1987 – உலக கோப்பை 1987 உலகக் கோப்பைப் போட்டித் தொடர், கிரிக்கெட்டின் அதிகார மையம் இடம் மாறிய தருணமாக அமைந்தது. 1987 கிரிக்கெட் உலகக் கோப்பை. பல்வேறு ‘முதல்’ நிகழ்வுகளுக்காகவும், சில ‘கடைசி’ நிகழ்வுகளுக்காகவும், உலகக் கோப்பை வரலாற்றிலும் கிரிக்கெட் வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்று விட்டது. உலக கிரிக்கெட் நிர்வாக அதிகார மையத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியதை உணர்த்துவதாக அமைந்த போட்டி இது. முதல் மூன்று உலக கோப்பை போட்டியும் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 1987ல் ... Read More »
Monthly Archives: February 2015
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 3
February 2, 2015
1983 – உலக கோப்பை மூன்றாவது உலக கோப்பை தொடர் 1983ல் இங்கிலாந்தில் நடந்தது. இம்முறை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ‘கபில் டெவில்ஸ்’ என்று வர்ணிக்கப்படும் அளவுக்கு எழுச்சி கண்டது. இத்தொடரிலும் 8 அணிகள் பங்கேற்றன. கனடாவுக்கு பதில் ஜிம்பாப்வே அறிமுக அணியாக கலந்து கொண்டது. அதே 60 ஓவர்கள், சிவப்பு பந்து போன்றவை பயன்படுத்தப்பட்டன. அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டன. இம்முறை லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 2
February 2, 2015
1979 – உலகக் கோப்பை இறுதிப் போட்டி லார்ட்ஸில் மே.இ.தீவுகள் இங்கிலாந்து அணிகளுக்கிடையே 25,000 ரசிகர்கள் முன்னிலையில் ஜூன் 23, 1979 அன்று நடந்தது. இங்கிலாந்து கேப்டன் மைக் பிரியர்லி எடுத்த எடுப்பில் ஒரு தவறு செய்தார். டாஸ் வென்ற அவர் மே.இ.தீவுகளை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் மட்டையாளர்களின் அபார ஃபார்மைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களை பேட் செய்ய அழைத்தார். இந்த முடிவு இங்கிலாந்துக்கு எதிராக முடியும் என்று ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள். இங்கிலாந்தின் அபாய ... Read More »
உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 1
February 2, 2015
1975 – உலக கோப்பை முதல் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975 ஜூன் 7ம் தேதி, ஐசிசி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவோடு இங்கிலாந்தில் துவங்கியது. இந்த தொடருக்கு முன்னதாக மொத்தத்தில், 18 ஒரு நாள் போட்டிகளே நடந்திருந்தன. அப்போதைய ஒரு நாள் போட்டிகள் 60 ஓவர்கள் கொண்டது. இந்த தொடர், டெஸ்ட் போட்டிகளை பின்னுக்கு தள்ளி, ஒரு நாள் போட்டிகளுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் குரூப் ... Read More »
179 வயது மனிதர்!!!
February 2, 2015
மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். 1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக ... Read More »
பறக்கும் குதிரை!!!
February 1, 2015
மெக்சிகோவில் எரிமலை அருகே பறக்கும் குதிரையை புகைப்படம் எடுத்த பெண் மெக்சிகோ சிட்டியில் இருந்து 300 மைல் மேற்கே உள்ள கோலிமா என்ற எரிமலை கடந்த வாரம் வெடித்தது. தற்போதும் புகையை கக்கிக்கொண்டிருக்கும் அந்த எரிமலைக்கு அருகே பறக்கும் குதிரை போன்று தோற்றமளிக்கும் உருவம் ஒன்றை பார்த்த பெண் ஒருவர் அந்த காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோவாக தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். ஆய்வாளர்களால் ‘அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்’ என்று குறிப்பிடப்படும் இது ‘பறக்கும் ... Read More »
இடி அமீன்!!!
February 1, 2015
உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் – ஒரு பார்வை கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று ‘கலிக்யுலா அனுபவங்கள்’ நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் ‘இடி அமீன் தாதா’. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக ... Read More »