ஸிம்பாப்வேயை சேர்ந்த பெண்ணொருவர் தவளையொன்றை பிரசவித்துள்ளதாக கூறுகிறார். 30 வயதான நொன்செபா என்கியுப் எனும் இப்பெண் சுமார் 10 மாத கால கர்ப்பத்தின் பின் இத் தவளையை பிரசவித்ததாக கூறப்படுகிறது.
புலவாயோ நகரைச் சேர்ந்த இப்பெண் ஒரு வர்த்தகராவார். பல்வேறு நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.
இப்பெண் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் இவரின் வயிற்றில் மனிதக் குழந்தைக்கு பதிலாக வித்தியாசமான உயிரினமொன்று வளர்வதாக மதகுரு ஒருவர் கூறியிருந்தாராம்.
அதனால் இப்பெண் தங்கியிருந்த உள்ளூர் வைத்தியசாலையொன்றில் தேவாலயமொன்று அவருக்காக விசேட பிரார்த்தனையொன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இப்பிரார்த்தனை நடைபெற்றதை மதகுரு ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த விசித்திர பிரசவத்துக்குப் பின்னர் நொன்செபாவும் அவரின் கணவரும் சிகிச்சைக்காக தென் ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளரெனத் தெரிவிக்கப்படுகிறது.