தன் ஆராய்ச்சி கட்டுரையின் முடிவுகளை எழுதிக்கொண்டிருந்தார் மனோகரன்,
அவர் ஒரு கதாசிரியர், ஒவ்வொரு கதையையும் அதன் தனித்துவம் மாறாமல் உள்ளமைப்பையும் கண்டறிந்து எழுதுபவர்,,, எழுத்து விஞ்ஞானி என்றொரு சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு
அவரின் கதை எல்லாம் சமுதாய நடைமுறையிலுள்ள விஷயங்களை பற்றியே இருக்கும்
மூடநம்பிக்கைகளை வேரோடு அகற்ற வேண்டும் என்ற பெரியாரின் எண்ணம் கொண்டவர் மனோகரன்
அறிவியல் மலர்ச்சியில் ஆக்கமா?? அழிவா?? என்பது அவர் கடைசியாக எழுதிய கதையின் கரு
அதில் பல பிரதிகள் விற்பனையாகி அவரது பெயரை எழுத்துலகில் ஆழ பதிய செய்தது ,,,
மனோகர் அவர் வீட்டின் புல்வெளி பிரதேசத்தில் அமர்ந்து காலை நாழிதலை படித்து கொண்டிருந்தார்
அப்போது அவரின் நண்பர் தணிகாசலம் அங்கு வந்தார்,,,
“அடடே தணிகாசலம்,,,, வா வா எப்டி இருக்க??”
“நல்ல இருக்கேன் மனோ,,, நீ எப்டி இருக்க??”
“ம்ம் எனகென்ன ரொம்ப நல்ல இருக்கேன்”
“அப்புறம் உன் கதை படிச்சேன் ரொம்ப நல்ல இருந்துது ,,,, கதைனாலே கற்பனை தான் முழுக்க முழுக்க இருக்கணும்,,,, கொஞ்சம் வேணும்னா நிஜம் இருக்கலாம் அப்டிகிரத மாத்தி முழுக்க முழுக்க நிஜத்தை மட்டுமே சொல்ற உன் கதை ஒரு சரித்திரம் தான் போ”
“என் கதை வெறும் கனவுலகத்துல நடக்குற மாதிரி இருக்க கூடாது அதை படிக்கிறவங்களுக்கு அறிவு தர மாதிரி இருக்கணும்”
“அதும் சரி தான் பா,,, மூட நம்பிக்கைகளைப்பத்தி நீ நெறைய எழுதி இருக்க ஆனால் இப்போவும் மூட நம்பிக்கை எல்லாம் இருந்துகிட்டு தான் பா இருக்கு,,,சில மனிசங்களை மாத்த முடியாது”
“ஏன் அப்டி சொல்ற ”
“இப்போ என் ஊரையே எடுத்துக்கோ,,, அங்க ஒரு மலைகாடு இருக்கு அந்த காட்டுக்குள்ள ஒரு கன்னி பொண்ணு இருக்கிறதாவும்,,, அவள் ஒரு சாபம் வாங்கிருக்கிறதாவும்,,,, அவளுக்கு மூப்போ, மரணமோ கிடையாதுனும் அவளை பாக்கவோ காப்பத்தவோ யாராவது போன அவங்களுக்கு மரணம் நிட்சயம்னும் நம்பிகிட்டு இருக்காங்க”
மனோகர் தணிகாசலத்தின் பேச்சை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்
“அவங்கள மாத்தவே முடியாது பா. இதுவரைக்கும் எனக்கு தெரிஞ்சி யாரும் அந்த காட்டுக்குள்ள போனதில்லை,,, அந்த காடு இருக்கே அங்கே போறவங்க பைத்தியம் பிடிக்கிறதா சொல்றாங்க எங்க ஊர்ல இரண்டு மூணு பேர் அப்டிதான் இருக்காங்க … அங்க என்ன இருக்குனு யாருக்கும் தெரியாது
ஆனா பாரு வருசா வருஷம் அந்த கன்னி பொண்ணுக்கு ஏதேதோ பூசலாம் பண்றாங்க
சரி விடுப்பா நான் கிளம்புறேன், உனக்கும் நிறைய வேல இருக்கும் “- சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் தணிகாசலம்
மனோகரனின் மனதில் இப்போது அந்த காடு வந்து குடி கொண்டது
“அங்க என்ன இருக்கு???????????”
தொடரும்…