தங்கத் தண்டு – 17

அந்தரீஸுக்கும் மூச்சுத் திணறியது. நிலத்தில் போட்ட மீனாகத் திணறி முடித்தான். அவன் வாய் திறக்க முயற்சித்த அதே விநாடி…

ஒரு கை அவன் மூக்கையும் வாயையும் பொத்தி குளத்தின் அடித்தரைக்கு இழுத்துப் போனது!

அடித்தரையில் அவனைப் படுக்க வைத்து வாயோடு வாய் வைத்து காற்றை ஊதி மூச்சு திணறலை சரிப்படுத்திய பின் திரும்பவும் மூக்கையும் வாயையும் பொத்தியது!

இரவு பத்து மணி இருக்கலாம். ரிது நரேனின் மடியில் கை போட்டு கதையளந்து கொண்டிருந்தாள். நரேன் தன் சுபாவத்துக்கு மாறாக அமைதியாக இருந்தான். லாவண்யாவின் மரணம் அவனை அந்தளவு மாற்றியிருந்தது.

“ சட்டையில் என்ன ஈரம்? ” என்று கேட்டான் நரேன்.

“ அம்மா அழுதா ! ”

குஜராத்தில் பால் மணம் மாறாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை கண்டிருக்கிறான் நரேன்; கண்றாவியாய் இருக்கும்! கல்யாணமே கண்றாவியாய் இருக்கும்போது பெற்ற மகளை அந்நியனிடம் அனுப்பி வைக்க ஒரு தாய்க்கு எவ்வளவு வெட்கக்கேடாக இருக்கும்? அகோரி தலைவனின் ஆணையை மீறக் கூடாது என்ற நிர்ப்பந்தத்தில் அனுப்பியிருக்கிறாள்; அழாமல் என்ன செய்வாள்?

“ நீ அழலையா? ”

“ நான் ஒண்ணும் அழ மாட்டேன்; போராடுவேன்! ”

போராடுகிற மூஞ்சியைப் பார்க்கலை?

“ யாராவது உன்கிட்ட தப்பா நடந்துகிட்டா என்ன செய்வே? ”

“ தப்பா நடந்துகிறதுன்னா என்ன? ”

நரேன் நாவால் கன்னத்தை துழாவிக் கொண்டான்; இவளும் லாவண்யாவைப் போலவே கள்ளமில்லாது இருக்கிறாளே? பேச்சை மாற்றினான்;

“அத விடு, நீயும், உன் அம்மாவும் இந்த நரபலி ஆளுங்க கிட்ட எப்படி மாட்டினீங்க? ”

கண்கள் விரிய அவள் சொன்ன கதையிலிருந்து நரேன் அதிர்ச்சிகரமான விபரங்களை கிரகித்தான். விக்டர் மார்ஷல் இங்கு வந்திருக்கிறான்; ஏதோ சுரங்கம் என்கிறாள் இவள்! உயர்தர விஸ்கியில் சயனைடு கலந்து கொடுத்து காட்டு வாசிகளைக் கொன்றிருக்கிறான்! இவன் என்ன உபகாரம் செய்தவர்களைக் கூடவா கொல்வான்?

என்ன சுரங்கம்? தெரிவிப்பதற்கு ஆட்களை விட்டு வைக்கவில்லையே விக்டர் ?!!

சற்று நேரத்தில் ரிது அழ ஆரம்பித்து விட்டாள்.

“அம்மா வேணும் ! அம்மா இல்லாம தூங்க மாட்டேன் !”

நரேன் ரிதுவை அவள் அம்மாவிடம் அனுப்பி வைத்தான். போன வேகத்தில் திரும்பினாள், கையில் பாரிஜாத மலர் மாலையுடன். “அம்மா உள்ளே வரக் கூடாதாம்; எனக்குப் பயமா இருந்தா உன்னை கட்டிப் பிடிச்சு தூங்க சொன்னா ! ”

“ அது என்ன கையில? ”

“ இந்த மாலைய உன் கழுத்துல போடச் சொன்னா… நரேன் ! நரேன் ! இத நானே எங்கழுத்துல போட்டுக்கவா ? ”

“ போட்டுக்கயேன் ! ”

“ நான் தூங்கணுமே, எனக்கு பயமா இருக்கே? ”

நரேன் பர்சிலிருந்து தன் புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தான். “ இந்தா இதை வச்சிட்டுப் படு.. நல்லா தூக்கம் வரும் ! ”

போட்டோவை வாங்கிக் கொண்டு படுத்தவள் தூங்கி விட்டாள் !

அந்தரீஸும் சுதர்சனாவும் எப்படி இருக்கிறார்களோ?

தப்பித்து ஓட முடியாதபடி காவல்…….. இருட்டில் பாதையும் தெரியவில்லை ! எத்தனை பேர் இருக்கிறார்கள்? இருபதுக்கு மேல் போகாது…எப்படியும் அகோரிகள் பகலில் சோர்ந்து விடுவார்கள். சற்று நேரம் கண்ணயர்வது புத்திசாலித்தனம் ! படுத்துக் கொண்டான்.

நடுநிசியில் திடுக்கிட்டு விழித்தான். இந்தப் பெண் ரிது அவளது உடம்பின் மேல் பாகம் முழுதும் அவன் மார்பில் அழுந்தும்படி படுத்திருந்தாள். அவள் வலது கன்னம் அவனது வலது கன்னத்தில் இழைந்ததோடல்லாமல் அவள் எச்சில் அவன் கன்னத்தில் வழிந்தது ! நரேன் இந்தப் பக்கம் திரும்பினால் உதடோடு உதடு படும்; அந்தப் பக்கம் திரும்பினால் அவள் காதுக்குழியில் இவன் மூக்குப் பொருந்தும்…. !

பாரிஜாத மலரையும் சேர்த்து விதம் விதமான வாசனை ! என்ன ஸ்பரிசமோ? ஒவ்வொரு வித மென்மை; அழுத்தம்… ! இந்தப் பெண்ணுக்கு எலும்பு இருக்கிறதா, இல்லையா?

நித்தமும் தாயிடம் இப்படித்தான் படுப்பாளா? நரேன் பெருமூச்செறிந்தான். கொடுத்து வைத்த பெண் ! தாயாரோடு தூங்குவது போல் தன்னோடு தூங்குகிறாள் !

அகோரித் தலைவன் சொன்னது ஞாபகம் வந்தது. “ என் பரிசை மறுத்தால் தலையிருக்காது ! ”

அறைக்குள் ஒரே ஒரு ஜன்னல் வழியாக வெளிச்சமும் குளிர்காற்றும் வந்து கொண்டிருந்தது. அவனும் மனிதன்தானே……………. காலை சிறிது நீட்டி ஜன்னல் கதவை முழுதும் சாத்தினான் !

காலபைரவியின் பலி பீடத்தில் பலியாகப் போவது யார்? ரிதுவா? இல்லை…………………….?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top