Home » 2015 » March » 09 (page 2)

Daily Archives: March 9, 2015

பிறவி மர்மங்கள் – 18

அந்த வாரம் விரைவாக கழிந்தது. சென்ற வார சிகிச்சை டேப்பினை மீண்டும் மீண்டும் காதுகொடுத்துக் கேட்டேன். நான் எப்படி புதுப்பிக்கப்படும் நிலையை அடைகிறேன்? நான் எதுவும் ஞானம் பெற்றதாக உணரவில்லை. இப்பொழுது எனக்கு உதவி செய்வதற்காக ஆன்மாக்கள் மீண்டும் அனுப்பப்படும். ஆனால் நான் என்ன செய்யவேண்டும்? இது எனக்கு எப்பொழுது தெரியும்? எனக்கு செய்யக்கூடிய திறமை இருக்கிறதா? நான் பொறுமை காக்க வேண்டியது அவசியம் என்று எனக்கு புரிகிறது. “பொறுமையும் தகுந்த நேரமும் . . . ... Read More »

பிறவி மர்மங்கள் – 17

கேத்தரின் மீண்டும் முணக ஆரம்பித்தாள் “கிடியன் . . . . . கிடியன் என்பவன் என்னுடன் பேசமுயற்சிக்கிறான்” “என்ன கூறுகிறான்?” “அவன் எங்குமிருக்கிறான். அவன் ஒரு காக்கும் தேவதையைப் போன்றவன். இப்பொழுது என்னுடன் விளையாடுகிறான்.” “உன் பாதுகாப்பாளர்களில் ஒருவனா?” “ஆம். என்னுடன் விளையாடுகிறான். . . . . அவன் எனக்காக எப்பொழுதும் இருக்கிறான் என்று என்னை உணரவைக்க முயற்சிக்கிறான் என்று நினைக்கிறேன்.” “கிடியன்?” மீண்டும் வினவினேன். “அங்கே சென்றுவிட்டான்.” “அவனுடன் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறாயா?” ... Read More »

பிறவி மர்மங்கள் – 16

மனோவியாதியால் பதற்றமும், பயமும் கொண்டிருந்த கேத்தரினுடைய நிலையில், ஒவ்வொரு வாரமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிந்தது. அவள் மிகவும் பொறுமைமிக்கவளாகவும், அமைதியுடனும் காணப்படுவதும் தெரிந்தது. புதியவர்களை சந்திப்பதை பிரச்சனையாக நோக்கிய கேத்தரின், இப்பொழுதெல்லாம் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அவர்களை எதிர்நோக்க ஆரம்பித்தாள். புதியவர்களிடம் அன்பையும் பரிமாறிக்கொண்டாள். அவளுள் ஒளிந்திருந்த, அவளுடைய தனித்தன்மை வாய்ந்த நற்குணங்களை அவளைச் சுற்றி இருப்பவர்கள் உணரும்படி, அவளால் எந்தவித பயமுமின்றி வெளிப்படுத்த முடிந்தது. ஹிப்னடைஸ் அமர்வின்பொழுது கேத்தரினுடைய பிறவி நினைவுகள் ஆயிரக்கணக்கான வருடங்கள் ... Read More »

பிறவி மர்மங்கள் – 15

மூன்று வார இடைவெளிக்குப் பிறகு ஹிப்னடைஸ் அமர்வுக்கு வந்தாலும், கேத்தரின் மிக விரைவில் சமாதி நிலைக்குச் சென்றுவிட்டாள். இன்னொரு பிறவியில் இன்னொரு உடல் எடுத்திருக்கிறாள். “ஒரு பானையில் ஏதோ எண்ணெய் இருக்கிறது. பலவிதமான எண்ணெய்கள் இருக்கின்றன. பொருட்களை சேமித்துவைக்கும் கிடங்கு போல் தோன்றுகிறது. பானைகள் சிவந்த நிறத்தில் இருக்கின்றன. . . . . . செம்மண்ணில் செய்த பானைகள் என்று நினைக்கிறேன். பானைகளின் ஓரங்கள் நீலநிறத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. சில மனிதர்களைக் காண்கிறேன். . . ... Read More »

பிறவி மர்மங்கள் – 14

மூன்று வாரங்களுக்குப் பிறகு, அடுத்த ஹிப்னாடிஸ அமர்வு நிகழ்ந்தது. அதற்கு முன் என்னுடைய விடுமுறை காலத்தில், இனிமையான கடற்கரை மணலில் படுத்திருந்தேன். கேத்தரினின் சிகிச்சையிலிருந்து எனக்கு மறைமுகமாக தெரிவிக்கப்பட்டத் தகவல்களைக் குறித்து சிந்திக்க எனக்கு போதுமான அவகாசமும், பொறுமையும் இருந்தது. ஹிப்னடைஸ் மூலம் வாழ்வில் பின்னோக்கிச் சென்று, முற்பிறவியில் கண்ட பொருட்கள், உண்மைகள், வாழ்க்கை முறைகளைப் பற்றி, நுணுக்கமான பார்வையுடன் துல்லியமான விவரங்கள், விளக்கங்கள் இவற்றை கேத்தரினால் மீட்டெடுக்க முடிந்திருக்கிறது. இந்த தவகல்களை இயல்பான நிலையில் அவள் ... Read More »

பிறவி மர்மங்கள் – 13

“நான் உருளையான தூண்களைக் கொண்ட கட்டிடங்களைக் காண்கிறேன். ஏகப்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. நாங்கள் வெளியே நிற்கிறோம். நிறைய ஆலிவ் மரங்கள் இருக்கின்றன. மிகவும் அழகாக இருக்கின்றன. நாங்கள் எதையோ கவனித்துக்கொண்டு இருக்கின்றோம். மக்கள் அனைவரும் வேடிக்கையான முகமூடி அணிந்திருக்கிறார்கள். முகமூடி முகத்தை முழுவதும் மூடியிருக்கிறது. ஏதோ திருவிழாபோல் உள்ளது. நீண்ட அங்கியும் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் ஏதோ நடிப்பதுபோல் இருக்கிறது. அவர்கள் மேடையில் இருக்கிறார்கள். நாங்கள் அமர்ந்திருக்கிறோம்.” “ஏதாவது நாடகத்தைப் பார்க்கிறாயா?” “ஆம்.” “நீ எப்படி இருக்கிறாய்? உன்னைப் ... Read More »

பிறவி மர்மங்கள் – 12

கேத்தரின் ஹிப்னாடிச அமர்வுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அடுத்த அமர்வுக்கு என் கிளினிக்கு வந்தாள். நான் சென்ற வாரத்தில் அவளிடமிருந்து பெறப்பட்ட, நம்புவதற்கரிய, ஆடியோ டேப்புடன் தயாராக இருந்தேன். முற்பிறவி நினைவுகளுடன், தெய்வீக தன்மை பொருந்திய செய்திகளைக் கொண்ட கவிதைகளையும் தருபவள் என்பதால், அவளுக்கும் அந்த டேப்பைப் போட்டு காண்பிக்கலாம் என்று நினைத்தேன். இறப்புக்கும், பிறப்புக்கும் இடைப்பட்ட ஆவி நிலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவளுடைய நினைவில் இருக்காதென்பது எனக்குத் தெரியும். எனவே அவள் அந்த டேப்பைக் ... Read More »

பிறவி மர்மங்கள் – 11

கேத்தரின் முணுமுணுக்கும் சத்தம் கேட்டது. “எனக்கு இவர்களிடம் நம்பிக்கையில்லை.” “யாரிடம்?” – இடைமறித்தேன். “வழிகாட்டிகளிடம்.” “நம்பிக்கையில்லையா?” “எனக்கு பரிபூர்ண நம்பிக்கை கிடையாது. அதனால்தான் என் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கிறது. அந்தப் பிறவியில் எனக்கு அவர்களிடம் நம்பிக்கையில்லை.” அவளுடைய பதினெட்டாம் நூற்றாண்டு வாழ்க்கையை ஆராய்ந்து கொண்டிருந்தாள். நான் அவளிடம் அந்த வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டாளென்று வினவினேன். “கோபத்தையும், அடுத்தவர்மீது காட்டும் வன்மத்தையும் பற்றி அறிந்துகொண்டேன். என்னுடைய வாழ்க்கையை, என் கட்டுப்பாட்டுக்குள் அமைத்துக் கொள்ளாததுபற்றி அறிந்துகொண்டேன். என் கட்டுப்பாட்டுக்குள் ... Read More »

பிறவி மர்மங்கள் – 10

கேத்தரினின் ஹிப்னடைஸ் அமர்வு, ஒவ்வொரு முறையும் பல மணி நேரங்கள் பிடித்தன. எனவே அன்றைய தினத்தின் இறுதி நோயாளியாக மட்டுமே, கேத்தரினை தேர்வு செய்ய நான் திட்டமிட வேண்டியிருந்தது. மறுவாரத்தில் கேத்தரின் வந்தபோது மிகவும் அமைதியாகவும், சாந்தமாகவும் காணப்பட்டாள். அவளது தந்தையுடன் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறினாள். அவளது வழியில், அவள் தனது தந்தையை மன்னித்துவிட்டிருந்தாள். அவ்வளவு சாந்தமாக நான் கேத்தரினைப் பார்த்ததே இல்லை. அவளது மனநிலையில் ஏற்பட்ட அதிவிரைவான முன்னேற்றத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீண்ட காலமாக ... Read More »

பிறவி மர்மங்கள் – 9

நான் என்னுடைய அலுவலக அறையில் இருந்தபடி கேத்தரின் இறுதியாக கூறியவைகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நம்மை தோற்றுவித்தவன், அனைத்து மக்களையும் சமமாக படைக்கவில்லை. திறமைகள், சக்திகள் யாவையும் வேறு வேறு பிறவியிலிருந்து நாம் பெற்றிருக்கிறோம். “ஆனால் இறுதியாக நாம் அனைவரும் ஒரே அளவு ஆற்றலைப் பெற்று சமமாகி விடுவோம்.” இந்த நிலையை அடைவதற்கு அதிக ஜென்மங்கள் எடுக்கவேண்டும் என்று நான் யூகித்தேன். இசைக்கலைஞன் மொசார்ட், இளவயதிலேயே நம்பமுடியாத அளவுக்கு திறமைகளைப் பெற்றிருந்தான். அந்தத் திறமைகளும் முந்தைய பிறவிகளிலிருந்து ... Read More »

Scroll To Top