போன பதிவில் “விமானம்” தொடர்பாக அறிந்தவற்றையும், பலரும் அறிய மறந்தவற்றையும் பார்த்தோம். அது தொடர்பாக இனியவை கூறல் பதிவர் நண்பர் கலாகுமரன் அனுப்பி வைத்த பயனுள்ள புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள். இன்றைய ஹெலிகொப்டர் (உலங்கு வானூர்தி ), விமானங்கள் முதல் ஜெட் விமானங்கள் வரை எகிப்திய பிரமிட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளன! படத்தைப்பாருங்கள்.
விமானம் தொடர்பாக போதிய அளவு பார்த்துவிட்டோம். மேலும் தகவல்கள் கிடைக்கும் போது பகிர்ந்துகொள்கிறேன். 🙂
இன்று….
ரொக்கெட்டை கண்டு பிடித்தவர் யார் என்பது தொடர்பாக பல முரண்பாட்டு தகவல்கள் இருக்கின்ற போதிலும், பரவலாக Robert H. Goddard (ரொபெர்ட் எச்.கொடார்ட்) என்பவர்தான் முன்னிலை வகிக்கிறார். காரணம் அவர் எழுதிய A Method of Reaching Extreme Altitudes என்ற நூலின் துணையுடன் தான் பிற்காலத்தில் விண்ணை அடையக்கூடிய ஏவுகலம் ( German V-2 – ஜேர்மன் வி 2 ) 1944 இல் உருவாகியது!
இங்கு நாம் இன்னொருவரை நினைவில் கொள்ளவேண்டும், சேர். ஐஸாக் நியூட்டன்! ஆம், அவரின் ” எந்த ஒரு விசைக்கும் பருமனில் சமனானதும் திசையில் எதிரானதுமான மறுவிசை உண்டு” என்ற 3 ஆம் விதி தான் இந்த திட்டத்திற்கே வித்திட்டது!
இதற்கு மேலும் தரவுகளை சொன்னால், என்னடா இது வித்தியாசமா ஏதாவது இருக்கும்னு பார்த்தா ஒரே தகவலை சொல்லிட்டு இருக்கானே என்று யோசிப்பீங்க… ” நவீன ஏவுகலம் ” தொடர்பான மேலதிக தகவல்களை அறிய நினைப்பவர்கள் இந்த தொடுப்பினூடு அறிந்துகொள்ளுங்கள்.
நாம் இப்போது நவீனத்திற்கு மர்ம பகுதிக்குள் செல்லலாம்…
சீனா, பல நூற்றாண்டாக தமது பதிவுகளையும் கலைகளையும் பேணிவரும் நாடு என்பதை நாம் அறிவோம். அவர்களின் குறிப்புக்களின் படி கி.பி 1232 ஆம் ஆண்டில் மொங்கோலியருடனான போரில் ரொக்கெட் தாக்குதல்கள்(?) நிகழ்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரொக்கெட் தாக்குதல் என்றவுடன் பயங்கரமாக எல்லாம் சிந்திக்க வேண்டாம்… சிறிய வகை ரொக்கெட்டுக்கள் தான்.. குறிப்பிட்ட தூரத்தில் சென்று வெடிக்கும்.. தூர இருந்தே தாக்கிவிடலாம்…
அவ்வ்… இவ்வளவு தானா என்றும் இப்போது யோசிக்கவேண்டாம்…
காரணம், நியூட்டன் 1642 ஆம் ஆண்டில்! ஆனால் அதற்கு சரியாக 410 வருடங்களுக்கு முன்னர் நடந்த போரில் சீனர்கள் “எதிர் விசை” விதியை பயன்படுத்தியுள்ளார்கள்! அது எப்படி?
சரி, இந்த விடை தெரியாத கேள்வி இருக்கட்டும்… இப்போது மேலும் ஒரு படி பின்னோக்கிப்போவோம்!
எகிப்திய பிரமிட்டுக்கள்! (பண்டைய அறிவியலுக்கு சான்றாக நிற்கும் முக்கிய பிரதேசம் என்பதால் அனைத்து மர்ம முடிச்சுக்களை விடுவிக்கவும் ஆரம்பிக்கவும் இது முக்கியமாகிறது!)
இங்கு இருக்கும் முதலாவது புகைப்படத்தைப்பாருங்கள், எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட உருவம்!
சற்று உற்றுனோக்கினால் பல மர்மங்கள் காத்திருக்கின்றன.
ஒரு மனிதர் ஒரு கலத்தினுள் அமர்ந்திருப்பதுபோன்று உருவாக்கப்பட்டுள்ளது. கலத்தின் முன் மற்றும் பின் பகுதிகள் நமது நவீன விண்கலங்களுடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்திருக்கின்றது! இன்னும் ஒரு படி மேலே உற்று நோக்கினால்… நவீன விண்கல அமைப்பை விட மேம்பட்டதாகவும் சொல்லலாம், காரணம் சிறிய அமைப்பில் ஒருவர் மட்டும் பயணிக்கும் வகையில் உரு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உருவத்தை எப்படி விண் ஓடமாக கருத முடியும்? வேறு சாதனமாகவும் இருக்கலாமே என்பவர்களின் சிந்தனைக்கு அடுத்த புகைப்படம் ஐயத்தை உண்டாக்கும். 🙂
இப்படத்தைப்பாருங்கள், தலையை சுற்றி வித்தியாசமான கவசம், நவீன விண்வெளி வீரர்களின் சுவாச கவசத்தை ஒத்ததாக இதை கருத முடியும்… காரணம், புகைப்படத்தின் வாய்ப்பகுதியை பாருங்கள்! செயற்கை சுவாசத்திற்குரிய அமைப்பை கொண்டிருக்கின்றது! அதற்கு கொஞ்சம் கீழே பார்த்தீர்களானால் நெஞ்சுப்பகுதியில் சில பட்டங்களை கொண்டமை போன்ற உருவம் அமைக்கப்பட்டுள்ளது!
தேவை இல்லாமல் கற்பனையில் மட்டும் இப்படியான உருவங்களை அமைப்பார்களா?
எம்மால் அவர்களின் திறனை மதிப்பிட முடியவில்லை அல்லது ஏற்றுக்கொள்ள வெட்கப்படுகின்றோம் என்பதற்கான இவை அனைத்தும் பொய்/ கற்பனை என்று கூறிவிட முடியாது. ( காலப்பயண ரீதியில் சிந்திப்பவர்கள் பொறுக்க. வேறு பகுதியில் தெளிவாக அதை பேசலாம். இங்கு போட்டு குழம்பாமல்/குழப்பாமல் )
பதிவு நீண்டுவிட்டது, வரலாற்றில் அழிந்துபோன ரொக்கெட் மற்றும் விண்வெளி வீரர்கள் தொடர்பான பல புதிய தகவல்கள் மற்றும் நாம் அறிய மறந்த இன்னொரு புதிய தகவலுடன் அடுத்த வாரம் சந்திப்போம். அது சரி அப்படியானால், எகிப்தியர் மட்டும் தான் புத்திசாலிகளாக இருந்தார்களா? நாம் / நம் முன்னோர்கள் அப்போது என்ன செய்துகொண்டிருந்தோம்/இருந்தார்கள்?! அடுத்த பதிவில் அதையும் பார்க்கலாம் 🙂
போன பதிவை பலர் பகிர்ந்து ஊக்கத்தை தந்திருந்தீர்கள். இந்த பதிவிற்கும் உங்கள் ஊக்கத்தை எதிர் பார்க்கின்றேன். அத்துடன் குறைகளை, பிழைகளை கட்டாயம் சுட்டிக்காட்டவும். தவறான தகவல்கள் பரவக்கூடாது!!