அவன் ஒன்றும் புரியாதவனாய் ஒரு வித அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான்.
மீண்டும் ஏதோ நினைத்தவனாய் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தான்.
இப்போது சற்று நேரம் முன்பிருந்த தண்ணீரைக் காணவில்லை.
சிலை கீழே படுத்தவாறு வானம் பார்த்துக்கொண்டிருந்தது.
உள்ளே இருந்த சிலையின் முகத்தை இப்போது தான் கவனித்தான். அது இவன் முகமாய் இருந்தது…
ஆம்…
இது இவனுடைய சிலையே தான்…
அப்போ…
அப்போ…
என்னையே நான் துரத்தினேனா…!!!
ஏன்…?
எப்படி….?
எதற்கு…..?
ஒன்றுமே விளங்காமல் இவன் நின்ற பொழுது…
‘சரக்’ ‘சரக்’ ‘சரக்’ ‘சரக்’ என்று யாரோ நடந்து வருவது போன்ற ஒரு சத்தம் கேட்டது…
எதிரே..
இவனது சிறுவயது கனவில் வரும் அதே இரண்டு பேர்…
ஒரு பாயுடன் வந்து கொண்டிருந்தார்கள்…
தொடரும்…