உயர்ந்த மலை முகட்டில் இறந்த உடல்கள் :
சாம்ட்ஜோங் குகையில் (tomp 5) இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் (3 x 3 அடி) இருந்தது. உடைந்த நிலையில் இருந்த சவப்பெட்டியை ஏதென்ஸ் மற்றும் சிங்லாமா ஒழுங்கு செய்தனர். இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி வலுவான உயர்தர மரப்பலகைகளால் செய்யப்பட்டிருந்தது.
பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது விரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம். இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுரம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுரம் காய்ந்து போன மரம். ( ” வாழ்க்கையை சிம்பாலிக்காக உணர்த்துகிறதோ ! )
இந்த உடலுக்கு சொந்தக்காரன் உயர்ந்த அந்தஸ்தில் இருந்திருக்க வேண்டும். கழுத்தில் பதக்கம் போன்று வெண்கலத்திலான கண்ணாடி தொங்கவிடப்பட்டிருந்தது.
முகத்தில் வெள்ளி மற்றும் தங்கத்திலான முக மூடி அணிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகமூடி நீளமான நாசி மற்றும் சிகப்பு நிறக்கண்கள் வரையப்பட்டிருந்தன. உதடுகள் கீழ் நோக்கி ஒரு சோக எக்ஸ்பிரசனில் இருந்தது.
முகமூடியின் நெற்றிப்பகுதியில் வண்ண நீள் கண்ணாடி பாசி மணி மாலையால் சோடிக்கப்பட்டிருந்தது.
இந்த உடல் 1300 அல்லது 1800 ஆண்டுகளுக்கு முன் இறந்த உடலாக இருக்கலாம். (வருடங்கள் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை)
பத்து வயது ஆண்குழந்தையின் எலும்புக்கூடும் அருகில் கிடந்தது. அந்தகாலத்தில் பலியிடப் பட்டிருக்கலாம் என்பது ஏதென்சின் அனுமானம் அதன் நிலையை (பொஸிசன்) வைத்து இதை ஊகிக்கிறார் ; உறுதிப்படுத்தப் படவில்லை.
இன்னும் அந்த அறையில் இரும்பிலான குறுவாள்கள், ஒரு மண் தட்டில் பார்லி மாவு, ஒரு காலத்தில் பார்லி பீர் நிறப்பட்டிருந்த தாமிர பாத்திரம், சிறு பாத்திரம் மற்றும் அதை வைக்கும் இரும்பிலான சிறு முக்காலி (tripod), வட்ட கைப்பிடியுடன் கூடிய மரத்தாலான கோப்பைகள், எறுமை மாட்டு கொம்புகள், குதிரை மற்றும் ஆட்டின் தலை மண்டை ஓடுகள் கிடந்தன. இந்த குதிரை அவனது குதிரையாக இருந்திருக்க வேண்டும்.
ஏதென்ஸ் உண்பதை, தண்ணீர் குடிப்பதை கூட மறந்து இந்த ஆய்வில் ஒன்றி ஈடுபட்டது பாராட்டத்தக்கது.
ஆகாச புதைத்தல் (Sky burial) :
இதேபோல் மயான குகைகள் சிலவற்றில் அநேக வெட்டப்பட்ட எலும்பு துண்டுகள் கிடைத்தன. ( மனித எலும்பு துண்டுகள் 3 முதல் 8 நூற்றாண்டு காலத்தவையாக இருக்கலாம் என்பது அனுமானம் )
இறந்த சடலங்களில் இருந்து சதைகள் நீக்கப்பட்டு எலும்புத்துண்டுகள் வெட்டப்பட்டிருக்க வேண்டும். மீதமான எலும்புகள் மற்றும் சதைப்பாகங்கள் வல்லூறுக்கு இறையாக்கப் பட்டிருக்க வேண்டும்.
இது முஸ்டங் பகுதி மக்களின் வழக்கமாக இருந்திருக்கிறது.
76 சதவீதம் இம்மாதிரியான எலும்புகள் கிடைத்துள்ளன
இது கண்டிப்பக கேனிபுலிசம் [ Cannibalism – தன் இன ஊன் உண்ணுதல் ] ஆக இருக்க வாய்ப்பில்லை.
இந்த ” திபெத்திய ஆகாச புதைத்தல் வழக்கம் ”
புத்த மதம் அங்கு பரவுவதற்கு முன்பிருந்த கால கட்டத்தில் இருந்திருக்கிறது.
முஸ்டங் மம்மிகள் :
இவை எகிப்திய மம்மிகளை ஞாபகப்படுத்துகின்றதா ?
“குழந்தை மம்மி”
முஸ்டங்கில் மெப்ராக் என்ற இடத்தில் 1995 ல் ஜெர்மன் மற்றும் நேபால் அகழ்வாராய்சியாளர்கள் ஒரு குகையில், ஒரு குழந்தை மற்றும் பெண்ணின் கால் பகுதி மட்டும் மம்மி யாக (பதப்படுத்தி பாது காக்கப்பட்ட உடலங்கள்) கிடைத்திருக்கிறது.
இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும். மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள் கிடைத்தன. மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன.
சுமார் 2000 வருடங்கள் பழமையான உடலங்கள் இவை. இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன.
தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. இவைகளின் எண்ணிக்கை ஆயிரம் இருக்கலாம். இவைகள் பல்வேறு பகுதிகளை சேர்ந்ததாக அதாவது பாகிஸ்தான், இந்தியா, மற்றும் சில ஈரான் தேசத்தை சேர்ந்தவையாக இருக்கலாம்.
இவைகள் இம் மக்கள் அந்த தேசங்களுடனான வாணிபத் தொடர்பு கொண்டிருந்ததை; இம்மக்களின் செல்வ செழிப்பை பிரதிபளிக்கின்றன.
இந்த கடினமான பணியில் ஈடுபட்ட பெண் நுண் ஆய்வாளர் (Bio archaeologist) ஜேக்குலின் இங் கிடைத்த எலும்புகளை, சதைப்பகுதிகளை ரகம் வாரியாக பிரித்து ஆராய்கிறார்.
சில குடும்பங்கள் இன்றும் இங்கு குகைகள் வசித்து வருகின்றனர்.
எவை எல்லாம் இந்த குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவோ, அவை அனைத்தும் சாண்ட்ஜோங் கிராமத்து தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தன் சொந்த பணத்தை சிறு மியூசியம் அமைக்க கொடுத்து உதவியுள்ளார் ஏதென்ஸ் என்பது குறிப்பிடதக்கது.
தங்கள் மூதாதையரின் சிறப்பு மிக்க வாழ்க்கையை நினைத்து பிரம்மிப்போடு பெருமையும் கொள்கின்றனர் இம்மக்கள்.
இப்பகுதி மக்கள் இக்குழுவினரை மிக்க மரியாதையோடு நடத்தினர். அவர்களை பெருமையாக நினைவு கொள்கின்றனர்.
கிடைத்த மரத்துண்டுகள், துண்டு துணிகள், பற்களின் துகள்கள்
வண்ணங்கள் (எந்த தாவரங்களில் இருந்து தாயாரிக்கப்பட்டன போன்ற வேதியல் ஆய்வுகள்) பல இடங்களுக்கு கொண்டு செல்லபட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பற்கள், சில எலும்புகள் DNA ஆய்வுக்காக ஒக்லஹாமா பல்கலை கழகத்திற்கும் (University of oklahoma), உலோகங்கள் லண்டன் பல்கலைகழகத்திற்கும் (university of London) கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த சோதனையின் முடிவுகள் பல உண்மைகளை வரலாறுகளை அறிவிக்கப்போகின்றன. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
(முற்றும்)