பூமியில் இருந்து சுமார் 163 ஒளியாண்டு தூரத்தில் இனங்காணப்பட்ட மண்ணிறம் நட்சத்திரம் (எமது சூரிய நட்சத்திரத்தில் இருக்கும் கணிமங்கள் இவ் நட்சத்திரத்தில் இருப்பினும், எரிவதற்கு தேவையான ஆரம்ப உந்தம் கிடைக்காமையால் குளிர்ச்சியான நட்சத்திரமாக உள்ளது. அதாவது நட்சத்திரத்தின் தன்மைகளை கொண்டிருப்பினும் அடையாளத்திற்கு ஒரு கோல் போன்றதே) ஒன்று திடீரென அடையாளம் தெரியாது மறைந்துள்ளது.
சிலியில் இருக்கும் ESO தொலை நோக்கியின் உதவியுடன் தொலைந்துபோன அவ் நட்சத்திரத்தை தெடும் முயற்சியும் காரணம் அறியும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ் நட்சத்திரத்துக்கு அருகில் இன்னோர் நட்சத்திரம் (160 ஒளியாண்டுகள்) இருப்பதனால் இவை ஜோடி நட்சத்திரங்களாக இனங்காணப்பட்டன. இரண்டும் 12 மணி நேரங்களுக்கொருமுறை ஒரே சுற்றுப்பாதையில் சந்திப்பன. 6 மணி நேரத்திற்கொருமுறை பிரகாசத்தை காட்டுவதற்கு இது காரணமாக அமைந்தது.
163 ஒளியாண்டு தூரம் என்பது ஒப்பீட்டளவில் எமக்கு அருகாமை. அருகில் இருந்த நட்சத்திரம் தவறவிடப்பட்டது / காணாமல் போனது நட்சத்திர ஆய்வளர்களுக்கு சவாலையும் புதிய கருத்துப்பார்வையும் ஏற்படுத்தியுள்ளது.