Home » 2015 » March

Monthly Archives: March 2015

வராக பயங்கரம்!!!

நான் தனிமை விரும்பி. ஒரு தனியார் கம்பெனி மேனேஜர். கைநிறைய சம்பளம். போன மாசம்தான் இந்தப் பெரிய வீட்டை வாங்கிப் போட்டேன். வீடு என்று சொல்லக்கூடாது, கோட்டை. இந்தக் கிராமத்தில் இதைப் பள்ளிக்கோட்டை பங்களா என்கிறார்கள். கிராமத்தின் பெயரும் சித்தன்பள்ளி. அது என்ன பள்ளி? இங்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்த வீட்டுக்கும் ஊருக்கும் பள்ளி என்ற பெயருக்கும் ஏதோ விசேஷத் தொடர்பு – அர்த்தம் இருக்கிறது. காரைக்குடிப் பக்கத்து நாட்டுக்கோட்டைச் செட்டியார் வீடுகளைப் பிரதியெடுத்ததுபோல் வீடு ... Read More »

அறிவியல் உண்மைகள்

அறிவியல் உண்மைகள்

கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருப்பது ஏன்? தரைமட்டத்திற்குக் கீழே சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில்   வெப்பக்கடத்தி; எனவே கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர், ஏறக்குறைய 20-25 செ.கி. வெப்பநிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில  பகுதிகளின் சுற்றுச்சூழல் வெப்பநிலை 4-5 செ.கி. அளவுக்கும் செல்வதுண்டு.  அந்நிலையில் கிணற்றுநீர் 20-25 செ.கி. ... Read More »

நரகத் தீவு !

நரகத் தீவு! பேய் பங்களா, 13-ம் நம்பர் வீடு என்பது போன்ற மர்ம மாளிகைகளின் கதைகள் மக்களிடம் நிறைய உலவும். பல்வேறு திரைபடங்களும் அந்த பீதியை மையமாக வைத்து வெளிவந்து திகிலை அதிகரிக்கும். நிஜமாகவே உலகம் முழுவதும் மிக அதிகமான மக்களை பீதி அடையச் செய்த சில இடங்கள் இருக்கின்றன. அங்கே நடக்கும் மர்ம உயிரிழப்புகள், உண்மை விளங்கா சம்பவங்கள் அருகில் வசிப்பவர்களை பயத்தில் பதற வைத்து வயிற்றைக் கலக்கும். கேட்டாலும், பார்த்தாலும் குலைநடுங்க வைக்கும் உலகின் ... Read More »

காட்டேரி

“உங்களுக்கு எல்லாம் ஆயிரம் பெரியார் வந்தாலும் பத்தாதுய்யா “ செந்தில் குமரன் கொஞ்சம்  கோபமாய் தான் பேசினான். ” தினமும் டீக்கடைக்கு வர வேண்டியது. அங்க உக்காந்து கண்ணாபின்னான்னு பேச வேண்டியது. எதையாவது ஒண்ணு கெளப்பி விடவேண்டியது ” ” அட என்னப்பா… நீ மட்டும் என்ன? தினமும் தான் இங்க  வர்ர ” பெரியவர் ஒருவர் கையில் முடிந்து போய் வற்றி விட்டிருந்த  தேநீர் கண்ணாடிக் குவளையையும் மற்றோர் கையில் நாளிதழையும்  பிடித்துக் கொண்டு பேசினார். ... Read More »

புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

பரிணாமவியலை எதிர்ப்பவர்கள் பொதுவாக தங்களது மத புத்தகத்தில் எழுதியுள்ள வரிகளை அப்படியே உண்மை என்று நம்பிக்கொண்டு, அதன் அடிப்படையிலேயே உலகம் தோன்றியது, உயிர்கள் தோன்றின என்று வாதிடுவார்கள். பல கோடி ஆண்டுகள் பழைய இந்த பிரபஞ்சம் வெறும் ஐந்தாயிரம் வருடங்களே பழையது என்றும் கூறுவார்கள். ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் பெருவெடிப்பை அவர்களது மதப்புத்தகத்தில் உள்ள கடவுள் தோற்றுவித்தார் என்று நம்புகிறார்கள். ஆகையால், பல மில்லியன் வருடங்களுக்கு முந்தையதாக கணக்கிடப்படும் டைனசோர்கள் ஆகியவற்றை நம்மை ஏமாற்ற சாத்தான் என்ற ... Read More »

விஞ்ஞான பேய்

மச்சி . நா பேய பாக்கனும்டா . என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் . என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ? இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் . இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் . அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு . என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் ... Read More »

காலராவும் ஒரு மறக்கப்பட்ட மருத்துவ அறிவியல் மேதையும்

காலரா என்ற சொல் மரண தேவனின் சாசனத்திற்கு இணையானதாக ஒரு 60 ஆண்டுகள் முன்பு வரை கருதப் பட்டது.   கங்கை நதிப் பகுதிகளில் தேங்கிய நீர்க்குட்டைகளின் காரணமாக இந்தத் தொற்று நோய் முதன்முதலில் உருவானதாகக் கருதப் படுகிறது. பின்னர் இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சர்வதேச கடல்வழி வர்த்தகத்தின் காரணமாக,  ரஷ்யா, ஐரோப்பா, வட, தென் அமெரிக்கா கண்டங்கள், ஆப்பிரிக்கா என்று உலகம் முழுவதும் பயணித்து கோடிக்கணக்கில் உயிர்களைக் காவு கொண்டது. 18,19,20ம் நூற்றாண்டுகளின் உலக வரலாறு பற்பல ... Read More »

குப்பைக்காரன்

முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற விண்வெளி வீரர்களின் பட்டியலில் தன் பெயர் இல்லை என்பதைக் கண்டவுடன் வில்லியம்ஸுக்கு கோபம் தலைக்கேறியது. தன்னுடைய பிறந்த நாளான ஆகஸ்ட் 15ல் செவ்வாய் கிரகத்திற்கு செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான். அவனுடைய மேலாளர் “உங்கள் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது மிஸ்டர். வில்லியம்ஸ் “என்று போனவாரம்தான் கைகுடுத்துவிட்டு போனார். ஆனால் பயணம் செய்யப்போகும் ஏழு விண்வெளி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது தன்னுடைய பெயரைத் தேடித் ... Read More »

பேய் பிடித்த வீடு

அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடி இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை. மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று ... Read More »

பின் தொடரும் பேய்!!!

நள்ளிரவைக்கடந்தும் மடிக்கணினியில் இணையத்தை மேய்ந்து கொண்டிருந்ததனால் கண்களுக்கு ஏற்பட்ட இறுக்கத்தைக் குறைக்க நிமிர்ந்து வரவேற்பறையைப் பார்க்கையில் பகீர் என்றது. அங்கு ஒருவன் உட்கார்ந்து இருந்தான், என்னையே உற்றுப்பார்த்துக் கொண்டு … பொன்னிறத்தில் தலைமுடி, ஸ்காண்டிநேவிய நிறம், உட்கார்ந்திருக்கும்பொழுதே உயரமாகத் தெரிந்தான். சன்னல்களையும் கதவையும் தாழிட்டுத்தானே வந்தேன், என்ற யோசனையில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “ஹூ ஆர் யூ … வெம் எர் டு” என ஆங்கிலத்திலும் சுவிடிஷிலும் மாறிக்கேட்டுக்கொண்டு அவனருகே நெருங்கினேன். அவனை நெருங்க நெருங்க அவன் உட்கார்ந்திருந்த ... Read More »

Scroll To Top