Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேர்முடா முக்கோண பின்னனி – விமானங்கள் மறைவா? கடத்தலா? – 02-

பேர்முடா முக்கோண பின்னனி – விமானங்கள் மறைவா? கடத்தலா? – 02-

ocean-hurricaneபோன பதிவில் பேர்முடா மர்ம வலையத்தைப்பற்றி பேசத்தொடங்கும் போதே “ஃப்லைட் 19″ பற்றி பார்த்திருந்தோம். போன பதிவில் விட்டுச்சென்ற சில கேள்விகளுக்கு தெளிவான- தெளிவற்ற பதிலை தருவதுடன் இந்தப்பதிவு தொடர்கிறது.

பிற்பகல் 3.30 இற்கு கிடைத்த தகவலின் பின்னர், சுமார் மூன்றரை மணி நேரங்கள் கழித்து மீண்டும் “FT… FT” என ஃப்லைட் 19 விமானத்தில் இருந்து சமிக்ஞைகள் கிடைத்திருந்ததை போன பதிவில் பார்த்திருந்தோம்.
இந்த நேர வித்தியாசத்தை ஆராயும் போது சில முடிவுகளை தர்க்க ரீதியாக எடுக்க முடிகிறது.
அதாவது,
வேற்றுக்கிரக வாசிகள் அந்த விமானத்தை “கடத்தி சென்றிருப்பார்கள்” என நாம் கூறமுடியாது. காரணம், இதுவரை பறக்கும் தட்டுக்கள் பற்றி அறியப்பட்டவரை அவை மிக அதிவேகமாக பயணிக்க கூடியவை. அவர்களின் கடத்தலாக இருந்தால் சில நிமிடங்களிலேயே புவியின் ஈர்ப்பு எல்லையை தாண்டி இருப்பார்கள். தாண்டி மூன்றரை மணி நேரத்திற்கு பின்னர் இந்த இருந்தால் சமிக்ஞை கேட்க வாய்ப்பில்லை.

ocean-hurricane-2ஒரு வேளை, அவர்கள் பூமியிலேயே அந்த விமானத்தை சிறைப்பிடித்திருந்தால் சாத்தியம். பூமியில் எங்கே சிறைப்பிடிப்பது? அந்த சமிக்ஞைகள் சமுத்திரத்தில் இருந்து தான் வந்தது. அப்படியானால் கடலின் அடியில் ஏதாவது ஏலியன்ஸின் ஆராய்வு கூடம் இருக்கலாமா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
அப்படி இருக்குமாயின், அதற்கு வந்து போகும் ஏலியன்ஸ்கள் பறக்கும் தட்டு மூலம் வரும் போது எமது செய்மதிகளின் உணர் எல்லைக்குள் அகப்படாதது எப்படி? போன்ற தர்க்கவியல் கேள்விகள் நிற்கின்றன. அதற்கும் ஒரு விடை சொல்ல முடியும். ஆனால் இங்கு அதைப்போட்டு குழப்பிக்கொள்ள விரும்பவில்லை.
மேலும், கடலின் அடிமட்டத்தில் தளம் இருக்குமாயின் மனிதர்களை/புவி உயிரினங்களை அந்தளவு ஆழத்திற்கு கொண்டு செல்வதால் அமுக்கம் காரணமாக உயிரிழப்பு நேர்ந்துவிடும்! பின்னர், என்ன ஆராய்ச்சி செய்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அதேவேளை அவர்களின் தொழில் நுட்பத்தில் அமுக்கத்தை தவிர்க்கக்கூடிய திட்டங்களும் இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.

வழமைபோல் விடை தெரியவில்லை என்றதும் ஏலியன்ஸ்-வேற்றுக்கிரகவாசிகளை சாட்டும் காரணத்தை மேலே பார்த்தோம். வேறு விதமாக சிந்தித்தால்…

பசுபிக் சமுத்திரத்தில் அடிக்கடி கடல் சூறாவளி வருவதுண்டு. (இதற்கு வேறு தனிப்பெயர் இருப்பதாக நினைவு. தெரிந்தவர்கள் கூறவும்.) தன் போது கடல் மட்டத்தில் இருந்து வானுயர வெள்ளை நிறத்தில் கடல் நீர் மேல்னோக்கி செல்லும். (மீன் மழைக்கு இது தான் காரணமாக சொல்லப்படுகிறது.)

ocean-hurricane-3//“நாம் எங்கிருக்கிறோம் என தெரியவில்லை… எமது கருவிகல் அனைத்தும் செயல் இழந்துவிட்டன. திசையை அறியமுடியவில்லை. இப்போது வெள்ளை நீரினுள் சென்றுகொண்டிருகிறோம்…” ரெய்லரிடம் இருந்து வந்த செய்தி!//
போன பதிவில் பார்த்த தகவல் இது.
இவரின் கூற்றையும் கடல்சூறாவளியின் தன்மையையும் பார்க்கும் போது, டெய்லர் கடல் சூறாவளியில் மாட்டுப்பட்டிருக்கலாம்!
எனினும், ஒரு அனுபவ விமானிக்கு கடல் சூறாவளி பற்றி தெரிந்திருக்காதா? என எண்ணத்தோன்றுகிறது.
மற்றும், அவரைத்தேடிச் சென்ற விமானத்திற்கும் என்னாச்சு என்று இதுவரை தெரியவில்லை.

இந்த விமான மறைவு தொடர்பாக எனக்கு தோன்றியவற்றை மேலே பார்த்தோம்.
இது தொடர்பாக இறுதியாக ஆராச்சியாளர்கள் என்ன முடிவு சொன்னார்கள் என்பதை பார்ப்போம்…

1991-2 ஆம் ஆண்டுவரை இந்த விமானங்களின் தேடல் நடைபெற்றது…
அவர்களின் அனுமான கூற்றுக்களில்…

  • டெய்லர் விமானத்தை தவறாக வேறு இடத்திற்கு செலுத்திவிட்டார் என ஒரு சாரார் கூறுகின்றனர்.  (அப்படியே இருந்தாலும் அனுபவ விமானியால் மீண்டுவர முடியாதா? அப்போ அந்த வெள்ளை நீர்?)
  • விமானத்தின் பாகங்கள் எதேச்சையாக செயல் இழந்துவிட்டன. அதனால், விமானம் கடலினுள் வீழ்ந்திருக்கலாம். (அப்படியானால், வீழ்ந்த விமானம் எங்கே? விமானம் தொழைந்து அடுத்த நாள் சுமார் 18 கப்பல்களும் 2 நீர்மூழ்கி கப்பல்களும் தேடுதல் வேட்டை நடத்தின எதுவும் சிக்கவில்லை. இதுவரை சிக்கவில்லை!)

மொத்தத்தில், அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட தேடல்கள், ஆராய்வுகளின் பின்னரும் இதுவரை அந்த விமானத்திற்கான பதில் கூறப்படவில்லை. எதிர் காலம் கூறலாம்…

ஃப்லைட் 19 பற்றி போதுமான அளவு பார்த்துவிட்டோம்… இனி மேலும் சில…

29/01/1948 :
AIR MARSHAL AUTHOR CUNNINGHAM விமாணி 6 சிற்பந்திகள் மற்றும் 25 பயணிகளுடன் பேர்முடா தீவில் இருந்து கிழம்பிய விமானம் STAR TIGER இதுவரை தரை இறங்கவில்லை!

28/12/1948 :
”நாங்கள் தெற்கில் 50 மைல் தொலைவில் வந்துகொண்டிருக்கிறோம். மியாமியினுடைய விளக்குகள் எனக்கு மங்கலாகத் தெரிகின்றன. இறங்குவதற்கான விபரங்களுக்காக காத்திருக்கிறேன்.” என கூறிய DOUGLUS DC3 விமானத்தின் விமானி இதுவரை 36 பயணிகளுடன் காத்திருக்கிறார்!

17/01/1949 :
இங்கிலாந்தில் இருந்து 15 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகளுடன் புறப்பட்ட STAR ARIEL எனும் சிறிய விமானம். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னராகவே தரை இறங்கிவிடுவோம் என உறுதியாக கூறிய விமானி; இதுவரை விமானத்தை தரை இறக்கவில்லை!

22/09/1963 :
C-132 விமாண விமாணி “விமானத்தின் பயணம் சுமூகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என அறிவித்தார் இதுவரை பயணிக்கிறார்!

28/09/1963 :
KC 135 Jet விமானம் பல நூறு பயணிகளுடன் காணாமல் போனது.

05/06/1965 :
FLYING BOX CAR விமாணம் 10 பயணிகளுடன் காணாமல் போனது.

01/11/1967 :
YC 122 விமானம் நால்வருடன் காணாமல் போனது.

இவை சாதாரணமாக லிஸ்ட் போடும் சம்பவங்கள் இல்லை. இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பை கண்டுக்காமல் விட்டது போன்று இவை விடப்படவில்லை. பல மில்லியன்கள் செலவில் நீண்ட காலமாக பல விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்க்கிக்கப்பல்களின் உதவிகளுடன் தேடல் நடைபெற்றது. ஆனால், எந்த தடையங்களும் சிக்கவில்லை!

எப்படி?
அனைத்துவிமானங்களுமே எங்கே போயின?
இதன் பின்னனி என்ன?
காந்தப்புலமா?
ஏலியன்ஸா?
சூறாவளியா?
அல்லது….

இணைந்திருங்கள் மேலும் அறியலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top