Home » அதிசயம் ஆனால் உண்மை » சுய சரிதை » ஜோசப் ஸ்டாலின்!!!

ஜோசப் ஸ்டாலின்!!!

ஜோசப் ஸ்டாலின்

உலக வரலாற்றில் முக்கிய தலைவரும், ரஷ்யாவை வல்லரசாக உருவாக்கியவருமான ஜோசப் ஸ்டாலின் டிசம்பர் 18 1878 ஆம் ஆண்டு பிறந்தார்.

ஜோசப் ஸ்டாலின் என்று அனைவராலும் அறியப்படுகிற இவரின் ரஷ்ய மொழி உச்சரிப்பின் முழுப்பெயர் ஜோசிப் விசாரியோனவிச் ஸ்தாலின் (18 டிசம்பர், 1878 – மார்ச் 5, 1953) லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் அவர் மறைந்த 1953 வரை, தலைவராக விளங்கினார்.

இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது; அதன் பொருளாதாரம் மேம்பட்டது. ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் குறும் நோக்கிலும் தொலைநோக்கிலும் பல உணவுப் பட்டினி போன்று பல பாதகமான விளைவுகளையும் தோற்றுவித்தது என்று சொல்லப்படுகிறது.

இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930 களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை (Great Purge) பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக, கொள்கையாக கடைப்பிடித்ததால், ஒழுக்கமின்மை, நம்பிக்கைத் துரோகம், நயவஞ்சகம், ஊழல் என்று குற்றம்சாட்டி பல்லாயிரக் கணக்கானோரை படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயங்கரவாதி (Great Terror) என்றும் அழைக்கப்பட்டார்.

“இரும்பு மனிதர்” என்று‍ போற்றப்படுபவரும், சோவியத் யூனியனின் பொருளாதாரத்தை புனரமைத்தவரும், சோவியத்தை அமெரிக்க ஏகாதிபத்திற்கு‍ எதிரான வல்லரசாக உருவாக்கியரும்,  மார்க்ஸிய – லெனினியக் கோட்பாடுகளின் நின்று‍ மனித குலத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்தவரும், சோவியத் ரஷ்யாவை ஒரு புதிய பாதையில் கொண்டு சென்றவரும், இரண்டாம் உலகப் போரில் பாசிச ஹிட்லரை வீழ்த்தி பாசிச கரங்களில் பிடிபட்டிருந்த‌ மக்களை விடுவித்ததில் முக்கியப் பங்கு‍ வகித்தவரும், செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை, சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்து‍ லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் – ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கியஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள் (5 மார்ச், 1953)

பொதுவுடமையின் எதிரிகள் மிகவும் வெறுக்கும் தலைவர்களின் பட்டியலில் முதல் இடம் இவருக்குத்தான். இவர்களின் சதியால் மனிதத்தன்மையற்ற கொடுங்கோலன் எனும் ஒரு‍ பிம்பம் ஸ்டாலின் மேல் உருவாகியது‍.

ஸ்டாலின் எளிமையாகவே தன் வாழ்நாளை கழித்தவர். ஹென்றி பார்ஸ் என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் ஸ்டாலின் வாழ்க்கை முறை பற்றிய சித்திரத்தை தீட்டிக் காட்டுகிறார்.

ஒருவர் அவருடைய முதல் மாடிக்கு சென்றால் மூன்று ஜன்னல்களில் வெள்ளை திரை சீலைகள் தொங்கக் காணலாம். இந்த மூன்று ஜன்னல்களுக்குள் தான் ஸ்டாலின் வீடு. அந்த சிறிய ஹாலில் சட்டை மாட்டும் கொம்பில் ஒரு தொப்பிக்குப் பின்னால் நீளமான ராணுவ அங்கி தொங்கிக் கொண்டிருந்தது. இந்த ஹாலோடு இரண்டு படுக்கை அறைகளும் ஒரு சாப்பிடும் அறையும் இருந்தது. படுக்கை அறைகள் மிகவும் எளிய முறையில் அமைந்திருந்தன. மூத்த மகன் யாகூவ் இரவு நேரத்தில் சாப்பாட்டு அறையில் போடப்பட்டிருந்த படுக்கையாக மாற்றப்பட்ட சோபாவில் தூங்கினான். இளைய மகன் வாசிலி அறையின் ஒதுக்கு புறமாய் இருந்த ஒரு சிறிய இடத்தில் தூங்கினான். அவரது மாத வருவாய் ஐநூறு ரூபிள்கள். மிகவும் குறைவான இந்த ஊதியம் தான் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின் மீதான அவதூறு வீசுபவர்களும் அவர் மீது ஊழல் பற்றிய வார்த்தைகளை உதிர்க்க கூட முடியாத அளவிற்கு அவர் நேர்மையாகவே தன் வாழ்நாளை கழித்தார்.

வாழ்க்கை வரலாறு‍

ஐரோப்பாக் கண்டத்தில் கருங்கடல், காஸ்பியன் ஆகிய இரண்டு‍ கடல்களு‍க்குமிடையில் உள்ள பகுதி ‘காக்கேசியா’ அதன் தலைநகர் “டிப்ளிஸ்”, இதற்கு அருகில் உள்ள குக்கிராமம் தான் ஸ்டாலின் அவர்களது முன்னோர் வசித்த கிராமம். 1879 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 21 ஆம் நாள் ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள். பெற்றோர் “ஜோசப் விசரியானோவிச்” என்று பெயரிட்டனர்.

தந்தை பெயர் விசரியோன். தாத்தா பெயர் ஐவன். தாத்தா பண்ணை அடிமை. தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. பண்ணை அடிமை என்றால் தற்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.

அங்கு‍ பண்ணை அடிமை முறை படிப்படியாகத் தகர்ந்தது. புதிய தொழிற்சாலைகள் தோன்றின. அவரவர் தமக்கு வாய்ப்புள்ள இடங்களை நோக்கிச் சென்றனர். அன்று இளைஞராக இருந்த ஸ்டாலினின் தந்தை தமக்குத் தெரிந்த செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்ள தமது கிராமத்தை விட்டு காரி என்னும் ஊரை அடைந்தார்.

அவர்கள் பேசிய மொழி ஜார்ஜிய மொழி. இனம் ஜார்ஜிய இனம். காரி என்னும் ஜார்ஜியச் சொல்லுக்கு குன்று என்று பொருள். இப்பகுதியில் மக்களிடம் நேரடியாக செருப்புத் தைத்துப் பிழைத்து வந்த ஸ்டாலினின் தந்தை மிகவும் சிரமப்பட்டார். தொழில் சரியாக நடக்கவில்லை. மக்கள் தொழிற்சாலையில் தயாராகும் செருப்புக்களையே விரும்பினர்.

ஸ்டாலினின் தந்தை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலைக்குச் சேர முடிவு செய்தார். காக்கேசியாவின் தலைநகர் ஆக இருந்த “டிப்ளிஸ்” என்னும் நகரை அடைந்தார். அங்கு இருந்த தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். இதே போன்று தான் பலரும் மாறினர். ஸ்டாலினின் தந்தை பிறரைப் போன்றே தானும் மாறினார். வேலைச்சுமை அதிகம். கூலிப் பணம் குறைவு. வாழ்க்கையை ஈடுசெய்ய முடியவில்லை. இதைத் தொடர்ந்து‍ 1890 ஆம் ஆண்டு தந்தை மறைந்தார்.

உலக வரலாற்றில் ஸ்டாலினை ஈடுணையற்றத் தலைவராக ஆக்கியதற்கான முதல் காரணம் சோவியத் யூனியனின் ஐந்து ஆண்டுத் திட்டங்கள்

மூன்று ஐந்தாண்டு திட்டங்கள் (1928 – 1942)

முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் கூட்டுப் பண்ணை விவசாயம், தொழிற்துறை வளர்ச்சி, தொடர்வண்டிகளின் முன்னேற்றம் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 1933ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை செயல்பட்டது. இந்த இரண்டு திட்டங்களின் விளைவாக பொறியியல் துறையில் இயந்திரங்கள் 44 சதவீதமாக வளர்ந்தது. கலனினக்கன், இடிரான்சுகாகசசு பர்க்கானா ஆகிய இடங்களில் நெசவாலைகளும் செலியபிசுக், கிசல், ரோவ்கா போன்ற இடங்களில் போன்ற இடங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டன.

தானியங்கள் ஏற்றுமதிக்காக துர்கிசுத்தான் சைபீரிய இருப்புப் பாதை 1500 கிமீ தூரம் போடப்பட்டதால் ஏற்றுமதி அதிகமானது. குசுனட்சுக்கு, மாக்னிதோ, கோர்சுக் ஆகிய இடங்களில் இரும்பு, எஃகு ஆலைகள் திடங்கப்பட்டதால் நாட்டின் இயந்திர இறக்குமதி சிறிது சிறிதாக குறைந்து பின்னர் நிறுத்தவும் பட்டது. 6000 தொழில் நீறுவனங்கள் தோற்றம் பெற்றன. 2.5 இலட்சம் கூட்டுப்பண்னைகள் உருவாக்கப்பட்டது. 1913ல் இருந்ததை விட 5 மடங்கு நாட்டின் வருவாய் அதிகரித்து.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தால் ரஷ்யா எண்ணெய் உற்பத்தியில் முதலாம் நாடாகவும், எஃகு உற்பத்தியில் மூன்றாம் நாடாகவும், நிலக்கரி உற்பத்தியில் நான்காம் நாடாகவும் வளர்ந்தது. தொழில் ஏடுகள் ஏற்படுத்தப்பட்டு அதில் தொழிலாளிகளின் தினசரி அலுவல்களும் பணிகளும் பதிவு செய்யப்பட்டன.

சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சி

நாடுகள் ———–1929 —- 1930 —– 1931 —— 1932 ——1933

அமெரிக்கா ———–100 —–. 80.7 —- 63.1 ——- 59.3 ——-64.9

பிரிட்டன் ———–100 ——- 92.4 ——- 83.8 —— 83.8 ——– 86.3

ஜெர்மனி ———–100 ——- 88.3 ——- 73.7 ——- 59.8 ——– 66.8

பிரான்ஸ் ————100 —— 100.7 —- 89.2 ——- 99.3 – ——- 77.4

சோவியத் யூனியன் —–100 —- 129.2 —— 161.9 —- 184.7 —- 201.6

– (ஜே.வி.ஸ்டாலின் – நூல்கள் தொகுதி 13 பக் 293

ஸ்டாலின் இரண்டாவது சாதனை கட்சிக்கு எதிரானவர்களைக் களையெடுத்தது. இதனை குருஷேவ் அவதூறாக குற்றஞ்சாட்டுகிறார். பல சந்தப்பவாதிகளாலும், ஊசலாட்டக்காரர்களாலும், சோஷலிச எதிரிகளாலும் கட்சி ஆட்டிப் படைக்கப்பட்டது. இதனால் நாடு அதன் தோளில் சுமத்திய வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முடியவில்லை.

லெனினின் கருத்தை நினைவூட்டி ஸ்டாலின் சொன்னார். “உள்நாட்டுப் போர் நடக்கும் திருப்புமுனையான இந்தக் காலகட்டங்களில் கையப்படுத்தப்பட்ட முறையில் கட்சி அமைப்பு இருந்தால்தான், ராணுவக் கட்டுப்பாட்டை ஒத்த உருக்கு போன்ற ஒழுக்கம் இருந்தால்தான், பரந்த அதிகாரங்களுடன் கட்டளையிடுவதாகவும் கட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையைப் பெற்றதாகவும் கட்சி மையம் வலுவானதாக இருந்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையைக் செய்ய முடியும்”.

மூன்றாவது பெருமை போர்களில் பெற்ற வெற்றியாகும்.

முதலாவது உள்நாட்டு யுத்தம் இரண்டாவது இரண்டாம் உலக யுத்தம். உள்நாட்டு யுத்தத்தின் போது ராணுவத்துக்கான உணவுப் பொருளைக் கொள்முதல் செய்ய முழு அதிகாரத்துடன் தெற்கு எல்லைப் பகுதிக்கு ஸ்டாலின் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அவர் சென்றபோது அனைத்தும் குறைபாடுகளாக இருந்தன., இதனால் அவர் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார்.

இதன் மூலம் ஜாரிஸ்தானில் போராடும் ராணுவத்தை வெற்றிக்கு வழி நடத்தினார். இதன் மூலம் ஜாரிஸ்தான் எல்லைப் பகுதியில் செஞ்சேனையின் தலைவரானார். இரண்டாவது உலக யுத்தத்தின் போது சோவியத் நாட்டின் உயர் அதிகார அமைப்பு ஸ்டாலினைப் பாதுகாப்பு தலைமைப் பொறுப்பாளராக நியமித்தது.

பின்னர் 1941 ஆகஸ்ட் 8 இல் அவர் தலைமைத் தளபதியாக்கப்பட்டார். வரலாற்றில் இதற்கு இணையான நிகழ்வு இருப்பதாக் எனக்குத் தோன்றவில்லை. இந்தத் தேர்வு சரியானதுதான் என்பதையும் வரலாறு நிரூபித்துவிட்டது.

அவரது காலத்தில் வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர், ஹென்றி பார்பஸ், ரோமன் ரோலண்ட் , ஜார்ஜ் பெர்னார்ட்ஷா, சிட்னேவெப், எச்.ஹி.வெல்ஸ் ஆகியோரும் மற்றவர்களும் (இவர்களில் சிலர் ஸ்டாலினுக்கு கசப்பான எதிரிகளும் கூட) இந்த நூற்றாண்டின் மாமனிதர்களில் ஸ்டாலினும் ஒருவர் எனப் புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.

அவரது பரம வைரியான சர்ச்சில் சொன்னார்:

நமது முயற்சிகளு‍க்கும் உறுதிகளுக்கும் ஸ்டாலினின் வாழ்க்கை மதிப்பிடற்கரிய உதாரணமாகும். இது வெறும் புகழ்ச்சியோ உயர்வு நவிற்சியோ அல்ல. வரலாற்றில் பல வெற்றிச் சாதனையாளர்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே அரசியல்வாதிகள்.

ஸ்டாலின் புகழ் ரஷ்யாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல; உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அது பரவும். நாம் இந்த மாமனிதனுக்கு நெருக்கமாகவும் நண்பனாகவும் இருப்போமானால் இந்த உலக நிகழ்வுகளை தைரியத்தோடும் நம்பிக்கையோடும் மேலும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றெ எண்ணுகிறேன்.

விமர்சனங்கள்

ஸ்டாலின் சர்வாதிகாரி, கொடுங்கோலன் சுமத்துகின்ற, அவதூறு செய்கின்ற‌ அறிவாளிகள் அத்தனை பேரும் ஸ்டாலினை மட்டும் அவதூறு செய்வதில்லை. நாங்கள் ஸ்டாலினைத்தான் விமர்சிக்கிறோம் மற்றபடி கம்யூனிசத்தை ஏற்கிறோம் என்று யாரும் சொல்வதில்லை. ஸ்டாலினை அவதூறு செய்கிற அனைவரும் கம்யூனிசத்தையும் கட்டோடு வெறுக்கிறார்கள். இவ்வாறு ஸ்டாலின் சர்வாதிகாரி என்று அவதூறு செய்கிற அத்தனை பேரும் முதலாளித்துவ சுரண்டலையும், ஒடுக்குமுறையையும், சர்ர்வாதிகாரத்தையும் பல வகைகளிலும் நியாயப்படுத்துகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top