மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த “ESP (Extra sensory perception) ” என இனங்காணப்படுகிறது.இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன… இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)…
முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)… “டைம் ஸ்லிப்” எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்… அது சம்பந்தமாக பின்னர் பார்க்கலாம்….
இப்போது… அடிப்படையில் நாம்… மூளையை தூண்ட எம்மை அறியாமல்… என்ன என்ன செய்கின்றோம் என்பதை பார்ப்போம்…
——————————————————————————————-
உதாரணமாக…
நாம் கணக்கு அல்லது ஏதாவது பயிற்சிகள் செய்துகொண்டிருக்கும் போது… செய்யும் முறை நினைவு வராதவிடத்து… பேனாவால்… நெற்றிப்பக்கத்தில் இலேசாகத்தட்டுவதுண்டு (அல்லது விரலால் ஏதோ செய்வோம்.)… அதன் பின்னர், பல வேளைகளில் செய்முறை நினைவுக்கு வந்துவிடும்…
இன்னொரு உதாரணத்துக்கு…
பாடசாலைகளில்… மாணவர் ஒருவர் விடை சொல்லத்தடுமாறும் போது, ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவார் (இதில் சிலர் கொலைவெறித்தனத்தையும் காட்டி விடுவார்கள் 😀 )… பின்னர் ஏதோ அரை குறையாக மாணவன் விடையை கிட்டத்தட்ட சொல்லுவான்…
இந்த இரண்டு உதாரணங்களிலுமே… நடப்பது மூளையைத்தூண்டும் செய்கைதான்…
மூளைக்குப்போகும்… இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தும் முறைதான் இது… அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன… இதை அறியாமலே நாம் இந்த முறைகளைப்பின்பற்றி வந்திருக்கின்றோம்… 🙂 ( அது எப்படி?… இதற்குரிய ஜோசனை… பின்னர் வர உள்ள பதிவுகளில் வரும்.. 🙂 )
——————————————————————————————-
இப்போது… நான் குறிப்பிட்டது போன்று… மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துகையில் புத்துணர்வு பெறும், என்ற கருத்தை நிரூபிப்பதற்கு ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளது…
சில எலிகளின்… மூளையின் குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறிய ஒரு மின் தகட்டை பொருத்தி… மறுமுனையை தயார்ப்படுத்தப்பட்ட மின்கல மிதியுடன் பொருத்தினார்கள்…
எலிகள், அந்த மிதியை மிதிக்கும் போது… மூளையில் மெதுவாக மின் பாய்ச்சப்பட வேண்டும் என்பதே நோக்கம்…
பரிசோதனை எலிகள் அந்த கூண்டினுள்… பல இடங்கள் இருக்கும் போது; மறுபடியும் மறுபடியும் அந்த மிதியிலேயே அவை ஏறிக்கொண்டிருந்தன…
இதிலிருந்து, மின் பாய்ச்சப்படும் போது… உணவைக்கூட கவணிக்காது… 24 மணி நேரமும்…எலிகள் வித்தியாசமான ஒரு உணர்வை பெற்றிருக்கின்றன… அதுதான், மீண்டும் மீண்டும் ஏறின என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஆகவே, மூளையில்… பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணர்ப்பட்டது.
——————————————————————————————-
விஞ்ஞான மருத்துவப்படியும்…
4 பில்லியன்ஸ் செல்கள் மூளையில் இருக்கின்றன… ஆனால், நாம் அதில் 10% ம் கூட பயண்படுத்துவதில்லை… ( விஞ்ஞானிகளுக்கும் சாதாரண படிக்காத மனிதனுக்கும் கூட 100 செல்களுக்குள் தான் வித்தியாசமாம். )
ஐன்ஸ்டைன் மேலதுகமாக 500 தொடக்கம் 1000 செல்களை பயண்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. ( ஐன்ஸ்டைனின் மூளையில், சாதாரண் மூளையை விட மடிப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.. )
ஓ.கே… இனி நாங்கள், ESP மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் பார்க்கப்போகின்றோம்…
வரும் பதிவுகளில்… நம்மவே, முடியாத… பல பெளதீக மீறல்களையும், அதிசயங்களையும் பார்ப்போம்.