Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » ஹாஸ்டல் பேய்கள்!!!

ஹாஸ்டல் பேய்கள்!!!

என் பெயர் காவ்யா.பலருக்கு பேய்களை பார்க்கனும்னு ஆசை.இன்னும் சிலர் பேய்கள நம்ப மாட்டாங்க ஆனா இது ஒரு உண்மைக்கதை.
இது எனக்கு நடந்தது.

நான் ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.அது ஒரு அரசு கலைக்கல்லூரி.என் ஊரிலிருந்து கல்லூரி வெகு தூரம் என்பதால் நான் கல்லூரி திறக்க மூன்று நாட்கள் முன்னரே வந்து விட்டேன்.

எனக்கு 8th பிளாக் ,ரூம் நம்பர் 9.அந்த பிளாக் பார்க்க பேய் பங்களா மாதிரியே இருந்துச்சு.ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து பேய்களை பார்க்க வேண்டும்னு ஆசை.பயம் தான் ஆனா ஒரு சின்ன தைரியம்.என் ரூம் நோக்கி விரைந்தேன்.

ஆனால் என் ரூம் திறந்து இருந்தது…உள்ளே நுழைந்தேன் இரண்டு கட்டில்கள்.ஒரு ஜன்னல்,வெளியே ஒரு பெரிய புளிய மரம் அதை சுற்றி ஆணி அடித்து இருந்தது .அக்மார்க் பேய் ரூம் போல் இருந்தது.

“டோக் டோக் டோக்…….”

தண்ணீர் விழுவது போல் ஒரு சப்தம்…பாத்ரூமில் யாரோ இருக்கிறார்கள்.உள்ளே நுழைந்தேன்.அங்கே ஒரு பெண் தன் தலைமுடியை வாஷ் பேசினில் விட்டு முடியை வெட்டிக் கொண்டிருந்தாள்.எனக்கு திகில் ஆகிவிட்டது.

“யாரிவள்? இவள் தான் என் ரூம் மேட்???”

“சரி வெளியே வந்த பின்பு கேட்போம்”.

“ஹாய்,ஆம் விக்டோரியா…உங்க நேம்?”

“காவ்யா..”

“ஓகே நீங்க களைச்சு போய் வந்து இருப்பீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ”

அங்கே இரு கட்டில்கள் ,அவள் தனது கட்டிலில் “This cot belongs to Victoria” என்று எழுதி இருந்தாள்.

“என்ன பார்க்குறீங்க எனக்கு என் cotல யாரு படுத்தாலும் பிடிக்காது அதான்…..”

“சரி …”
நான் தூங்க சென்றேன்.நல்ல தூக்கம் .

இரவு 11 மணி,என் பக்கத்தில் யாரோ படுத்து இருப்பது போல் தோன்றியது.கண்விழித்து பார்த்தேன்,

விக்டோரியா…அவளே தான் என் பக்கத்தில் படுத்து என்னையே பார்த்து கொண்டிருந்தாள்,அவள் முகம் முழுவதும் ரத்தக் கீறல்கள்.

” ஏய்,என்ன இது எதுக்கு என் cotல படுத்து இருக்க…??”

“என்னது உன் cot ?? என்ன சொல்ற this is my cot ,see the sticker ”

நான் பார்த்தேன் , “This cot belongs to விக்டோரியா” என்று எழுதி இருந்தது.எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் என் கட்டிலில் தான் படுத்தேன்.எனக்கு தூக்கத்தில் நடக்குற வியாதி எல்லாம் இல்லை.

“சாரி, தெரியாம படுத்திட்டேன்”,என்று கூறி என் கட்டிலில் சென்று படுத்தேன்.

“அதிகாலை 3 மணி இருக்கும் என் பக்கத்தில் யாரோ படுத்து இருக்கிறார்கள்”

“கண்விழித்து பார்த்தேன்…..விக்டோரியா….அவளே தான்”

தன் முடியை வெட்டிக் கொண்டிருந்தாள்,அவள் முகம் முழுவதும் பவுடர்..கண்களில் மை பூசி இருந்தாள்….பார்கவே பயங்கரமாக இருந்தது.

“ஏய் இங்க என் கட்டில்ல என்ன பண்ற??”

“என்னது உன் கட்டிலா , this is my cot ,see the sticker ”

நான் பார்த்தேன்,”This cot belongs to Victoria”…எப்படி இது சாத்தியம் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

ஒரு நிமிடம் இருங்க…”இப்போ விக்டோரியா ஆண் குரலில் பேசினாள்…..என்ன நடக்குது இங்கே?”
நான் என் கட்டிலில் சென்று படுத்தேன்.எனக்கு தூக்கம் வரவில்லை….அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

அவள் தன் முடிகளை வெட்டிக்கொண்டும், கண் இமைகளில் உள்ள  முடிகளை பிடுங்கிக்கொண்டு இருந்தாள்.ஆணின் குரலில் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தாள்.

விடிந்தத்து….ஒரு 7 மணி இருக்கும்.அவளை  எங்கே? .ஒரு மூலையில் அவள் தலைகுனிந்து அழுது கொண்டிருந்தாள்.ஹப்பா..அவள் பேய் இல்லை..அவள் பேயாக இருந்து இருந்தால் விடிந்த பின் எப்படி இருப்பாள்?

பக்கம் சென்றேன்…அவள் தோளில் கை வைத்தேன்….

“விக்டோரியா……”

அவள் கண்கள் பிதுங்கி வெளியே தொங்கி கொண்டிருந்தது….அவள் முகம் முழுவதும் ரத்தம்….

“எதுக்கு என்ன கெடுத்த…..ஏண்டி என் வாழ்க்கைய இப்படி பாலாக்குன?”,அவள் ஆண் குரலில் கர்ஜித்தாள்.

“ஏய் என்னடி சொல்ற…நான் எப்படி உன்னை…உனக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி பண்ற?”

அப்பொழுது அவள் கழுத்தில் இருந்து ரத்தம் சொட்டியது..அதை எடுத்து அவள் தன நாக்கால் நக்கினாள்….

“ஏய் என்ன பண்ற நீ…என்ன ரத்தம் ??”

“எனக்கு ரத்த வாடை பிடிக்கும்……..”

“அவள் என்னை கொடூரமாக பார்த்தாள்…நான் அந்த ரூமை விட்டு ஓடி ஹாஸ்டல் ஆபீஸ்க்கு வந்தேன்”.

“சார் எனக்கு 9ஆம் நம்பர் ரூம் வேணாம் அங்க என் ரூம் மேட் விக்டோரியா ஏதோ பேய் மாதிரி behave பண்றா…”
“என்ன சொல்ற..ரூம் மேட்???? எந்த உலகத்துல இருக்க நீ..உனக்கு நான் குடுத்தது சிங்கள் ரூம் அதுல sharingலாம் இல்ல,உனக்கு ரூம் மேட் இல்ல…”

“அப்போ எதுக்கு சார் ரெண்டு கட்டில்?”

“என்னது ரெண்டு கட்டிலா?..சரி வா பார்க்கலாம்”
“ரூம் பூட்டி இருந்தது…”
“சார் நான் பூட்டவே இல்லை”

“நீ பூட்டாம நானா பூட்டுனேன்??,தொரமா கம்முனு”

“திறந்தேன், அங்கே விக்டோரியா இல்ல…..ஆனா ….அங்க ஒரே ஒரு கட்டில் தான் இருந்துச்சு..அதில் இது எழுதி இருந்துச்சு ,”This cot belongs to Victoria”.

“என் cotல யாரு படுத்தாலும் எனக்கு பிடிக்காதுனு அவள் சொன்னது நினைவுக்கு வந்துச்சு.
அதுனால நான் வேற ரூம் மாற்றி வந்துட்டேன்..”
ஒரு வாரம் கழித்து காலேஜ் ஆரம்பித்தது,சீனியர்களிடம் விக்டோரியா பற்றி கேட்டேன்…அவள் போன வருடம் 9ஆம் நம்பர் ரூமில் தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டா.
அவளிடம் ஆணின் சுபாவங்கள் வந்ததால் சக மாணவிகள் அவளை கிண்டல் செய்தனர்,அதனால் அவள் தற்கொலை செய்து கொண்டாள்.அது என் போன்ற ஜூனியர்களுக்கு தெரியாததால் அந்த ரூமை எனக்கு allocate பண்ணி இருக்காங்க.

இது நடந்து எட்டு வருடம் இருக்கும் ஆனால் இன்னும் இந்த வாசகம் என்னை சுற்றி சுற்றி வருகிறது “This cot belongs to Victoria”.

அன்றிலிருந்து எனது நம்பிக்கையை திருத்தி எழுதினேன்,அது “பேய்கள் இரவில் மட்டும் தான் வரும் என்பது இல்லை,பகலிலும் வரும்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top