Home » பொது » கடலுக்குள் நீர்வீழ்ச்சி!!!

கடலுக்குள் நீர்வீழ்ச்சி!!!

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும்.

இந்திய பெருங்கடலின் மிக ஆழமானப்பகுதி ஜாவா நீர்வழியாகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மற்றும் பிற அபூர்வ வளங்கள், முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருப்பது தொடர்பான புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பிரமிக்கத்தக்க சேட்டிலைட் புகைப்படம் வியப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் நீருக்கடியில் நீர்வீழ்ச்சி இருப்பதை காட்டுகிறது.

கடலோரத்தில் மணல் திட்டு மற்றும் படிவம் காரணமாக இது ஏற்பட்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை தீவில் இருந்து தென்மேற்காக கழுகுப்பார்வையுடன் மிகவும் கூர்மையாக உற்றுப்பார்த்தால் காணமுடியும். தற்போது இக்காட்சியை கூகுள் மேப்பிலும் காணமுடியும்.

தீவின் கடற்கரையொட்டிய பகுதியில் நீருக்கடியில் உள்ள நீர்வீழ்ச்சி தோற்றம், உண்மையில் மாயை ஆகிறது. 1810-ல் பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட மொரிசியஸ் 1968-ல் சுதந்திரம் பெற்றது. 1992 குடியரசானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top