இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஃபிட்னெஸ் என்பது மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் முக்கியமான பங்கைப் பெற்றுவிட்டது. அதைச் சரிவரச் செய்வதற்கு உதவியாக இருப்பதுதான் ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகள். இந்த ஃபிட்னெஸ் கேட்ஜெட்டுகளை வைத்துக்கொண்டு, நமது ஃபிட்னெஸ் பயிற்சிகளை யார் உதவியும் இல்லாமல், எந்தத் தவறும் இல்லாமல் செய்யலாம். 1. Nike+Fuelband: கவர்ச்சியாகக் காட்சியளிக்கும் இந்த கேட்ஜெட்டைக் கையில் ஒரு ப்ரேஸ்லெட்டைப்போலஅணிந்துகொள்ளலாம். இந்தக் கைப்பட்டையில் (Band) உள்ள சென்சார்கள் மனிதனின் தினசரி அசைவுகளைக் கண்காணித்துக் கொள்கிறது. கண்காணித்த தகவல்களை ‘Nike Fuel’-களாக ... Read More »
Monthly Archives: February 2015
ஆங்கிலத்தில் கையெழுத்து போட்டால் ஆங்கிலம் அறிந்ததாக அர்த்தமா?
February 8, 2015
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அய்யனார். முப்பது வயதான இவர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதில் இவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. பொதுத்துறையைச் சேர்ந்த பொதுக் காப்பீடு நிறுவனம் ஒன்றில் அவர் விபத்து காப்பீடு் பாலிசி எடுத்திருந்தார். எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் ரூ.1.50 லட்சம் செலவு செய்தார் அய்யனார். பாலிசி எடுக்கும்போது இறப்பு அல்லது மருத்துவச் செலவுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என ஏஜென்ட் சொல்லி இருந்ததையடுத்து, இந்த ... Read More »
‘டிஜிட்டல் இந்தியா’வை நடைமுறைப்படுத்துங்கள்!
February 8, 2015
மத்திய பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறை ஆதார் கார்டு/ வங்கிக் கணக்குடன் காஸ் இணைப்புகளை இணைத்ததால், இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1.50 கோடி போலி காஸ் இணைப்புகள் இருப்பதைக் கண்டுபிடித்து, அவற்றை நீக்கியிருக்கிறது. இதனால் மத்திய அரசாங்கத்துக்கு சுமார் ரூ.3,900 கோடி மானியத் தொகை மிச்சமாகி இருக்கிறது. பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறையின் இந்த நடவடிக்கையை மத்திய அரசாங்கம் ஓர் உதாரணமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். காரணம், இன்றைக்கு இந்தியாவில் வசிக்கும் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களைப் பற்றிய ... Read More »
எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா
February 8, 2015
தனியாக இருக்கிறீர்களா? உங்களுக்கு என தோழி இல்லையா? கவலை வேண்டாம் என்கிறது ஒரு வெப்சைட். ஆச்சர்யத்துடன் உள்ளே நுழைந்தால், உருகி உருகிக் காதலிக்க காதலி தருகிறோம் என்கிறார்கள். மாத்யூ ஹோமேன், அமெரிக்காவில் வழக்கறிஞர். ஏழு வருடங்களுக்கு முன் விவாகரத்து ஆனது. அதன் பின் தனித்துவிடப்பட்டதைப் போல உணர்ந்த மாத்யூவுக்கு தன் பெர்சனல் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு தோழியிருந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. விவாகரத்து தந்த கசப்பினால் வெர்ச்சுவல் காதலியாக இருந்தால் தேவலை என்று தோன்றியது. அப்போது உதித்த ஐடியாவே ... Read More »
ஒரு திருமணம் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகளும் சட்ட விவாதங்களையும் கிளப்பியது
February 8, 2015
2014-ல் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு திருமணம் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகளும் சட்ட விவாதங்களையும் கிளப்பியது. தற்போது அது ஒரு முடிவினை எட்டியுள்ளது. அப்படி என்ன அதிசயத் திருமணம்? இந்தியாவைப் போலவே ரஷ்யாவிலும் ஒரு பாலின திருமணம் தடை செய்யப்பட்டுள்ளது. இப்படியான நாட்டில் ஒரே மாதிரி இரண்டு பெண்கள் திருமண உடையுடன் மாஸ்கோ திருமணப் பதிவு அரங்கத்துக்குள் வரவும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் ஒருவரைத் திருமணம் செய்யப்போகிறீர்களா, அல்லது இரண்டு மணமகன்கள் வர ... Read More »
இது விளையாட்டு அல்ல !
February 8, 2015
இணையத்தில் மேய்ந்துகொண்டிருந்தபோது சில வித்தியாசமான ஆன்லைன் கேம்கள் கண்ணில் பட்டன. பொது நலன் கருதி அதைக் குறிப்பிடலாம் என்றால், குழந்தைகள் நலன் கருதி அந்தப் பெயரை மாற்றித் தருகிறேன். என்ன ஒரு கிரியேட்டிவிட்டிடா! பமீலா ஹாட் கிஸ்ஸிங் கேம்: பமீலானு ஒரு பாப்பா கோவா மாதிரியான ஒரு பீச்ல டூ பீஸ்ல மல்லாந்து படுத்துக் கெடக்கு. பக்கத்துல போயி உங்க மெளஸை எந்த இடத்துல கிஸ் பண்ணணுமோ அங்கே போய் நகர்த்தி வெச்சு லெஃப்ட் க்ளிக் கொடுத்தீங்கனா, ... Read More »
இப்படில்லாம் நடக்கும் பாஸ்!
February 8, 2015
ஒரு வாரம் தொடர் தும்மல். பல வைத்தியங்கள் செய்து பார்த்தும் தும்மல் நிற்கவில்லை. டாக்டரிடம் போனால், பரிசோதித்துவிட்டு, ஏ.சி அலர்ஜினு ஒரு வாரம் நைட்டுக்கு மட்டும் போடுற மாத்திரை எழுதிக்கொடுத்தார். மாத்திரை போட்டு 10 நிமிசத்தில் தும்மல் நின்னுடுச்சு. ரெண்டு நாள் சாப்பிட்டும் தும்மல் வரலை. ஆனா வேற ஒண்ணு வந்துச்சு. அதாங்க கனவுல பேய், பிசாசு எல்லாம். தொடர்ந்து நான்காவது நாளும் இதே மாதிரி யாரோ என்னைக் கொலை செய்ய துரத்துற மாதிரி… இல்லைனா, நான் ... Read More »
வைரல் ஃபீவர்
February 8, 2015
மெக்சிகோ நாட்டில் வசிக்கும் மொலினா தபியா என்ற 31 வயதுப் பெண் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தன் மகள் பூனைக்குட்டியை வைத்து விளையாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இரண்டு வயதாகும் மொலினாவின் மகள், சிறிய பூனைக்குட்டி ஒன்றைத் தலைகீழாகப் பிடித்து விளையாடுவது, பூனையை அதட்டுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இருந்தன. உடனே ‘கொஞ்சம்கூட பொறுப்பிலாமல் பூனையைத் துன்புறுத்த அனுமதிப்பதும் அதை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வதும் வெட்கக்கேடானது’ என்கிற ரீதியில் பலர் கமென்ட் அளிக்க, ... Read More »