாத்து அருண் பத்தி பேசிட்டு அவன பாத்துக்க சொல்லிட்டு வரேன்”
‘ஓகே அங்கிள்”- அங்கிருந்து கிளம்பினான் அசோக்
மனோகர் அந்த மருத்துவமை தலைமை மருத்துவரை பார்க்க சென்றார்,,,,,,,,,,,,,,
அவரின் பின்னே அவரில் நிழலை போல வந்தது அது???????????????????????????.
தொடரும்…