……………………..கி.மு. ஐம்பதாம் வருடம்…. ……………………..ஓம் தும்பிக்கையானே துணை. சிறு குறிஞ்சி, ஙெமிலி, சீரொட்டும் ஊரன்பத்ரம் நறியகல் நெய் நசித் தெண்ணில் ஒன்றாய் ரசமூன்று கிளறி விசும்பின் மதியன்ன முகிழ்த்து மெழுகி வைப்பின் இலையொழுகி இரும்பும் பொன்னாம். அம்பல சித்தர் தம் சீடர்கள் திருமுடியானுக்கும் சுதர்சனனுக்கும் விளக்கிக் கொண்டிருந்தார். சிறு குறிஞ்சி, ஙெமிலி, ஊரக்கோட்டான், மகேந்திர பத்திரம் இவற்றை சம அளவு எடுத்து இடித்து பாஷாணக் கல்லுடன் நீரும் எண்ணெயும் தெளித்து எட்டு பங்கு ஒரு பங்காகும் வரை ... Read More »