வெள்ளைப்பனி படர்ந்த கிறீன்லாந்தில் சில தசாப்தங்களாகவே புவியின் வெப்ப அதிகரிப்பின் விளைவாக பனி மலைகள் சரிவடைந்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாக 2100 ஆம் ஆண்டிற்குள் உலக ஒட்டுமொத்த சமுத்திரங்களும் சுமார் 20 சென்ரிமீட்டர்கள் வரை உயர்வடையும் என் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது, சில ஆண்டுகளாக வெள்ளை பனியின் நிறம் மாற்றமடைந்து பழுப்பு நிறத்தை அடைந்துவருகிறது. இதன் காரணமாக 2100 எனும் இலக்கு மிகவிரைவில் மாறுபடலாம் என் விஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூழல் மாசடைவே இதற்கான பிரதான காரணமாக கருதப்படுகிறது.
சமீபத்தில் பிரான்சின் பரிஸில் மக்கள் சுவாசிக்கும் வகையில் வளிமண்டலம் இல்லை என் அடையாளம் காணப்பட்டு, அரசபோக்குவரத்துக்களை இலவசமாக்கி தனியார் போக்குவரத்தை கட்டுப்படுத்தி காபனீரொட்சைட்டு வெளிவிடப்படும் தன்மை குறைக்கப்பட்டிருந்தது. (1764)