நாம் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் போது… அதாவது… 3*10^8 ( 299 792 458 ) ஐ அண்மிக்கையில் நாம் எதிர்காலத்துக்கே போவோம்…
உதாரணத்துக்கு…
கால இயந்திரத்தில் (?) ஒரு லட்சம் மீற்றர்/செக்கன் வேகத்தில் நாம் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்…
எமக்கு காலம் மெதுவாக நடை பெறும்… அதாவது… வெளியே இருப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் கடக்கின்றன என்றால், இயந்திரத்தினுள் இருக்கும் எமக்கு அது 1 ஆண்டாகவோ அல்லது 2 ஆண்டாகவோ இருக்கும். ( குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்கள் கணித்துப்போடல )
அப்படி என்றால்… 2010 இல் நாம் பயணிக்கத்தொடங்கினால்… வெளியாட்களின்( பூமியின் கணக்குப்படி/கலண்டர் படி) ஆண்டுபடி 10 ஆண்டுகள் பயணித்தால் அவர்கள் 2020 ம் ஆண்டில் இருப்பார்கள். அப்போது எமக்கு 2012 ஆம் ஆண்டுதான். இப்போது நாங்கள் வாகனத்திலிருந்து இறங்கினால், நாம் 2020 இல் இறங்குவோம்… ( ஆனால், எமக்கு இரண்டு வருடங்கள்தான் ஓடி இருக்கும்… 21 வயதில் வெளிக்கிட்டிருந்தால் 23 வயது… வெளியாளுக்கு 31 வயது).
அதாவது… அது நமது எதிர்காலத்தில் நாம் இறங்கி இருப்போம்…
அப்போது நாம் காணும் வெளித்தோற்றம் அனைத்துமே… நமது எதிர்காலத்துக்குரியது…
( இங்கு நாம் அதிக வேகத்தில் பயணிக்கும் போது… எமது உருவம் வெளியாட்களுக்குத்தெரியாமல் போகும். காரணம்… அவர்களின் நிகழ்காலத்தில் நாங்கள் இல்லாமல் இருப்போம். அதாவது, காலம் ஓடிக்கொண்டிருக்கும்… நாங்கள் காலத்துடன் ஓடாது சற்று மெதுவாக ஓடிட்டிருப்போம்….
ஏற்கனவே, நான் சொன்னதில் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் போது… இலத்திரன்,புரோத்திரன் போன்ற இயல்பை பெறுவதால் துணிக்கைத்தன்மையாகி மறைவோம் என்று சொல்லி இருந்தேன்… அதுவும் சரிதானே???? 🙂 )
—————————————————————————————
சரி…
அப்ப இறந்த காலத்துக்கு போவது எப்படி…
அதுவும் இதே போன்ற கால இயந்திரத்தில்தான்… ஆனால், அந்த இயந்திரத்தின் வேகம் ஒளியின் வேகத்தை கட்டாயம் மிஞ்சியிருக்க வேண்டும்.
அப்படி மிஞ்சும் பட்சத்தில் நாங்கள் இறந்தகாலத்துக்கு போகலாம்…
உதாரணமாக…
நாம் 400 000 000 மீற்றர்/செக்கனில் 2010 பயணிக்க ஆரம்பிக்கிறோம் என்று வைத்துக்கொண்டால்… ஒரு 10 ஆண்டுகளில்…
பயணிக்கும் நாங்கள் 2008,2009 அப்பிடி நாம் ஆரம்பித்த காலத்தை விட குறைவான காலத்துக்கு சென்றிருப்போம்… வெளியாட்கள் 2020 க்கு போயிருப்பார்கள்.
நாம் வேகத்தை எவ்வளவு கூட்டினாலும்… எம்மால் இறந்த காலத்துக்கு உடனடியாக பாய்ந்து செல்ல முடியாது… ஒவ்வொரு ஆண்டுகளாக/ நாட்களாக/செக்கன்களாகத்தான் பின்னோக்கி போக முடியும்…
ஒவ்வொரு சம்பவமும் இயந்திரத்தின் யன்னலூடாக ஒரு திரையில் ஓடும் காட்சிபோல் ஓடுமாம்…
இந்த பின்னோக்கி போகும் வேகம்… இயந்திரத்தின் வேகத்தில் சார்ந்திருக்கும்…
( ஒவ்வொரு சம்பவமும் காட்சி போல் மாறும்… என்பது சரியா இருக்கலாம்… ஆனால், எங்களால் உணர முடியும் என்று நினைக்கவில்லை… காரணம்… வேகமாக காட்சிகள் மாறும்… காட்சிகள் என்பது நிறங்களால் காணக்கூடியது… நிறங்கள் வேகமாம மாறும் போது வெள்ளையாகவே தோன்றும்… ஆகவே, நமக்கு வெள்ளையாகத்தான் வெளியே தெரியும்… 🙂 )
இதெல்லாம் சரி… நாம் இந்த வேகத்தை பயண்படுத்தி பயணித்தோமென்றால்… இறந்தகாலத்துக்கு சென்று பார்க்க முடியும்… நம்ம தாத்தா… கொள்ளுத்தாத்தா… அப்டினு எல்லாரையும் பார்த்துட்டு வரலாம்…
ஆனால்…
ஜோசித்து பாருங்கள்… இது சாத்தியமானால்… பல குழப்பங்கள் ஏற்படும்…
இன்று பதிவில் முக்கியமான கொள்கையை பார்தததாலும் (?)… பதிவு நீள்வதாலும்… நிறித்திடுறேன்…
—————————————————————————————
அப்படி வேகத்தை அடைந்தால்… என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பார்ப்போம்…
இப்போது பலருக்கு விளங்கி இருக்கும்.., ஏற்கனவே போன பதிவி குறிப்பிட்ட சம்பவத்தில்… விமானத்தை ஏன் பிந்தொடர்ந்தார்கள் என்பதும்… அந்த டுவின்ஸ்டவர்ஸின் பின் புலத்தில் ஏன் அந்த பறக்கும்தட்டு (இது உண்மை என்று உறிதியில்லை) இருந்தது என்பதும் விளங்கி இருக்கும்… விளங்காதவர்கள்… அடுத்த பதிவில் விளங்கிகொள்ளலாம்… 🙂 (3087)