நீங்க நினைச்சா இந்த ஆவியை அடக்கி இருக்கலாம்தானே! வினோத் இப்படி கேட்கவும் பாய் திகைத்து போனார்.
அப்ப நீங்க என்னை நம்பலையா?
இல்ல பாய்! இது இறைவனோட ஆலயம்! இங்கு ஒரு ஆவி துர் ஆத்மா புகுந்து தப்பிச்சி போகுதுன்னா அது..
இது உங்க அறியாமையைத்தான் காட்டுது! கோவில்களில் ஆவிகள் உலாத்தாதா என்ன?
என்ன சொல்றீங்க பாய்? கோவில்கள் புனிதமான இடம்! அங்க எப்படி ஆவிகள் உலா வரும்!
ஆவிகள் பாவாத்மாதான்! ஆனாலும் அதுவும் இறைவனிடம் மன்னிப்பு கேட்க வராதா?
நீங்க சொல்றது எனக்கு சுத்தமா புரியலை?
நமக்குத்தான் நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாடு எல்லாம்! இறைவன் எல்லாம் கடந்தவன்! அவனை பொறுத்தவரை சரணடைந்தவரை காப்பாற்றுவான். ஏன் உங்க மதத்துல கூட எத்தனையோ புராணக்கதைகள் இதை சொல்லுதே? சீதையை கடத்திய இராவணன் சிறந்த சிவபக்தன்! அவனுக்கு சிவன் உதவி புரிந்ததா எல்லாம் புராணம் சொல்லுதே?
சரி பாய்! அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
இறைவன் எல்லா ஆத்மாக்களையும் ரட்சிப்பான்! கோவில்களில் உள்ளே வேண்டுமானால் ஆவிகள் வராமல் இருக்கலாம்! ஆனால் வெளியே உலாத்தி வரும்! அப்படித்தான் இந்த ப்ரவீணாவின் ஆவியும்!
சரி இருக்கட்டும் பாய்! ஆனா நீங்க இன்னும் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம் இல்லையா? அவ தப்பிச்சு போகாதபடி காவல் பண்ணியிருக்கலாம் இல்லையா?
பண்ணியிருக்கலாம்தான்! ஆனால் இறைவன் கைப்பொம்மைகள் நாம்? அவன் ஒன்று நினைக்க நாம் மாற்ற முடியாது இல்லையா?
பாயின் வேதாந்த பேச்சு வினோத்திற்கு கசந்தது! இந்த வேதாந்தம் எல்லாம் கதைக்கு உதவாது பாய்! இந்த பொண்ணு ப்ரவீணா உங்களுக்கு ஏற்கனவே தெரியும்! அதனால அவளை நீங்க கருணையா பார்த்தீங்க! உங்க மந்திரங்களை சரியா பிரயோகிக்கலை! அதனாலதான் அவ தப்பிச்சிட்டா!
பாய் புன்னகைத்தார்! தம்பி நீங்க ரொம்ப புத்திசாலி! நல்லாவே கற்பனை பண்ணறீங்க! ப்ரவீணாவை எனக்கு முன்னாலேயே தெரியும்! அவ சின்ன வயசுல இந்த தர்காவிலே வேலை பாத்துகிட்டு இருந்தவதான்! அவ எப்படி மரணம் அடைஞ்சான்னும் தெரியும்! சின்னவயசிலேயே அநியாயமா உயிரை விட்டுட்டா! எல்லாம் தெரியும் ஆனா அவ செய்யற தப்புக்கு எல்லாம் உறுதுணையா இருக்கேன்னு நீங்க நினைக்கிறது நல்ல கற்பனை!
சரி பாய்! ஏதோ ஆதங்கத்துல பேசிட்டேன்! தப்பா எடுத்துக்காதீங்க!
உங்க சந்தேகம் நியாயம்தான்! இங்க வந்த எல்லாருக்கும் குணமாகிடும்! இந்த கேஸ் கொஞ்சம் வித்தியாசமா ஆயிருச்சி! அதனால உங்களுக்கு வந்த சந்தேகம் நியாயமாத்தான் படுது! நான் தப்பா எடுத்துக்கலை இப்ப ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம்! உங்க ப்ரெண்டுக்கு போன் பண்ணி ஒரு மணி நேரம் ஆகி இருக்குமா? எந்த ரெஸ்பான்ஸையும் காணோமே? செல்வி அங்க வந்தாளா? இல்லையா? பதில் வரவே இல்லையே? திரும்பவும் போன் பண்ணுங்க! பாய் சொல்லிக் கொண்டிருக்கும் பொதே ஒரு டாடா சுமோ அவர்கள் முன் வந்து நின்றது. ராகவன் பதற்றத்துடன் அதில் இருந்து இறங்க ஒரு வயதான தம்பதியரும் பதற்றத்துடன் இறங்கினர்.
தம்பி! என்ன ஆச்சு! என் பொண்ணு செல்வி எங்கே? என்றனர் அவர்கள்.
பதற்ற படாதீங்க! உங்க பொண்ணு எங்கேயும் போயிரமாட்டா! கண்டுபிடிச்சிடலாம்!
என்னது கண்டுபிடிச்சிரலாமா? அப்படின்னா அவ இங்க இல்லையா! அந்த வயதான அம்மாள் அப்படியே மயக்கமானாள்.
வினோத் செய்வதறியாது திகைத்து நின்றான்.
ப்ரவீணாவா!யார் அது?
அவ என்னோட அக்கா! அவள உனக்கு தெரியாது!
இப்ப அவ எங்கே?
அவ இப்ப உயிரோட இல்லை! செத்துட்டா!
எப்படி?
படுபாவி பசங்க உயிரோடு கொளுத்திட்டாங்க!
கொளுத்திட்டாங்களா? ஆமாம்! அவளையும் அவ புருசனையும் சேர்த்து வச்சி கொளுத்திட்டாங்க!
ஏன்? ஏன் கொளுத்தினாங்க?
எல்லாம் பாழா போன காதலால வந்தது!
எங்க அக்கா ஒருத்தனை காதலிச்சா! அவ உசந்த ஜாதிக்காரன்! இவ தாழ்ந்த ஜாதி! ஜாதி வெறியில உசந்த ஜாதிக்காரன் வீட்டுக்கு நெருப்பு வைச்சிட்டான்.
அவனோட வெறி அடங்கி போச்சு! ஆனா என்னோட வெறி அடங்கலை! நெருப்பு வைச்சவங்களை ஒவ்வொருத்தரா தேடி அழிச்சிகிட்டு வரேன்!
சபாஷ்! இதுக்குத்தான் பேய் பிடிச்சாமாதிரி நடிச்சு ஏமாத்தறியா?
ஆமாம்! எனக்கு பேய் பிடிக்கலை! ஆனா வெறி பிடிச்சிருக்கு! எங்க அக்காவை கொன்னவங்களை பழி தீர்க்கணும்கிற வெறி! அந்த வெறிதான் இப்படி பேயா என்னை பிடிச்சி வாட்டுது!
சரி உன் வெறியால எத்தனை பேரை கொன்னு போட்டிருக்கே?
இதுவரைக்கும் நான் ஒருத்தரையும் கொல்லவே இல்லை! நான் அவங்களை கொல்ல போகும்போதே அவங்களா இறந்து கிடப்பாங்க! இப்பக்கூட இந்த ஊருல ஒருத்தன் தீ வைச்ச கும்பல்ல இருக்கறதா தகவல் வந்துச்சு!
இந்த ஊருன்னா!
இந்த ஊருக்கு பக்கத்துல ராமாபுரம் கிராமத்துல இருக்கறதா தகவல் தெரிஞ்சது! அவனை முடிக்கணும்னு தான் வந்தேன்! ஆனா உங்க கிட்டே மாட்டிகிட்டேன் என்றான் சுவாமிஜியை பார்த்து.
அது சரி பஸ்ஸில் எப்படி காணாமல் போனாய்?
அது ஒரு ஜால வித்தை! மற்றவர் கண்ணில் மண்தூவி தப்பிப்பது!
உனக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?
சும்மாவா பழி வாங்க முடியும்! எல்லாம் படித்து தெரிந்து கொண்டதுதான்!
நல்லா பக்காவா ப்ளான் பண்ணி வேலை செஞ்சிருக்கே! ஆனா இதுவரைக்கும் நீ ஒருத்தரையும் கொலை செய்யலையா?
ஆமாம்! நான் போவதற்கு முன்னாடியே அங்கு கதை முடிந்திருக்கும்! இதுவரைக்கும் அப்படி மூன்று பேர் இறந்து போய் விட்டார்கள்! ஆனால் ஒருவரையும் நான் கொல்லவில்லை!
இதென்ன வேடிக்கையா இருக்கு! வினோதமாகவும் இருக்கு! அப்ப கொலையானவங்களுக்கு நீ மட்டும் எதிரி இல்லை! வேற யாரோவும் இருக்காங்க!
இருக்கணும்னு நினைக்கிறேன்! ஆனா அவங்க யாருன்னு எனக்கு தெரியாது!
இதுவரை மவுனமாக இருந்த சுவாமிஜி பேச்சில் குறுக்கிட்டார் நீ சொல்ற எல்லாம் உண்மைதான்! உனக்கு முன்னாலேயே உன் எதிரிகளை யாரோ தீர்த்து கட்டிடறாங்க! அது யாருன்னு தெரிஞ்சா நீ ஆச்சர்யப்பட மாட்டே! சந்தோஷப்படுவே!
அது யாரு சுவாமிஜி!
உன்னோட அக்கா!
என்னோட அக்காதான் இறந்து போச்சே சுவாமிஜி!
இறந்து போய் உன்னை மாதிரி இல்லாம நிஜ பேயா உலாவி வர்றா அவ! அவதான் இவங்களை பழிவாங்கிட்டு வரா!
இப்ப அவ எங்க இருக்கா?
நம்மளை பார்க்கத்தான் வந்துகிட்டு இருக்கா! அனேகமா இன்னும் அரைமணி நேரத்துல அவ இங்க இருப்பா என்று சிரித்தார் சுவாமிஜி!
தொடரும்….