புனித உடற்போர்வை (Shroud of Turin)
யேசு கிருஸ்துவின் இறப்பின் பின் அவர் மேல் போர்த்தப்பட்டிக்கலாம் என்று சொல்லப்படும் லினன் துணியின் காலத்தை கணிக்க ரோடியோ கார்பன் பரிசோதனை 1988ல் செய்யப்பட்டது. ஒருசாரர் இவ்வகைத்துணி 1260 மற்றும் 1390 களில் நெய்யப்பட்டிருக்கலாம் என்றனர்.
பின்னர் 2005 ல் நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ரைமான் ரோஜர் (raymond Rogers) என்ற ஓய்வு பெற்ற வேதியல் ஆராய்சியாளர் இது குறித்த மற்றுமொரு பரிசோதனையை செய்தார். இவரின் ஆய்வுப்படி 1300 மற்றும் 3000 ஆண்டு பழமையானது என்று தெரிவித்தார்.
செக்கோந்தோ பீயா என்பவரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் நெகட்டிவ் மூலமாகவே முதன் முதலில் உருவம் தெளிவாக தெரிந்தது (1898) உலகிற்கு அறியக்கிடைத்தது. இரத்தம் உறைந்த பகுதிகள் கைகள் சிலுவையில் அறையப்பட்டதற்கான தடயம் உள்ளது. இப்புனித துணி நெருப்பில் இருந்து எரிவதிலிருந்தும் தப்பியதாகவும் அறிகிறோம்.
கருப்பு வெள்ளை ஒளிப்படம் சுவிட்சர்லாந்தின் லோசான் நகரக் காட்சியகத்தில் உள்ளது.
கிருஸ்துவின் உருவம் எப்படி இந்த துணியில் மெல்லியதாக தெரிகிறது என்பது ஆச்சர்யமானது. இந்த ஆய்வு மதத்தவரை புண்படுத்தும் என்பதாலோ? அல்லது பரிசோதனை பிரியோசனம் இல்லை என்பதாலோ விடப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
ஆகக்கூடி இது குறித்த சர்ச்சைக்கு முடிவு கிட்டவில்லை. புலப்படா மர்மங்களில் இதுவும் ஒன்று.