அவள் தான் யாதவி…..,மோதிரத்தின் சொந்தக்காரி.
நான் ஆனந்தன். முழு பெயர் நித்தி ஆனந்தன். வழக்கமான ஆளாகத்தான் நானும் இருந்தேன். இருந்தேன் என்பது இறந்தகாலம்தானே. ஆனால் அந்த ஒவ்வொரு மாற்றமும் என் நினைவில் உயிராய்.
ஆங்கில படங்களில் மின்னல் பட்டு சக்தி பெறுவது, சிலந்தி கடித்து சக்தி பெறுவது, மோதிரம் அணிந்து சக்தி பெறவது போல இப்படித்தான் இதுதான் இதலால்தான் என என் சக்தியை நான் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த சக்தி எனக்குள் இருப்பது அல்ல; என்னுடன் இருப்பது.
உள் இருப்பது;உடனிருப்பது. எத்தனை வித்தியாசங்கள் கொண்ட வார்த்தை இவை. கொஞ்ச காலமாகத்தான் மணியை எனக்கு தெரியும். தெரியும் என்பதைவிட, தெரிந்து கொள்ளும் படி அமைந்தது. மணியும் மற்ற யாரும் வேண்டுமானால், என்னை மர்ம மனிதனாக நினைத்துக் கொள்ளலாம். இரவில் மட்டுமே என்னை பார்க்கலாம். நான் கவனிக்கப்படாதவன் எனலாம். ஆனால் நான் தினமும் மணியை கவனித்துக் கொண்டுத்தான் இருக்கிறேன். மணியின் விரலுக்கு அந்த மோதிரம் வந்தது முதல், மஞ்சல் முகம், கழிவறையில் கழட்டப்பட்ட மோதிரம் , ஆளில்லாத போதும் பின்னால் நின்ற யாரோ, யாதவி என்ற கையொப்பம், மின் தூக்கியின் மேல் பார்த்த முதலாளியை மீண்டும் கீழே பார்ப்பது, அவ்வளவு ஏன் இன்று மோதிரத்தில் தெரிந்த பெண் உருவம் வரை. அது யார் ? யாராய் இருக்கும்
இன்னும் சொல்லப் போனால், என் வேலையே அதுதான் அல்லது இப்படியும் சொல்லலாம் வேலை முடியும் வரை.
குழப்பம் கொடுக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் சில முடிச்சுகள் சிலரால் மட்டுமே அவிழ்க்க முடியும். அல்லது சிலரால் மட்டுமே அழிக்க முடியும். மணியின் கதையில், அவன் அணிந்திருக்கும் ‘அதே மோதிரம் ’ குறித்த மர்மங்கள் அவிழ்க்கப்படுமா இல்லை அழிக்கப்படுமா என்பதுதான் என் கேள்வி.
இதில் நான் கூட இல்லாமல் போகலாம். அல்லது நான் மட்டுமே இருந்தும் தொலைக்கலாம். மோதிரம் என்றும் மணியுடன் அவன் கதை முடியும் வரை.
முற்றும்.