டாவின்சி ஓவியத்தின் மூன்று வாயில்களின் இரகசியம்
15 ம் நூற்றாண்டின் சிறப்பு தன்மை வாய்ந்த ஓவியமாக டாவின்சி வரைந்த சுவர் ஓவியம் “தி லாஸ்ட் சப்பர் (கடைசி இரவு விருந்து)” திகழ்கிறது. 1495 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இல்லாமல் வெவ்வேறு கால கட்டத்தில் வரைந்திருக்கிறார், 1498 ல் இது முற்றுப் பெற்றிருக்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தின் சிறப்பான படைப்பாகவும், இயேசு அருந்திய இறுதி விருந்தைச் சித்தரிக்கும் ஓவியங்களுள் முதன்மையானதாகவும் கருதப்படுகிறது.
கட்டிடக்கலை “ப்ரஸ்பெக்டிவ் ” என்று சொல்ல கூடிய நுணுக்கமும் இந்த ஓவியத்தில் உள்ளது. இதை பார்வையிட்ட அறிஞர்களும், ஆர்வளர்களும் இந்த ஓவியம் பற்றி பல்வேறு கருத்துக்கள் ,அபிப்ராயங்கள் சொல்லுகிறார்கள். (தத்துவ விளக்கம், ஜோதிடம், விண்ணியல், கணிதவியல், கலாச்சாரம் இப்படி)
1726 லிருந்து 1954 வரையிலும் பல கால கட்டங்களில் , பல ஓவியர்களால் இந்த ஓவியம் சிதையாமல் (ரீ கலரின்ங் / பேட்ச்) பாதுகாக்கப்பட்டது. பார்ஸிலோன் என்பவர் சுமார் 20 ஆண்டுகாலம் (1979- 1999) துல்லியமான முறையில் இதை மறுசீரமைவு செய்து பழைய வடிவத்தை கொடுத்தார். இந்த ஓவியம் இருக்கும் சுவரின் மறுபக்கம் சமையலறை அதனாலும் ஈரம் காரணமாக இந்த ஓவியம் பொழிவிழந்தது. 1943 ல் உலகப்போரின் போது கட்டிடத்தின் அருகில் குண்டு விழுந்தது, அப்போது அதிர்ஷ்டவசமாக இந்த ஓவியம் தப்பியது. ஓவியம் இருந்த அறை சிறையாகவும் இருந்திருக்கிறது. யேசு தன் சீடர்களுடன் விருந்துன்னும் காட்சி “தி லாஸ்ட் சப்பர்” பைபிளில் இந்த காட்சி வர்ணிக்கப்பட்டிருக்கிறது
(as it is told in the Gospel of John, 13:21. Leonardo has depicted the consternation that occurred among the Twelve Disciples when Jesus announced that one of them would betray him.) The Last Supper (1498)—Convent of Sta. Maria delle Grazie, Milan, Italy
- மூன்று வாயில்கள் எதற்கு ? நாம் காந்தப்புல மற்றும் மின் உலகத்தில் வசிக்கிறோம். யேசுவை சூரியனாகவும் , சூரியனைச் சுற்றி 12 ராசிகளையும் உருவகப்படுத்தி வரையப்பட்டிருக்கிறது.my
மூன்று மூன்று பேராக 4 குழுக்கள் இருக்கு, மொத்தம் 12 பேர் இது வருடத்தின் 12 மாதங்களையும், நான்கு சீசனையும் (காலங்கள்), ஒவ்வொரு சீசனும் மூனு மாசம் இருக்கும் என்பதை சுட்டி காட்டுகிறது. முதல் குழுவில் 3பேர் இருக்காங்க இரண்டு கைகளை உயர்த்தி இருப்பது ஜெமினி, அடுத்த குழு லியோ, இப்படி ராசிகளையும் சுட்டிக்காட்டுது. மூன்று வாயில்களில் வலதில் செல்லக் கூடாது, இடதிலும் செல்லக் கூடாது, நடுவில் உள்ள வாயில் வழிதான் செல்லவேண்டும்.
- யூதர்கள் அந்த டேபிலை சுற்றி இருக்கிறார்கள், அவர்கள் உட்கார்ந்து இருக்கவில்லை. .. இதை டாவின்ஸி ஏதோ குறிப்பால் உணர்த்துகிறார். எகிப்தியர், இந்தோனேஷியன்கள், மெக்ஸிகோ டேபிலை சுற்றி இருக்கிறார்கள்.
(in medieval )ஐரோப்பிய சர்சுகள் மற்றும் கதீரிட்ரல்களில் இந்த வாயில் வடிவங்களை காணலாம்.
- ஐரோப்பிய கலாசாரத்தில் மூன்று எனபது வாழ்கையின் பிறப்பு, உயிர், மறு பிறப்பு இன்னும் இது போல மூன்று என்ற எண் ( triadas),செயல்கள், வழிமுறைகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பதை காணலாம்.
Trinity மூன்று வாயில்கள் , கட்டிடக்கலையில் அந்த கால கட்டங்களில் அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அதை அவர் அப்படியே யோசித்து வரைந்து இருக்கலாம்.
- இந்த படத்தை( ஓவியத்தை) அப்படியே திருப்பி பார்த்தோமானால் பின்புலமானது பியானோ கட்டைகளை போலிருக்கும் விரல்கள் வாசிப்பதையும் பார்க்கலாம்.
கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (In greek mythology the stars of Pleiades represented the seven sisters) மூன்று வாயில்கள் (கதவுகள்) ஓரியான் (Orion ) நட்சத்திர கூடங்களை குறிக்கிறது. யேசுவின் உருவமே ஒரு பிரமிட் வடிவத்தில் இருப்பதை பார்க்கலாம். சிறிய வாயில் கதவுகள் இரண்டும் சூரியனையும்(ஆண்பால், ஆண்), நிலவையும் (பெண்பால்,பெண்) குறிக்கிறது நடுவில் உள்ள பெரிய கதவு யுனிவர்ஸ், அதன் வழி செல்லவேண்டும். கணிதவியலின் கூற்றுப்படி, 3, 9 , 6 தனித்த சத்தி கொண்ட எண்கள் எனலாம். இந்த மூன்று எண்களையும் அந்த வாயில் கதவுகள் குறிப்பிடுகின்றன.