செயற்கை மழை!
செயற்கை மழையைப்பற்றி எமது பாணியில் பார்க்கலாம்…
18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. Environment & Pollution 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி வழமைபோலவே அமெரிக்கா ஒரு திட்டத்தை வகுத்தது! அது தான் செயற்கை மழைத்திட்டம். (இத்திட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றாக நிற்க சீன தன் பங்கிற்கு தனியாக தனது தேடலை ஆரம்பித்தது.)
1957 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற ஒரு உருப்படியான தீர்வு கிடைத்தது. விளைவு 1960களில் சீனா தனது முதல் செயற்கை மழையை பெய்ப்பித்துக்காட்டியது. இன்னும் மேம்பட்ட விதத்தில் அமெரிக்காவும் கனடாவும் 1970 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மழையை பெய்ப்பிக்கும் ஆற்றலைப்பெற்றன.
செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக்கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது!
ஆம், இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை!
(செயற்கை மழை தொடர்பான விரிவான தகவல்களை இங்கு பார்க்கலாம்.)
சிம்பிலாக சொல்லவேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்.)
சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.
நாம் எல்லாம் புராண கதைகள் என்ற பெயரில் சிறுவதில் இருந்து பல கதைகளை படித்திருக்கின்றோம். (ஹிந்தியில் எடுக்கப்பட்ட சில நாடக தொடர்களை கூட பார்த்திருக்கின்றோம். )
அதில் எல்லாம்… நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக “யாகம்” என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகைவரவைப்பார்கள். ( புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை…. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது “பூசாரிகள்” மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். ( அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்.) )
புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்லவெருகிறேன் என்று!
ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டி இருக்கலாம்!
மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!
இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று “யாகங்கள்” என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.
ஆனால், நாம் “யாகம்” என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம். நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம். ( புராணங்கள் இந்துக்களுடையதல்ல… தமிழருடைய வரலாறுகளின் திருபு என பல சான்றுகளுடன் “லெமூரியா பதிவுகளில்” கூறிவருகிறேன்.)
புராண கதைகளில் யாகங்கள் மழைக்கும் செய்யப்படும். நாட்டில் பஞ்சம் என்றாலும் செய்யப்படும்.
அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன! சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன!
– இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். ( தேடிப்பார்க்கவும்.)
( இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு!)
ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக்கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் 🙂