Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு
மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு

மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு

நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.

brain23

இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.

பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும்“ஹைபோதாலமஸ்” மூளையின் நடு நாயகனான மூளையின் முக்கிய உறுப்பு. இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது… நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.

நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம்…இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.

நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர் “டாங் சே கெய் “ [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது.

ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில் NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.

நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது.

ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.

NF -kB ஹைபோதாலமஸில் GnRH (Gonadotropin Releasing Hormone) (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது.

”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு “ – கெய்

”குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது“ என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்).

இந்த ஆய்வு குறித்து “ நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.

இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய், வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் )

திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70 சதவீதம் நீட்டிக்கிறதாம்.

பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top