Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » டிராகன் முக்கோணம்!!!
டிராகன் முக்கோணம்!!!

டிராகன் முக்கோணம்!!!

மா நோ உமி மர்மங்கள்!

மர்மங்களுக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள், ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதிக்கு நேர் எதிர்புறத்தில் டிராகன் முக்கோணம் அமைந்திருப்பது கண்டறியப்பட்டது.

மா நோ உமி! இந்த வார்த்தை ஜப்பான் மொழி வார்த்தை. இதன் பொருள் ”பிசாசு கடல்” என்று அர்த்தமாகும். இதனின் இன்னொரு பெயர் தான் ‘டிராகன் டிரையாங்கிள்’ அதாவது டிராகன் முக்கோணம். இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துவது பயங்கரமான மர்மமாகவே இருந்து வருகிறது.

டிராகன் முக்கோணப் பகுதி கடல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசு கடல். இந்தக் கடல் பகுதி வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம்! இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை.

இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துவது பயங்கரமான மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்த மர்மத்தீவு, பெர்முடா முக்கோணத்தின் நேராக, பூமி உருண்டையின் மறு பக்கத்தில் இருக்கிறது.

பெர்முடா முக்கோணம் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள்,விமானங்கள் போன்றவை காணாமல் போவது போலவே, இந்த பிசாசுக் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களும்,விமானங்களும் மாயமாக மறைந்து போவதாக கூறப்படுகிறது.

இந்த மர்மமான தொலைதல்கள் பற்றி ஜப்பான் கண்டுகொள்ளவில்லை. ஆனால், 1952 ம் ஆண்டிற்கும் 1954 ம்ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்கடல் பகுதி வழியாக ஜப்பானின் ராணுவக் கப்பல்கள் சென்றன.இந்தப் பிசாசு கடல் பகுதியை கடந்தபோது அவை என்னவாயின என்பதும்அதில் பயணித்த 700 பேரின் நிலைஎன்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த அதிர்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு ஜப்பான் அரசு இது பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக 31 விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.

இந்த விஞ்ஞானிகள் குழு உடனடியாக டிராகன் முக்கோணம் நோக்கி பயணித்தது. ஆனால் இதில் பயங்கரம் என்ன என்றால், ஆராய்வதற்குச் சென்ற விஞ்ஞானிகளின் அந்த கப்பலின் நிலையும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இந்த மாய, மர்மங்கள் புரியாமல்,எதற்கு வம்பு என்று ஜப்பான் அரசாங்கம் அதனை ஆபத்தான பகுதியாக அறிவித்தது. இந்த மர்மங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.

உண்மை நிலை என்ன என்பது பற்றி விஞ்ஞானிகள் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? விஞ்ஞானிகள் ஆய்வின் படி ஜப்பானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் எரிமலைகள் வெடிப்பதும்,நிலஅதிர்வுகள் ஏற்படுவதும் சர்வ சாதாரணமான ஒன்றே. இதே போன்ற நிகழ்வுதான் கடலுக்கடியிலும் எரிமலைகள் வெடிக்கின்றன. இதனால் கடலுக்கடியில் நில அதிர்வு ஏற்படுகிறது . இதனால் கடல் பரப்பின் மேல்பகுதியில் திடீர் திடீரென்று அலைகள் உருவாகின்றது. அப்பொழுது அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன என்கிறார்கள்.

ஜப்பான் நாட்டினர் ஒரு சிலர் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? ஒரு சுவாரஸ்யமான நம்மூர் புராணக்கதை போல ஒன்றை சொல்கிறார்கள். அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புகிறார்கள். அதற்கு, ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். “மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன.

அந்த இனம் அழிந்துவிட்டாலும், அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன” என்கின்றனர் அவர்கள்.

உண்மை என்னவென்று இதுவரை பெர்முடா முக்கோணத்தைப் போலவே, டிராகன் முக்கோணப் பகுதியும் கண்டுபிடிக்கப் படவில்லை. மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடற்பரப்பின் ஆழ்பகுதியில் டிராகன் உறங்கிக்கொண்டிருக்குமாம். கடற்பரப்பின் மேற்பகுதியல் செல்லும் கப்பலின் அதிர்வு சத்தம், டிராகனின் தூக்கத்தை கலைத்து விடுமாம். இதனால், ஆத்திரம் கொள்ளும் டிராகன் ஆவேசமாய் எழுந்திருக்குமாம், அப்போது கடல் அலைகள் பெரிய அளவில் ஆர்ப்பரிக்குமாம், பெரிய சூராவளிக் காற்று அப்பகுதியில் வீசி, அப்பகுதியில் வரும் கப்பலை காவு வாங்குமாம் என்று சூபி கதைகளைப்போல் டிராகன் முக்கோணமும் ஜப்பான் வாசிகளுக்கு கதைப்பொருள் ஆனது.

காணாமல் போன விமானங்கள்:

1945 டிசெம்பர் 5 இல் லாடேர்டேல் கோட்டை, புளோரிடா ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட ஜிவிஙி கப்பல் படை விமானங்கள்.

1945 டிசெம்பர் 5 இல் றிஙிவி மார்டின் குண்டெறி விமானம்.இவ் விமானத்தின் செய்தித் தொடர்பு கருவி பழுதுபட்டதுடன், திடீரென மறைந்தது.

1947 இல் சி 54 என்னும் அமெரிக்க இராணுவ விமானம்.

1948 ஜனவரி 29 இல் ஜிuபீஷீக்ஷீ – 4 என்னும் விமானம் 31 பயணிகளுடன் பெர்முடாவுக்கு வடகிழக்கு திசையில் 670 கி. மீ தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது காணாமல் போனது.

1948 டிசெம்பர் 28 இல் ஞிசி தனியார் விமானம் மியாமிக்கு சென்று கொண்டிருந்த போது 32 பயணிகளுடன் காணாமல் போனது.

1950 மார்ச் அமெரிக்காவினுடைய நிறீஷீதீறீமீ விணீstமீக்ஷீ என்றும் விமானம் அயர்லாந்து சென்று கொண்டிருந்து போது பெர்முடாவில் மறைந்து விட்டது.

1954 அக்டோபர் 30 இல் ஷிuஜீமீக்ஷீ சிஷீஸீstமீறீறீணீtவீஷீஸீ என்ற கடற்படை விமானம் 42 பேருடன் காணாமல் போனது.

1963 ஆகஸ்ட் 28 இல் ரிசி 135 என்னும் விமானம் பெர்முடாவுக்கு தென்மேற்கே 450 கி.மீ தொலைவில் காணாமல் போயுள்ளது.

1965 ஜூன் 5 இல் சி – 119 திறீஹ்வீஸீரீ ஙிஷீஜ்மீக்ஷீ விமானம் 10 பேர்களுடன் பகாமா தீவுகளுக்கு தென்கிழக்கில் சென்ற போது காணாமல் போனது.

1967 ஜனவரி 11 இல் சீசி – 122 சரக்கு விமானம் பாலம் கடற்கரைக்கும் பெரும் பாகாமாவுக்கும் இடையில் மறைந்துவிட்டது.

கப்பல்கள்

1849 இல் ஸிஷீsணீறீவீமீ என்னும் பிரெஞ்சு கப்பலானது பயணிகள், பொருட்களுடன் கடலில் மூழ்கியது.

1902 ஓகஸ்ட் 4 இல் திக்ஷீணீஹ்ணீ என்னும் கப்பல் கியூபா தீவுகளை கடந்து செல்லும் போது கடலில் மறைந்து விட்டது.

1918 மார்ச் 4 இல் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 500 அடி நீளமான சைக்கிலோப்ஸ் சரக்கு கப்பல் கடலில் காணமல் போயுள்ளது.

1931 இல் ஷிtணீஸ்மீஸீரீமீக்ஷீ என்ற சரக்கு கப்பல் பஹாமா தீவுக்கு அருகில் உள்ள சிணீt மிsறீணீஸீபீ வருவதை கட்டுப்பாட்டு நிலையம் அவதானித்தது.அதன் பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

1938 மார்ச் கிஸீரீறீவீ கிustக்ஷீணீறீவீஹ்ணீஸீ என்ற சரக்கு கப்பல் கிக்ஷ்ஷீக்ஷீமீs மேற்கே காணாமல் போனது.

1940 பெப்ரவரி சீணீநீலீt நிறீஷீக்ஷீவீணீ சிஷீறீவீtமீ என்னும் கப்பல் எந்த வித இயந்திர கோளாரோ இயற்கை அசம்பாவிதங்களோ இன்றி அலபாமாவுக்கு 300 கி.மீ தெற்கே காணாமல் போயுள்ளது.

1955 செப்டம்பர் சிஷீஸீஸீமீனீணீக்ஷீணீ 4 என்னும் உல்லாச பயணிகள் கப்பல் பெர்முடா தீவில் 600 கி.மீ தென்மேற்கில் காணாமல் போயுள்ளது.

1963 விணீக்ஷீவீஸீமீ ஷிuறீஜீலீuக்ஷீ னிuமீமீஸீ என்ற 425 அடி நீளமான சரக்கு கப்பல் செய்தித்தொடர்பு தடயம், உதிரிப்பாயங்கள் எச்சங்கள் எதுவும் இன்றி காணாமல் போய்விட்டது.

1963 ஜூலை 1 இல் ஷிஸீஷீதீஷீஹ் பெயருடைய 63 அடி நீளமுடைய மீன்பிடி படகு 40 பேருடன் ழிஷீக்ஷீtலீ ணிணீst சிணீஹ் இல் இருந்து 120 கி.மீ தொலைவில் காணாமல் போய்விட்டது.

பாக்ஸ் செய்தி: டிரையாங்கிள் முக்கோணம் பற்றி பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட துதான். பேட் இதழ் ’நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது.

அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது.

வின்சென்ட் காடிஸ் என்பவர் 1964 பிப்ரவரியில் அர்கோசி இதழில் பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை ‘மரண பெர்முடா முக்கோணம் ‘ (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது) பிறகு, அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார்.

ஜான் வாலஸ் ஸ்பென்சர் (லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969); சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா டிரையாங்கிள் , 1974); ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்’ஸ் டிரையாங்கிள், 1974)ஆகியோரின் மற்ற பல படைப்புகளும் வெளியாயின.

பெர்முடா முக்கோணம், டிராகன் முக்கோணம் போன்று உலகம் முழுவதும் கடற்பரப்பில் 12 இடங்கள் இருக்கின்றன. நம்மை மிரட்டிக்கொண்டிருப்பவை பெர்முடா முக்கோணமும், டிராகன் முக்கோணமும் மட்டும்தான். மீதியுள்ள திகில் கடற்பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் நம் தூக்கத்தைக் கெடுக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர், விஞ்ஞானிகள்.

இதை தொடர்ந்து 20 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஆதிதீவிர ஆய்வு பணியின் போது டிராகன் முக்கோணத்து பகுதியில் பூவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதும், சூரியனின் மின்காந்த ஆ லை களின் தாக்கம் அதிகமாக இருப்பதும் விமானம்,கப்பல்களை கட்டுப்பாட்டை இழக்கச்செய்து கடலில் முழ்கடித்து மாயமாக்கி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top