Home » 2015 » February (page 13)

Monthly Archives: February 2015

நீல நிற நிழல்கள் (7)

ஜோஷி சொன்னதைக் கேட்டுச் சதுர்வேதி தன் சதைப் பற்றில்லாத உதடுகளை விரித்து அகலமாய்ப் புன்னகைத்தார். “மிஸ்டர் ஜோஷி! நீங்க இப்போ சொன்னது நடக்கப் போகிற நிஜம். உங்க மகனை மூளைக்கோளாறிலிருந்து குணப்படுத்தறதுக்காக நான் மேற்கொண்டிருக்கிற இந்த ஜீன் ட்ரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட்ஸில் நான் ஆரம்பக் காலத்தில் சந்தித்த தோல்விகள் இப்போது இல்லை. சோதனையான எவ்வளவோ கட்டங்களைத் தாண்டி வந்துட்டேன்.” “டாக்டர்! எனக்கு ஒரு பயம்…” “என்ன…?” “உங்க ஆராய்ச்சி முடியறதுக்குள்ளே என் மகன் நகுலுக்கு மூளைக்கோளாறு அதிகமாயிட்டா அதுக்கப்புறம் ... Read More »

நீல நிற நிழல்கள் (6)

பெரிய குங்குமப்பொட்டோடு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவில் சிரித்த அண்ணி கீதாம்பரியைப் பார்த்ததும் ரமணியின் கண்களை நீர் கீறியது. இதயத்தின் ஓரம் அறுபட்டது. ரமணியின் தோளைத் தொட்டார் மல்ஹோத்ரா. “போட்டோவில் இருக்கிறது மிஸஸ் ஹரிஹரன்தானே?” ரமணி தலையசைத்தான். “எனி கிட்ஸ்…?” “நவ் ஷீ ஈஸ் கேரியிங்.” “பாப்ரெ!” நெற்றியைக் கீறிக்கொண்டார். ரமணி, தொண்டையடைக்கிற குரலில் கேட்டான். “பாடி எப்போ கிடைக்கும் சார்?” “இன்னும் போஸ்ட்மார்ட்டம் முடியலை. எப்படியும், பி.எம் முடிஞ்சு உங்க கைக்கு பாடி கிடைக்க சாயந்திரம் ஆறு ... Read More »

நீல நிற நிழல்கள் (5)

“வா நிஷா! வெல்கம்!” என்று சிரித்துக்கொண்டே புகை கசியும் வாயோடு சொன்ன சதுர்வேதியைப் பார்த்து உடம்பின் முக்கியப் பாகங்களில் உடைந்தாள் நிஷா. திக்கித்த விழிகளில் பயம் தத்தளித்தது. சதுர்வேதியின் புன்னகை பெரிதாயிற்று. “உன்னை அப்பவே போகச் சொல்லிட்டேனே?” “டா… டாக்டர்… அது… வந்து….” “பத்திரிக்கை ரிப்போர்ட்டர் வேலை மாத்திரம் இல்லாமல் பார்ட் டைமா துப்பறியும் வேலை கூடப் பார்க்கிறே போலிருக்கு?…” “டா… டாக்டர்… வெளியே மழை அதிகமாயிடுச்சு… அதான்…” “ஒண்டிக்கலாம்னு உள்ளே வந்துட்டியாக்கும்?” சொல்லிக்கொண்டே ஒரு பீரோவின் ... Read More »

நீல நிற நிழல்கள் (4)

கீதாம்பரி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாசிலாமணியும் திலகமும் திணறிக் கொண்டிருக்கும்போதே, ரமணி உதட்டுக்கு ஒரு ரெடிமேட் புன்னகையைக் கொடுத்தபடி அவளை ஏறிட்டான். “ரகசியம் ஒண்ணுமில்லே அண்ணி… அப்பாவுக்கும் எனக்கும் சின்னதா ஒரு சண்டை…” “சண்டையா?” “ம்!” “என்ன சண்டை?” “அப்பா நாளைக்குக் காலையில… கொச்சிக்கு என்னைப் புறப்பட்டுப் போகச் சொல்றார்…” “கொச்சிக்கா… எதுக்கு?” “ஒரு காண்ட்ராக்ட் வேலைக்கு டெண்டர் போட்டிருந்தோம். அந்தக் காண்ட்ராக்ட் நமக்குக் கிடைக்கணும்னா, அங்கே இருக்கிற ஒரு அரசியல் புள்ளியைப் பார்த்து லஞ்சம் ... Read More »

நீல நிற நிழல்கள் (3)

டாக்டர் சதுர்வேதி, பீரோவுக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் நிஷாவின் இதயத்துடிப்பு உச்சபட்சத்துக்குப் போய், நடுமுதுகில் வியர்வைக் கால்வாய் ஒன்று ‘திடும்’ என்று உற்பத்தியாகி உள்ளாடையை நனைத்தது. மூச்சு விடுகிற சத்தத்தைக் கூட டாக்டர் உணர்ந்துவிடாமல் இருப்பதற்காகத் தன் வாயையும் மூக்கையும் சேர்த்து வலது கை விரல்களால் அழுத்திக் கொண்டாள். டாக்டர், பீரோவை அகலமாகத் திறந்து வைத்துக் கொண்டு எதையோ கிளறிப் பார்த்துக்கொண்டிருக்க… ஆர்யா, காம்பெளண்ட் கதவை உட்பக்கமாகப் பூட்டிவிட்டு வாசல் கதவைச் சாத்திவிட்டு அறைக்குள் நுழைந்தாள். “டாக்டர்!” ... Read More »

நீல நிற நிழல்கள் (2)

ரமணியின் கையில் இருந்த டெலிபோன் ரிஸீவர், ஓர் உயிருள்ள ஜந்து மாதிரி நடுங்கியது. மனசுக்குள் பிரளயம் நடந்து கொண்டிருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அண்ணிக்கு விஷயம் தெரிந்து விடக்கூடாதே என்கிற பதைபதைப்பில் உதட்டில் புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டான். டெலிபோனில் தொடர்ந்து பேசினான். “தகவல் கொடுத்ததற்கு நன்றி!” “எப்போது வருகிறீர்கள்?” “உடனே!” “தாமதம் செய்துவிடாதீர்கள்! அடுத்த விமானம் பிடித்துப் புறப்பட்டு வாருங்கள்!” “சரி… சரி!…” ரமணி ரிஸீவரை வைத்தான். மாசிலாமணி கேட்டார், “போன் பம்பாயில் இருந்துதானே?” “ஆ… ... Read More »

நீல நிற நிழல்கள் (1)

அரபிக்கடலுக்கு வடமேற்கே ஐந்நூறு கிலோ மீட்டர் தூரத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த புயல் சின்னம் அங்கிருந்தபடியே பம்பாயை மிரட்டிக்கொண்டிருந்தது. ஆகாயம் பூராவும் அழுக்கு மேகங்கள் திம்மென்று சூழ்ந்து கொண்டு ஒரு பெரிய அழுகைக்குத் தயாராயின. அது ஒரு ஆகஸ்ட் மாத ஞாயிற்றுக்கிழமை. சாயந்திர ஐந்து மணி. மேகங்கள், மேற்குத் திசை அஸ்தமனச் சூரியனை ‘கேரோ’ பண்ணியிருக்க… பம்பாயின் எல்லாத் திசைகளிலும் செயற்கை இருட்டு ஈஷியிருந்தது. காற்றில் செல்லமாய் ஊட்டிக் குளிர். விலேபார்லே ரயில்வே ஸ்டேஷனிலிருந்து வெளிப்பட்டாள் நிஷா. ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி.6

1996 – உலக கோப்பை 1996ம் ஆண்டு உலககிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்தது குட்டித் தீவான இலங்கை. 1987க்குப் பிறகு 1996ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த உலகக்கிண்ணத் தொடர் ஆரம்பத்திலேயே சர்ச்சையில் சிக்கிக்கொண்டது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 1996ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் இலங்கையில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மறுத்துவிட்டன. தொடர் தொடங்குவதற்குச் ... Read More »

பேய் இருக்கா?… இல்லையா?

ஆங்கிலத்திலும் சரி… தமிழிலும் சரி… நாமும் இதுவரை எத்தனையோ பேய் சினிமாக்களையும், சீரியல்களையும் நாவல்களையும் பார்த்தாகிவிட்டது… படித்தாகிவிட்டது… சரி… பேய் இருக்கா?… இல்லையா?… என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு… உலகம் முழுக்க பல நூறு ஆண்டா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிற விஷயமிது… திடீருனு இதுக்கு நான் மட்டும் பதில் சொல்லி பல்பு வாங்கிரமுடியுமா என்ன?… ஆனா ஒன்னுங்க… பேய் இருக்குதோ இல்லையோ…  சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் பேய்க்கதைகள்னாலே ஒருமாதிரி உடம்பு சிலிர்த்துக்கிட்டு பயந்துகிட்டே கேட்டுட்டு… ... Read More »

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு பகுதி. 5

1992 – உலக கோப்பை வண்ணமயமான உலகக் கோப்பை 5–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1992–ம் ஆண்டு ஆஸ்திரேலியா–நியூசிலாந்து நாடுகள் முதல் முறையாக இணைந்து நடத்தின. இது தான் கலர்புல்லாக ஜொலித்த உலக கோப்பை ஆகும். அதாவது வீரர்கள் வெள்ளை நிற உடையில் மாறி முதல்முறையாக பெயர் பொறிக்கப்பட்ட வண்ண சீருடைக்கு மாறினர். அத்துடன் பல புதுமைகளும் இந்த உலக கோப்பையில் புகுத்தப்பட்டது. முதல் முறையாக வெள்ளை நிற பந்து பயன்படுத்தப்பட்டது. மின்னொளியின் கீழ் பகல்–இரவு ஆட்டங்களும் முதல் ... Read More »

Scroll To Top