கராப்பிட்டி வைத்தியசாலையில் பேய்? ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சம்… பலரும் கண்டதாக தகவல்
காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் ஆவி நடமாட்டம் இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிப்பதால் வைத்தியசாலையில் அச்சத்துடன் கூடிய சூழல் நிலவிவருவதாக தெரிய வருகிறது.
வைத்தியசாலை வளாகத்துக்குள் வெள்ளையுடையணிந்து பெண்ணொருவரது ஆவியின் நடமாட்டம் காணப்படுவதாகவும் விசித்திரமான சத்தங்கள் கேட்பதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கராப்பிட்டி வைத்தியசாலையின் சுகாதார சிற்றூழியரான சமிந்த குமார தெரிவிக்கையில்…
எம்முடன் பணிபுரியும் மற்றுமொரு சுகாதார சிற்றூழியரொருவர் விபத்து சேவை பிரிவிலிருந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு சென்று கொண்டிருந்த போது கால்களற்ற வெள்ளையுடையணிந்த பெண்ணொருவரை கண்டுள்ளார்.
இந்தப் பெண்ணை நோயாளரென கருதி நோயாளர்களை கொண்டு செல்லும் தள்ளு வண்டியில் ஏற்றிச் சென்ற போது அந்த நோயாளியிடம் எந்தப் பிரிவுக்கு செல்ல வேண்டுமென அச்சிற்றூழியர் வினவியபோது அப்பெண் மாயமாக மறைந்துள்ளார்.
அத்துடன் மற்றொரு சிற்றூழியர் வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் இதேபோன்றதொரு பெண்ணை கண்டுள்ளதுடன் அப்பெண் அச்சிற்றூழியரின் பெயரைக் கூறி அழைத்துள்ளார்.
அச்சிற்றூழியரும் அருகில் செல்லவே அப்பெண் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்தவரென அவ்வூழியர் உணர்ந்துள்ளார்.
பேய்கள் தொடர்பாக பெருமளவு கதைகள் உள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரேத அறை முழுவதும் பேய்கள் காணப்படுவதாக பலரும் கூறுவதாக தெரிவிக்கும் அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் செல்டன் பெரேரா, இது வெளியில் பரவும் நிலையில் தவறான செயற்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.